• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று ஸ்ரீராம நவமி

By Staff
|

ஸ்ரீராம நவமி எப்படி வந்தது?:

ஸ்ரீராம நவமி என்பது சக்ரவர்த்தித் திருமகனான, திருமாலின் தசாவதாரங்களில் ஒன்றான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அவதரித்த நாளை கொண்ாடாடும்பண்டிகையாகும்.

ஸ்ரீராமநவமி, ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் வளர்பிறையில் நவமிதிதிதியில், புன்ர்பூச நட்சத்திர தினத்தன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு02.04.2001, திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமர் ஜனித்த நடசத்திரம் புனர்பூச நட்சத்திரம்.

ஸ்ரீராமர் அயோத்தியை ஆண்டு வந்த தசரத சக்கரவர்த்திக்கு முதல் மகனாக பிறந்தவர். ஸ்ரீராமர் அவதார புருஷர்.

ஸ்ரீராமர் பிறந்ததற்கும் புராண கதைகள் உள்ளன. இரண்டு புராண கதைகள் கூறப்பட்டுவருகின்றன.

புராணக்கதை 1:

தசரத சக்கரவர்த்திக்கு குழந்தை பாக்கியமில்லை இல்லை. (இவருக்குபுத்திரபாக்கியம் கிடையாதுஎன்ற சாபம் இருந்ததாக கூறப்படுகிறது). இவர் ஒருமுறை வேட்டைக்குசென்றபோது, ஒரு வயதான ரிஷி தம்பதிகளின் ஒரே மகனை கொன்று விட்டார்.

தனது பார்வையற்ற வயதான தாய், தந்தையரை சுமந்து சென்று கொண்டிருந்தார்இளைய ரிஷி. அவர் தனது பெற்றோர்களின் தாகத்தை தணிக்க நீர் முகர்வதற்காகஅருகிலிருந்த நீர்நிலைக்கு சென்றார்.

தனது பெற்றோர்களை மரத்தடி நிழலில் தங்க வைத்து விட்டு ரிஷி குமாரர் நீர்நிலையில் நீர் முகர்ந்து கொண்டிருந்தார். அவர் பாத்திரத்தில் நீர் முகர்ந்த சத்தம் யானைநீர் அருந்துவது போல் தசரதர் காதில் விழுந்தது. அந்த திசை நோக்கி அம்பைசெலுத்தினார் தசரதர். அவர் விடுத்த அம்பு குறிதவறாமல் நீர் முகர்ந்து கொண்டிருந்தரிஷிகுமாரரை தைத்தது. அந்த இடத்திலேயே அவர் துடிதுடித்து விழுந்தார்.

தான் வேட்டையாடியது யானைதான் என்ற எண்ணத்தில் யானையை தேடி வந்தார்தசரதர். ஆனால் அவர் ரிஷிகுமாரர் ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ந்தார்.ரிஷி குமாரர் அருகில் சென்றார். ரிஷி குமாரர் என் வயதான பெற்றோருக்காக நீர்எடுக்க வந்தேன் நீர் என்னை கொன்றுவிட்டீர். இனி என் பெற்றோரை யார்காப்பாற்றுவார்கள் என வருந்தியவாறே உயிர் துறந்தார்.

Ram With Deerதசரதர் ரிஷி தம்பதிகளை தேடிச் சென்று தான் செய்த தவறை கூறி வருந்தினார்.வருத்தத்திலும், கோபத்திலும் அவர்கள் தசரதனுக்கு சாபம் அளித்தனர். நாங்கள்புத்திரனை இழந்து புத்திர சோகத்தில் தவிப்பது போல் நீயும் புத்திர சோகத்தில் தவித்துஇறப்பாய் என சாபமிட்டனர்.

தசரதனுக்கு புத்திர பாக்கியம் கிடையாது என்றிருந்த சாபம் இதனால் நீங்கியது.அவருக்கு அவதார புருஷனாக ஸ்ரீராமச்சந்தர மூர்த்தியே புத்திரனாக பிறந்தார்.

ஆனால் கைகேயி கேட்ட வரன் காரணமாக ராமரை காட்டுக்கு அனுப்பி மகனைஇழந்து, ரிஷி தம்பதிகள் இட்ட சாபம் பலிக்கும் விதமாக தசரதர் புத்திர சோகத்தில்தான்இறந்தார்.

புத்திரபாக்கியம் இல்லாத தசரதச் சக்கரவர்த்திக்கு ஸ்ரீராமர் பிறந்தது இவ்வாறு தான் எனஇந்த கதை கூறுகிறது.

புராணக் கதை 2:

புத்திரபாக்கியம் இல்லாமல் தவித்த தசரதர், முனிவர்கள் கூறியபடி புத்திரகாமேஷ்டியாகம் புரிந்தார். அதில் வந்த யாக பூதங்கள் ( சிலர் இந்திரன் வந்தார் எனவும்கூறுகின்றனர்) பாத்திரம் நிறைய பாயசம் கொடுத்து இந்த பாயசத்தை உனது மூன்றுமனைவிக்கும் சரி சமமாக பங்கிட்டு கொடு. இதைக் குடித்தபின் உனக்கு குழந்தைகள்பிறக்கும் என கூறி மறைந்தனர்.

அதன்படி தனது மனைவிகளான கெளசல்யா, கைகேயி, சுமத்திரை ஆகியோருக்குபாயசத்தை பங்கிட்டு கொடுத்தார். அதை சரியாக பங்கிடாத காரணத்தால்சுமத்திரைக்கு இரண்டு முறை பாயசம் கிடைத்தது. அதனால் சுமத்திரைக்கு இரண்டுகுழந்தைகள் பிறந்தன.

கெளசல்யாவுக்கு ராமரும், கைகேயிக்கு பரதனும், சுமத்திரைக்கு லட்சுமணனும்,சத்ருகனனும் பிறந்தனர்.

ஸ்ரீராமர் அவதார கதை இவ்வாறும் கூறப்படுகிறது.

எது எவ்வாறு இருந்தாலும் ஸ்ரீராமர், அசுரர் குலத் தலைவன் ராவணனை அழிக்கஅவதாரம் செய்தவர் என்பதுதான் முக்கால உண்மை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more