காங்கிரசுக்கு சப்போர்ட்டா? சட்டென சட்டசபைக்கு கருப்பு புடவையில் வந்த வானதி.. வியந்த காங்கிரஸ்.. ஏன்?
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து வந்தனர். பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் கருப்பு உடையில் வந்தார் .
காங்கிரஸ் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. கர்நாடகாவில் 2019 தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி மோடி என்ற பெயரை பயன்படுத்தி அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்துள்ளார். இனி அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்டதாகவும், வயநாடு தொகுதி காலி ஆகிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கருப்பு உடை
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து வந்தனர். ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக இந்த போராட்டம் செய்யப்படுகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று கருப்பு உடை அணிந்தபடி அவைக்கு வந்தனர். இரவிலும் சட்டசபையிலும் போராட்டம் செய்வோம் என்றும் காங்கிரஸ் எம்பிக்கள் அறிவித்து உள்ளனர். இந்திய ஜனநாயகத்தில் இருளான காலத்தில் நாம் இருக்கிறோம். ராகுலை தகுதி நீக்கம் செய்தது தவறு. அதை தேசிய அளவில் நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.

வானதி சீனிவாசன்
இந்த நிலையில் சட்டசபையில் திடீரென வானதி சீனிவாசன் எம்எல்ஏ கருப்பு உடை அணிந்து வந்தது பெரிய சர்ச்சையானது. கருப்பு புடவையில் அவர் வந்து இருந்தார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடையில் வந்த நிலையில் அவர்களுடன் வானதி சீனிவாசனும் கருப்பு உடையில் வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. என்ன இவர் ராகுல் காந்திக்கு சப்போர்ட்டா என்ற விவாதம் திடீரென சட்டசபையில் எழுந்தது. ஆனால் வானதி சீனிவாசன் சிரித்தபடியே அவைக்கு வந்தார்.

எதிர்பார்க்கவில்லை
இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடையில் வருவார்கள் என்பதை வானதி எதிர்பார்க்கவில்லை. அவருக்கு இந்த விஷயமே தெரியாது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடையில் வருவது அறியாமல் வானதியும் கருப்பு புடவையில் வந்தார். ஆனால் அவர் சிரித்தபடி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பேசிவிட்டு சென்றார். அரசியல் ரீதியாக இரண்டு தரப்பிற்கும் கடும் மோதல் இருந்தாலும் கூட இன்று நடந்த இந்த சம்பவம் அங்கே சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

நாடாளுமன்றம்
இன்று சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் ராகுல் காந்தி விவகாரம் பற்றி பேச அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் ராகுல் தகுதி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் காரணமாக லோக்சபா, ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்ட நிலையில், அங்கு பணிகள் முடங்கின. ராகுல் காந்தி எம்பி பதவி பறிப்புக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் காட்டமாக முழக்கம் செய்தனர். இதனால் லோக்சபா, ராஜ்யசபா தொடங்கிய 4 வினாடிகளிலேயே மாலை 4 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 2 நாட்கள் விடுமுறைக்கு பின் கூடிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கிய உடனே முடங்கின. இன்னொரு பக்கம் ராஜ்ய சபா தொடங்கிய ஒரு நிமிடத்தில் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
-
அண்ணாமலையை "ஓவர்லுக்" செய்ததா டெல்லி? பாஜக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான பெயர்! ஆட்டம் குளோஸா? -
செல்வப்பெருந்தகை தூக்கப்படுகிறாரா? ராகுலுக்கு போன "ரகசிய ஆதாரம்" அடுத்ததாக அந்த கட்சியில் இணைகிறாரா? -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications