நகரும் "ஸ்வீட் பாக்ஸ்?".. சிக்னலும் வந்தாச்சு.. பரபர அமமுக.. "சம்பவம்" செய்ய போகும் எடப்பாடி.. பலே
எடப்பாடி பழனிசாமியின் பேட்டி குறித்து டிடிவி தினகரன் சொல்ல வருவது என்ன
சென்னை: டிடிவி தினகரன் ஒரு ரூட் பிடித்தால், எடப்பாடி பழனிசாமி வேறு ஒரு ரூட்டை பிடித்து, பாஜக மேலிடத்தை தொடர்ந்து அதிர வைக்கிறாராம்.. அரசியல் களமே பரபரப்பாகி கிடக்கிறது.
2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, ஒரு சதவீதம்கூட, கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, தினகரனும் பதிலடி தந்தார்.. "எந்தக் காலத்திலும் எடப்பாடியை ஒரு கட்சி தலைவராக நாங்கள் கருதவில்லை. அதற்கான தகுதியும் அவருக்கு இல்லை. அவருடன் கூட்டணி என்பது காலரை சதவீதம் கூட இல்லை. கூட்டணிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு எடப்பாடி பெரிய ஆள் இல்லை. பதவிக்காகக் காலில் விழும் வம்சத்தில் வந்தவர்கள் இல்லை நாங்கள் என்று கூறியிருந்தார்.

CR சரஸ்வதி
இந்த இரு தலைவர்களின் அடுத்தடுத்த பேட்டிகள் தமிழக அரசியலை பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. நேற்றைய தினம் நம் ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷல் பேட்டி தந்திருந்த அமமுகவின் சிஆர் சரஸ்வதி, என்னைக்குமே அமமுக, அதிமுகவுடன் போய் சேரும் என்று சொன்னதே கிடையாது.. மத்தியில் இருக்கக்கூடிய கட்சியுடன் கூட்டணி என்று சொல்லி உள்ளார்.. அதாவது காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி என்று சொல்லி உள்ளார்.. காலத்தின் கட்டாயப்படி, யாரிடம் கூட்டணி நேருமோ அவர்களிடம் சேருவோம்.. ஒருவேளை இரு கட்சிகளுடன் கூட்டணி அமையாவிட்டாலும் தனித்து அமமுக தேர்தலை சந்திக்கும் என்றும் எங்கள் பொதுச்செயலாளர் சொல்லி விட்டாரே என்று கூறியிருந்தார்.

கால்% கூட
உண்மையிலேயே அமமுகவின் நிலைப்பாடு என்ன? என்னதான் திட்டம் வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து நாம் சில அரசியல் ஆலோசகர்களிடம் பேசினோம்.. அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இதுதான்: "தினகரனை பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமியின் பேட்டி அதிர்ச்சி தரக்கூடியதுதான்.. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் இருந்தே மறைமுக அழைப்பையும், இணைப்பையும் அதிமுகவுக்கு விடுத்து வருகிறார்.. எடப்பாடி என்ற பெயரை மட்டும் சொல்லவில்லையே தவிர, மற்றபடி கூட்டணிக்கு 2 வருட காலமாகவே தயாராக இருக்கிறார்.. இப்போதுகூட, கால்சதவீதம்கூட எடப்பாடியுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டாரே தவிர, எடப்பாடியை வழிக்கு கொண்டு வரும் முயற்சியில்தான், இறங்கி உள்ளார்.

அறுவடை
பாஜக தன்னை முழுமையாக நம்புவதை உணர்ந்துள்ள தினகரன், தன் கட்சியையும், வாக்குசதவீதத்தையும் பலப்படுத்தி வைத்து கொள்ளவே விரும்புகிறார்.. எம்பி தேர்தலுக்குள் இதை தயார் செய்தால்தான், சட்டசபை தேர்தலின்போது தமிழகத்தின் 2வது பெரிய கட்சியாக உருவெடுக்க முடியும் என்று நம்புகிறார்.. ஒருபக்கம் திமுக அரசின் அதிருப்திகளை வாக்குகளாக அறுவடை செய்துகொண்டே, அதிமுகவின் எடப்பாடி தலைமையை விரும்பாத வாக்குகளையும் அள்ள கணக்கு போடுகிறார்.. இதற்கு டெல்லி மேலிடம் முழு சப்போர்ட்டையும் தந்துள்ளதாகவே தெரிகிறது.. வைட்டமின் ப உட்பட, பல்வேறு விஷயங்களில் உறுதுணையாக இருக்க போவதாக பச்சை கொடியை காட்டியுள்ளதாம்.

வைட்டமின் ப
அதற்கு அச்சாரமாகத்தான், வெப்சைட் துவக்கி உள்ளது, தொடர்ந்து மீடியாவில் பேட்டி தருவது, கூட்டணி பேச்சை சிதறவிடுவது, என அதிரடியில் இறங்கி இருக்கிறார் என்கிறார்கள்.. இதனால், எடப்பாடி பழனிசாமியின் வெற்றிக்கு தடை போடுவதுடன், வாக்கு வங்கியும் அதிகப்படுத்தி, அதன்மூலம் எம்பிக்களையும் பெற்று, தனனுடைய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றே நம்புகிறார்.. தன் தரப்பு முயற்சி ஒருபக்கம் இருந்தாலும், பாஜக மேலிடம் அவ்வளவு எளிதாக எடப்பாடியை விட்டுவிடாது, தன் வழிக்கு கொண்டுவந்துவிடும் என்பதே அமமுகவினரின் நம்பிக்கையாவும் இருக்கிறது.

3வது டீல்
ஆனால், கடந்த முறையே, சீமானுடன் சேர்ந்து தினகரனும் வாக்குகளை பிரித்து விட்டதை எடப்பாடி அறியாமல் இல்லை.. ஒருகுறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளை பெறுவதற்காக, தினகரனுடன் கை கோர்த்தால், அது தன் எதிர்கால அரசியலையே கேள்விக்குறியாக்கிவிடும் என்பதையும் எடப்பாடி யோசிக்கவே செய்கிறார்.. தென்மண்டலங்களில் செல்வாக்கை பெறுவதற்கோ, ஆதரவை பெறுவதற்கோ வேறு வழியான வியூகங்களை கையில் எடுப்பாரே தவிர, ஓபிஎஸ், டிடிவி இருவரையும் இணைத்து கொள்ளும் முடிவில் இல்லை.. ஆனால், தென்மண்டலங்களில் தன் பலத்தை நிரூபிக்க முடியும் என்ற உத்தரவாதத்தை, மேலிடத்துக்கு எப்படி தருவார்? என்பதுதான் தெரியவில்லை என்கிறார்கள்..

51 ஜோடி
எப்படி பார்த்தாலும், டிடிவி தினகரனின் அரசியல் வேகமெடுத்து விட்டது.. எடப்பாடி இப்படியே பிடிவாதம் பிடித்தால், தினகரனின் தலைமையிலும் கூட்டணி தலைமை உருவாகலாம் என்கிறார்கள். அதேபோல எடப்பாடியும், விரைவில் மதுரை செல்லவிருப்பதாகவும், முக்குலத்தோரின் கவனத்தை திசை திருப்பும் அளவுக்கு முக்கிய சம்பவம் ஒன்றை செய்ய போவதாகவும் தெரிகிறது.. ஆர்பி உதயகுமார் மகள் திருமண நிகழ்வின்போது, குன்னத்தூரில் 51 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் திருமணம் செய்து வைக்க போகிறாராம்.. இப்படி அடுத்தடுத்த வியூகங்களை கையில்எடுத்து, முக்குலத்தோர் மனதில் இடம்பிடிக்கவும் எடப்பாடி முயற்சித்து வருகிறார் என்கிறார்கள்.

தகர்கிறது
மற்றொருபக்கம், அதிமுக தலைமையில் கூட்டணி வியூகங்களும் மெல்ல மெல்ல வகுக்கப்பட்டு வருகிறதாம்.. பாமக + தேமுதிக + கம்யூனிஸ்ட்கள் + காங்கிரஸ் என பாஜக நீங்கலாக கூட்டணி அமைந்தால் எப்படி இருக்கும் என்ற கணக்குகளும் போடப்பட்டு வருகிறதாம்.. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி, அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக, அதிமுகவின் ஐடி விங் தரப்பில் இருந்தே செய்திகள் கசிய விடுவதாகவும், சொல்கிறார்கள்.. எப்படி பார்த்தாலும், திமுக அரசு மீதான அதிருப்திகளை, எடப்பாடி தலைமையில் அமைய போகும் கூட்டணி பயன்படுத்தி கொள்ள முனைவதால், இதை முந்திக் கொள்ள பார்க்கிறதாம் பாஜகவும், அமமுகவும்.. என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!!
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications