For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பதி பிரம்மோற்சவ விழா நிறைவு

By Staff
Google Oneindia Tamil News

திருப்பதி:

Thirupathy Perumalதிருப்பதி-திருமலையில் கடந்த 9 நாட்களாக கோலகலமாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவ விழா பெருமாளின்பஞ்சலோக விக்கிரகங்களுக்கு புனித நீராட்டு நடைபெற்ற பின் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்தது.

திருமலையில் குடி கொண்டு தன்னை நாடி வரும் கோடானுரகோடி பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை அருளி வரும்அருட்கடலான ஸ்ரீ வெங்கடசலபதி திருத்தலத்தில் பிரம்மோற்சவ விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகநடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 20ம் தேதி கோலகலமாக தொடங்கியது.பிரம்மோற்சவத்தில் கலந்துகொள்வதற்காக 18ம் தேதி அதிகாலை முதலே லட்சக்கணக்கான மக்கள் திருமலையில் வந்து குவியஆரம்பித்துவிட்டனர்.

பெருமாள் கருட வாகனத்தில் காட்சி தரும் கருட வாகன சேவை தினத்தன்று பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாகஇருந்தது.

நேற்று (வியாழக்கிழமை) தேர் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. கொட்டும் மழையையும்பொருட்படுத்தாத ஏராளமான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்று கோஷமிட்டபடி பிரகாரங்களில் தேரைவடம் பிடித்து இழுத்தனர்.

வெள்ளிக்கிழமை காலை பல நூற்றாண்டு கால பழமை வாய்ந்த பெருமாள், தேவியர் ஸ்ரீலஷ்மி, அலமேலுமங்காதாயார் ஆகியோரின் பஞ்ச லோக விக்கிரகங்களுக்கு கோவிலுக்கு அருகில் உள்ள புனித குளமான வராஹசுவாமிபுஷ்கரணியில் புனித நீராட்டு நடைபெற்றது..

விக்கிரங்களுக்கு சக்ரஸ்நானம் என்றழைக்கப்படும் புனித நீராட்டு விழாவை திருமலையின் தலைமை அர்ச்சகர்வேத மந்திரங்கள் முழங்க நடத்தி வைத்தார்.

பெருமாள் புனித நீராடும் போது தாங்களும் நீராடுவதற்காக அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள்வராஹசுவாமி புஷ்கரணியருகே கூடியிருந்தனர்.

பெருமாள் நீராடும் போது நீராடினால் புண்ணியம் என்று கருதப்படுவதால் பெருமாளுடன் சேர்ந்து ஏராளமக்களும்புனித நீராடினர்.

இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X