For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன நிம்மதி தரும் தை மாத சந்திர தரிசனம்..தீராத நோய் தீரும்..ஆயுள் விருத்தியாகும்..

Google Oneindia Tamil News

மதுரை: சந்திரன் மனதின் காரகர். வளர்பிறை சந்திரனை தரிசனம் செய்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும் என்று பெரியவர்கள் கூறியுள்ளனர்.
இன்றைய தினம் சந்திர தரிசனம் கண்டால் தீராத நோய்கள் நீங்கும். தை மாத வளர்பிறை சந்திர தரிசனம் கண்டால் பார்வை கோளாறுகள் நீங்கும்.

சந்திர தரிசனம் கண்டால் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். கோவிலுக்கு சென்று சிவனை தரிசிக்க முடியாதவர்கள் வீட்டில் இருந்தே சந்திர தரிசனம் பார்க்கலாம். வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் பிறைச் சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும்.

சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் ஆயுள் விருத்தியாகும் ஏனெனில் சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இன்றைய தினம் வீட்டில் மாடியில் நின்று மாலையில் வளர்பிறை சந்திரனை மறக்காமல் தரிசனம் செய்யுங்கள்.

சிவபெருமான் தன் தலையில் பிறைச் சந்திரனையே சூடி "சந்திர மௌலீஸ்வரராக" காட்சி தருகின்றார். எனவே இந்த வளர்பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல. பரமேஸ்வரனின் திருமுடியை நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம். வளர்பிறை சந்திரனை தரிசிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Chandra Dharisanam Today: What is the benefits for Thai matha chandra dharisanam

சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும். சந்திரனே மனதிற்கு அதிபதி. சரீர பலம், மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும்.

சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் நோய்கள் நீங்கும் ஆயுள் விருத்தியாகும். சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் அமையாது. எனவே ஜாதகத்தில் சந்திரன் லக்னத்திற்கு 6,8,12ஆம் வீடுகளில் மறைவு பெற்றோ, விருச்சிகத்தில் நீசம் பெற்றோ அல்லது சனி,ராகு, கேது போன்ற அசுப கிரஹங்களுடன் சேர்ந்தோ இருந்தால் சந்திர தரிசனம் செய்து வணங்குவது தோஷம் போக்கி ஆயுளை விருத்தியாக்கும். இன்றைய தினம் துவிதியை நாளில் மாலையில் சந்திரதரிசனம் என்று அழைக்கிறார்கள். பிறைச் சந்திரனை பார்த்தல் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

Chandra Dharisanam Today: What is the benefits for Thai matha chandra dharisanam

மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூர்ண அருளைப் பெறலாம். ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும்.

ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள‌ அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் ஆகியோர் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.

Chandra Dharisanam Today: What is the benefits for Thai matha chandra dharisanam

சந்திரனை தரிசிக்கும் நேரத்தில் கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது. சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். சூரியனிடமும். சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும், அதுவே யாசகம் பெருவது . ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெரும்போது கையேந்தியே பெற்றார், சிவபெருமான் கூட அனு தினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார், இதை படி அளப்பது என்பார்கள், எனவே இதை உணர்ந்து பவ்வியமாக மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது வேண்டுங்கள் ஆயுள் அதிகரிக்க இறைவன் அருள் கிடைக்கும்.

இந்து மதம் மட்டுமல்லாது இஸ்லாம் மத‌ம், ஜைன‌ம், கிறித்தவம்,என்று எல்லா மதங்களும் மூன்றாம்பிறை என்பது தெய்வீக அம்சம் பொருந்தியது என தெரிவிக்கிறது . சந்திர தரிசனம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும். சந்திரனை தரிசனம் செய்ய வேறு எங்கும் கிளம்பி போக வேண்டாம் நம் வீட்டு வாசலில் இருந்தே பார்க்கலாம். சந்திர தரிசனம் செய்யுங்கள் சகல நன்மைகளையும் பெறுங்கள்.

English summary
Thai matha Chandra Darshanam importance and benifits: Moon is ruler of mind. Darshan of the waxing moon brings contentment, ecstasy and peace of mind. Elders have said that all sorrows and sorrows will disappear.If you see the moon today, you will get rid of incurable diseases. Visual disturbances will be removed if you see the wax crescent moon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X