For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டு

By Staff
Google Oneindia Tamil News

Jallikattuமாட்டுப் பொங்கலன்று ஜல்லிக்கட்டு என்ற வீர (சற்றே ஆபத்தான) விளையாட்டு கிராமங்களில் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. இதில்புகழ்பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.

ஜல்லிக்கட்டு விளையாட்டில் முரட்டுக் காளை மாடுகள் பல ஊர்களிலிருந்தும் அழைத்து வரப்படும். சிலர் காளைகளை ஜல்லிக்கட்டுக்கென்றே வளர்த்துப்பழக்கப்படுத்துவதும் உண்டு.

காளைகள் மேள தாள சத்தங்களுக்கிடையே விளையாட்டுக்கென உள்ள மைதானத்தில் (கிரவுண்ட்) விரட்டி விடப்படும். மாட்டின் கழுத்தில் பணமுடிப்புகட்டப்பட்டிருக்கும். மாட்டை அடக்கி பிடிக்கும் இளைஞர்கள் அந்த பண முடிப்பை எடுத்துக் கொள்ளலாம். சில சமயம் மாட்டின் கழுத்தில் பண முடிப்புடன்தங்கச் சங்கிலியும் கட்டப்பட்டிருக்கும்.

Jallikattuமாட்டை கோபப்படுத்தவதற்கென்று தாரை, தப்பட்டைகள் முழக்கப்படும். வாத்திய ஓசைகளை கேட்டு காளைகள் மூர்க்கமாக ஓடத் துவங்கும்.காளையை அடக்குவதெற்கென்று பல இளைஞர்கள் போட்டி போடுவர். இந்த வீர விளையாட்டின் போது காளைகள் முட்டி பலர் படுகாயமடைவதும், சிலர்இறப்பதும் சகஜமானது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இதைக் காண உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அலங்காநல்லூர் வருகிறார்கள்.இதற்காக அலங்காநல்லூர் களை கட்டியிருக்கும். தமிழக அரசின் சுற்றுலாத் துறை பல சிறப்பு ஏற்பாடுகளையும் செய்திருக்கும்.

அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு போல, சிறப்பு பெற்றது சிறாவயல் ஜல்லிக் கட்டு. புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு கிராமம்தான் சிறாவயல்.இங்கும் அலங்காநல்லூர் போல வெகு விமரிசையாக காளை அடக்குதல் நடைபெறும்.

முன்பெல்லாம், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீர இளைஞர்களுக்கு காளையை வளர்த்தவர்கள் தங்கள் மகளை மணம் செய்து கொடுக்கும் வழக்கமும்இருந்தது (இப்போதும் சில இடங்களில் இருக்கிறது).

பல பெண்கள் தங்கள் கணவனை ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரர்களிலிருந்து தேர்வு செய்வதும் நடந்து வந்தது.

Jallikattuசீறி வரும் காளையை அடக்குவது வீரமாக கருதப்படுகிறது. அதே சமயம் அதற்கு எதிர்ப்பும் கிளம்பாமல் இல்லை. வாயில்லா மிருகத்தை கொடூரமாகஅடக்குவது, மிருக வதை என்று பிராணிகள் நல விரும்பிகள் கூறுகிறார்கள். இதைத் தடை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் குரல் எழுப்பிவருகிறார்கள்.

என்னதான் எதிர்ப்பு கிளம்பினாலும், மாடுகளின் திமிறும் தோள்களை, வீரத்துடனும், துணிச்சலுடனும் உயிரைப் பணயம் வைத்து அடக்கும் "காளைகளின்காதுகள் அதைப் பொருட்படுத்துவதில்லை என்பது ஜல்லிக் கட்டு நிகழ்ச்சிகளுக்கு இன்றும் இருந்து வரும் ஆதரவு நிரூபித்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X