முகப்பு| திருக்குறள்| வாய்மை| புறந்தூய்மை நீரா னமையும் திருக்குறள்

புறந்தூய்மை நீரா னமையும் திருக்குறள்

அதிகாரம்

குறள் விளக்கம்

298
புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்

புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

— மு. வரதராசன்

நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்

— மு. கருணாநிதி

உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.

— சாலமன் பாப்பையா

புறவுடலின் தூய்மை நீராலே ஏற்படும்; உள்ளத்தின் தூய்மையானது, ஒருவன் வாய் திறந்து சொல்லும் அவனது வாய்மையாலே அடையப்படும்

— புலியூர்க் கேசிகன்

வெளிச்சுத்தம் தண்ணீரால் ஏற்படும் உள்ளே உள்ள உள்ளத்தின் சுத்தம் வாய்மையால் அறியப்படும்.

— சிவயோகி சிவகுமார்

உடம்பு தூயதாதல் நீரினாலே யமைந்து விடும்: மனத்தின் தூய்மை மெய்சொல்லுதலினாலே யறியப்படும்.

— மணக்குடவர்

புறம் தூய்மை நீரான் அமையும் - ஒருவனுக்கு உடம்பு தூய்தாந் தன்மை நீரானே உண்டாம்: அகம் தூய்மை வாய்மையான் காணப்படும். - அதுபோல, மனம் தூய்தாந் தன்மை வாய்மையான் உண்டாம். "(காணப்படுவது உளதாகலின் , 'உண்டாம்' என்று உரைக்கப்பட்டது. உடம்பு தூய்தாதல்: வாலாமை நீங்குதல்: மனம் தூய்தாதல் மெய்யுணர்தல். புறம் தூய்மைக்கு நீரல்லது காரணம் இல்லாதாற் போல, அகம் தூய்மைக்கு வாய்மையல்லது காரணம் இல்லை என்பதாம். இதனானே, துறந்தார்க்கு இரண்டு தூய்மையும் வேண்டும்" என்பதூஉம் பெற்றாம்.).

— பரிமேலழகர்

English Couplet: Outward purity the water will bestow;
Inward purity from truth alone will flow.

Couplet Explanation: Purity of body is produced by water and purity of mind by truthfulness.

Transliteration (Tamil to English): puRaLthooimai neeraan amaiyum aganthooimai vaaimaiyaal kaaNap padum

1 2 3 ... 29 30 31 ... 132 133

திருக்குறள் அதிகாரங்கள்

பிரபலமான அதிகாரம்

அதிகம் பார்க்கப்பட்ட / பிரபலமான அதிகாரங்கள்
  1. கல்வி
  2. நட்பு
  3. அன்புடைமை
  4. கடவுள் வாழ்த்து
  5. இறைமாட்சி

பிரபலமான குறள்

அதிகம் பார்க்கப்பட்ட / பிரபலமான குறள்கள்
  1. எண்ணென்ப...
  2. இடும்பைக்...
  3. கற்க...
  4. தெய்வத்தான்...
  5. தொழுதகை...

குறளில் பல முறை தோன்றிய சொல்

குறள்களில் அதிக முறை பயன்படுத்தப்பட்ட சொற்கள்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்

ஒரே சொல்லில் தொடங்கும் பல குறள்கள்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்

ஒரே சொல்லில் முடியும் பல குறள்கள்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+