இளம்பெண்ணை காவு வாங்கிய கல்லட்டி! அடுத்தடுத்து பலியான ஐடி பெண்கள்! என்ன நடக்கிறது அந்த பங்களாவில்?

Subscribe to Oneindia Tamil

உதகை : நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் செல்பி எடுக்க முயன்ற போது ஆற்றல் தவறு விழுந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தடையை மீறி இளம் பெண்ணை விடுதி நிர்வாகம் சுற்றுலா அழைத்து சென்றதாக புகார் எழுந்துள்ள நிலையில் விடுதி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்..

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த கட்டா வினிதா சவுத்ரி என்பவர், கர்நாடக மாநிலம் பெங்களுரூவில் உள்ள ஐடி நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக வார விடுமுறையை பொழுதுபோக்குடன் கழிப்பதற்காக மலைப்பிரதேசமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல கட்டா வினிதா சவுத்ரி மற்றும் அவரது நண்பர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று கட்டா வினிதா சவுத்ரி மற்றும் அவரது நண்பர்கள் 9 பேர் ஊட்டிக்கு வந்த அவர்கள், ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களை அவர்கள் கண்டு ரசித்ததோடு, கல்லட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு சென்று அவர்கள் தங்கியதாகக் கூறப்படுகிறது.

ஐடி பெண் ஊழியர்

ஐடி பெண் ஊழியர்

நேற்று மாலை வினிதா சவுத்ரி மற்றும் அவரது நண்பர்கள் ஊட்டியில் பல இடங்களை சுற்று பார்த்துவிட்டு கல்லட்டி ஆற்றை பார்ப்பதற்காக கும்பலாகச் சென்றுள்ளனர். கல்லட்டி செல்லும் சாலையில் இருபதாவது கொண்டை ஊசி வளைவு அருகே ஆற்றங்கரையோரம் ஒரு கல்லில் உட்கார்ந்து நதியின் அழகை கண்டு ரசித்ததோடு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து செல்பி எடுத்துள்ளனர். அப்போதுதான் அதிர்ச்சி தரும் ஒரு சம்பவம் அரங்கேறியது தற்போது நீலகிரியில் பெரும் மழை பெய்து வரும் நிலையில் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. செல்பி எடுக்கும் போது நிலை தடுக்க ஆற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார்

ஆற்று வெள்ளம்

ஆற்று வெள்ளம்

தங்களுடன் பழகிய தோழி ஆற்றில் அடித்து செல்வதை பார்த்து அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற அவரது தோழர்கள் அவ்வழியாக சென்றவர்களிடம் உதவி கேட்டு கதறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த புது மந்து காவல் நிலைய போலீசார் மற்றும் உதகை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் கள்ளட்டி ஆற்றுப்பகுதிக்கு வந்து நடந்தது குறித்து விசாரித்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் நதிக்குள் இறங்கி வினிதாவை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆகியும் அவரை மீட்க முடியாததால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

2வது நாளாக மீட்பு பணி

2வது நாளாக மீட்பு பணி

இந்த நிலையில் ஐடி ஊழியர் வினிதாவை மீட்கும் பணி இரண்டாவது நாளாக தொடங்கியது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் கள்ளட்டி யாரு செல்லும் சிகுர் வனப்பகுதி முதல் பவானிசாகர் வரை இந்த ஆறு செல்வதால் அதில் இரண்டு குழுவாகப் பிரிந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஒரு மீட்பு குழுவினர் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் இருந்து ரைசன் வேலி வரையிலும் மற்றொரு பிரிவினர் ஆற்றங்கரையோர பகுதிகளிலும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நீண்ட நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு வினிதா சவுத்ரி சடலம் மீட்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள.

போலீசார் தீவிர விசாரணை

போலீசார் தீவிர விசாரணை

இந்நிலையில் வினிதாவின் மரணம் குறித்து அவரது நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் சுற்றுலாப் பயணிகளை தடையை மீறி தங்கும் விடுதியில் நிர்வாகம் கல்லட்டி நீர் வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. அப்பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறிய விடுதியில் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கல்லட்டி சாலையில் உள்ள பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்த விபத்தில் ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த நிலையில் தற்போது மற்றொரு ஐடி பெண் ஊழியர் ஆற்றில் தவறி விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+