For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோலகாலமாக நடந்தது திருப்பதி ரத உற்சவம்

By Staff
Google Oneindia Tamil News

திருமலை:

திருப்பதி பிரம்மோற்சவத்தில் இன்று (புதன்கிழமை) ரத உற்சவம் மிக கோலாகலமாக நடைபெற்றது. ரதஉற்சவத்தில் நாடு முழுவதிலும் இருந்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Thirupathyதிருமலையில் எழுந்தருளி கேட்ட வரத்தை வழங்கும் கண் கண்ட தெய்வம், கலியுக தெய்வமான வெங்கடஜபதிகோவிலில் வருடா வருடம் இரண்டு பிரம்மோற்சவ விழா நடைபெறும். புராட்டாசி மாதம் ஒரு பிரம்மோற்சவமும்,நவராத்திரியின் போது நவராத்திரி பிரம்மோற்சவம் 9 நாட்களும் நடைபெறும்.

நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவம் நாளை(வியாழக்கினமை) முடிவடைகிறது.

நாள்தோறும் விழாக் கோலம் காணப்படும் திருமலாவில் பிரம்மோற்சவ நாளில் பக்தர்கள் கூட்டத்தை பற்றிகேட்கவா வேண்டும். வியாழக்கிழமை நடைபெற்ற ரத உற்சவத்தில் நாடு முழுவதிலுமிருந்து 70 ஆயிரத்திற்கும்அதிகமான பக்தர்கள் பங்கேற்று தங்கரதத்தை பக்தி பரவசத்துடன் இழுத்தனர். தங்கரத்தில் ஸ்ரீதேவி மற்றும்அலமேலு மங்காவுடன் பெருமாள் வீற்றிருந்தார்.

நாடாளுமன்ற சபாநாயகர் பாலயோகியும் ரத உற்சவத்தில் கலந்து கொண்டு ரதத்தை இழுத்தார். கோவிந்த நாமகோஷத்துடன் பக்தர்கள் ரதத்தை இழுத்தனர்.

கருட சேவை:

இந்த பிரம்மோற்சவத்தில் கருட சேவை விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மிக கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பதி திருமலையில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளிய கருட சேவை நிகழ்ச்சியில் 2 லட்சத்திற்கும்அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் அருள் பெற்றனர்.

பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி உலா வரும் காட்சியை கண்டால் மோட்சம் கிட்டும் என்ற நம்பிக்கைநிலவி வருகிறது. பெருமாளின் வாகனமான கருடனின் கைகளில் பெருமாளின் இரண்டு பாதங்களும் இருக்ககருடவாகன ஊர்வலம் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருடசேவையை காண 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அன்று காலை மோகினி அலங்காரத்தில் பெருமாள் வீதிஉலா வந்தார். அதிகாலையில் பெருமாளுக்கு சகஸ்ரநாமமாலை, லட்சுமி ஆரம், வைரக்கிரீடம் போன்றவை அணிவிக்கப்பட்டு ஜொலிக்கும் அலங்காரங்கள் பெருமாளுக்குசெய்யப்பட்டன.

இரவு கருடவாகன சேவை நடைபெற்றது. பெருமாள் திருவீதி உலா வந்தபோது சாலையில் இரு பக்கங்களிலும்பக்தர்கள் ஏழுமலையானை "கோவிந்தா! எம்பெருமானே கோவிந்தா" என்று பக்த கோஷம் எழுப்பினர்.

கருட வாகனத்திற்கு முன்பு பெண்கள் கோலாட்டம் அடித்த வண்ணம் பாட்டு பாடி வந்தனர்.

2 நாளில் ரூ.70 லட்சம் காணிக்கை

நவராத்த்திரி பிரம்மோற்சவம் நடந்து வரும் திருமலையில் கடந்த 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும்ரூ.70 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது.

கடந்த 20ம் தேதியன்று ரூ.29 லட்சம் காணிக்கை இருந்தது. 21ம் தேதியன்று ரூ.41 லட்சம் காணிக்கை கிடைத்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X