Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விலங்குகள் மத்தியில் தோன்றும்.. மிக மோசமான உருமாறிய கொரோனா.. பீதியை கிளப்பும் புதிய ஆய்வு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: விலங்குகள் மத்தியில் மீண்டும் ஒரு மோசமான உருமாறிய கொரோனா தோன்றி, அது மீண்டும் மனிதர்களுக்குப் பரவ வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கருதுவதால், வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு வேக்சின் போடுவது குறித்து ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மற்ற வைரஸ்களுடன் ஒப்பிடுகையில் புதியதொரு வைரஸ் என்பதால், அது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் புதிது புதிதாக கொரோனா உருமாறிக் கொண்டே இருக்கும் போது இந்த ஆய்வுகள் முக்கியமானதாக மாறியுள்ளது.

குறிப்பாக மனிதர்களிடம் இருந்து விலங்குகள் மத்தியில் வைரஸ் பாதிப்பு மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பூனைகளுக்கு கொரோனா

பூனைகளுக்கு கொரோனா

குறிப்பாக, கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவின் வூஹான் நகரில் பூனை ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இது மட்டுமின்றி, சில குறிப்பிட்ட நிலைகளில் கொரோனா பாதிப்பு ஒரு பூனையிலிருந்து மற்றொரு பூனைக்குப் பரவுவதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அதன் பிறகு இதுபோல டென்மார்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் பூனைகள் மத்தியில் வைரஸ் பாதிப்பு உறுதினாது.

மிகப் பெரிய சவால்

மிகப் பெரிய சவால்

இது மட்டுமின்றி சென்னை வண்டலூர் பூங்கா உள்ளிட்ட சில இடங்களில் புலி, சிங்கம் போன்ற விலங்கள் மத்தியிலும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால் சில இடங்களில் விலங்குகளை பராமரிக்கும் ஊழியர்களுக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும், மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கும் வைரஸ் பரவல் எளிதாக ஏற்படும்பட்சத்தில், கொரோனாவை கட்டுப்படுத்துவது மிகப் பெரிய சவாலாகிவிடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

மனிதர்களுக்குப் பரவுமா

மனிதர்களுக்குப் பரவுமா

இப்படி நடந்தால், நாம் வீடுகளில் வசிக்கும் அனைத்து பூனைகளுக்கும் வேக்சின் போட வேண்டும், அதனைத் தனிமையும் படுத்த வேண்டும். ஆனால், நல்வாய்ப்பாக இதுவரை மனிதர்களிடம் இருந்தே பூனைகளுக்கு கொரோனா பரவியுள்ளது. பூனையிடம் இருந்து மனிதருக்கு கொரோனா பரவியதாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே இது ஒரு நல்ல விஷயம். அதாவது தற்போது வரை பூனை அல்லது நாய்கள் மூலம் நமக்கு கொரோனா பரவ வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

மிகப் பெரிய ஆபத்து

மிகப் பெரிய ஆபத்து

ஆனால், இது எத்தனை காலத்திற்கு நீட்டிக்கும் என உறுதியாகத் தெரியவில்லை. ஏனென்றால், ஆய்வாளர்கள் புது விதமான ஆபத்து குறித்தும் எச்சரிக்கின்றனர். அதாவது மனிதர்களிடம் இருந்து பூனை அல்லது விலங்குகளுக்குப் பரவும் வைரஸ், அதிதீவிர கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும் வகையாக உருமாற வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கின்றனர். இது மீண்டும் மனிதர்களுக்குப் பரவும்போது, அதனைக் கட்டுப்படுத்துவது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

விலங்குகளுக்கு வேக்சின்

விலங்குகளுக்கு வேக்சின்

இது குறித்த ஆய்வுகள் தற்போது தான் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, வரும் காலத்தில் இது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தற்போது இருக்கும் சூழலில் விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளில் செல்லப் பிராணிகளுக்கு வேக்சின் போடும் பணி தொடங்கப்பட்டுவிட்டாலும், அது பெரியளவில் நடைபெறவில்லை.

Recommended Video

    மீண்டும் அதிகரிக்கும் Coronavirus.. தடுக்க முடியாமல் விழிபிதுங்கும் China
    எப்போது

    எப்போது

    தற்போதைய சூழலில் விலங்குகளுக்கு அதிகளவில் வேக்சின் போடும் பணிகள் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களில் குறிப்பிட்ட சதவிகிதம் பேருக்கு வேக்சின் போட்ட பின்னரே விலங்குகளுக்கு வேக்சின் போடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அது புதிய வேக்சினாக இருக்கலாம் அல்லது ஏற்கனவே தற்போது மனிதர்களுக்கு அளிக்கும் வேக்சிகளிலேயே ஒன்றாகக் கூட இருக்கலாம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+