வானில் நிகழ்ந்த அதிசய சந்திர கிரகணம்..."சூப்பர் ஃப்ளவர் பிளட் மூன்" என அழைக்க காரணங்கள்
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வை "சூப்பர் ஃப்ளவர் பிளட் மூன்" என்று அழைக்கின்றனர்.
சென்னை: இன்றைய தினம் முழு சந்திர கிரகணம் நிகழ்ந்துள்ளது. மே மாதத்தின் முழு நிலவு பூமிக்கு அருகில் வருவதால் பெரியதாக தோன்றும். இந்த சந்திர கிரகணம் வசந்த காலத்தில் ஏற்படுவதால் "ஃப்ளவர் ப்ளட் மூன்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விஷயங்கள் அனைத்தும் ஒன்றாக நிகழும்போது, இந்த நிகழ்வை "சூப்பர் ஃப்ளவர் பிளட் மூன்" (Super Flower Blood Moon) என்று அழைக்கின்றனர்.
இன்றைய தினம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 12:20 மணிக்கு முடிவடையும். இந்த சந்திர கிரகணம் வட தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் தெரியும். இருப்பினும், இந்த கிரகணம் இந்தியாவில் பார்க்க முடியாது என்றாலும் நாசா நேரலையில் யுடுயூப் மூலம் ஒளிபரப்பு செய்து வருகிறது.
ஜோதிடத்தில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகியவை மங்களகரமானதாக கருதப்படுவதில்லை என்பதால், இந்த நேரத்தில் சில வேலைகளைச் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

சந்திர கிரகணம்
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த அரிய நிகழ்வின் போது பூமியின் நிழலால் நிலவு மறைக்கப்படுகிறது. பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் அளவை பொறுத்து சந்திர கிரகணங்களின் வகைகள் வேறுபடுகின்றன. பகுதி நேர சந்திர கிரகணம் சில நேரங்களில் நிகழும். இன்றைய தினம் முழு சந்திர கிரகணம் நிகழ்ந்துள்ளது.

சூப்பர் மூன்
மே மாதத்தின் மொத்த சந்திர கிரகணத்தின் போது சிவப்பு நிறத்தில் தோன்றுவதோடு கூடுதலாக, சந்திரன் பெரிஜியில் இருக்கும், அதாவது அதன் சுற்றுப்பாதை பாதையின் ஒரு பகுதியாக இது பூமிக்கு மிக அருகில் இருக்கும். இந்த நிகழ்வு "சூப்பர் மூன்" என்றும் அழைக்கப்படுகிறது. வானியலாளர்களின் கூற்றுப்படி, சந்திரன் இயல்பை விட 7 சதவீதம் பெரியதாகவும், 15 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றியதால் இது சூப்பர் மூன் என்றழைக்கப்படுகிறது.

சூப்பர் ஃப்ளவர் பிளட் மூன்
மே மாதத்தின் முழு நிலவு வசந்த காலத்தில் ஏற்படுவதால் "ஃப்ளவர் ப்ளட் மூன்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விஷயங்கள் அனைத்தும் ஒன்றாக நிகழும்போது, இந்த நிகழ்வை "சூப்பர் ஃப்ளவர் பிளட் மூன்" என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் தெரியாது
இந்திய நேரப்படி இது பகலில் நிகழ்வதால் இங்கு நேரில் பார்க்க முடியாது. அதே நேரத்தில் சந்திர கிரகணம் வட தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் தெரியும். சந்திர கிரகணத்தின் போது அந்த நாடுகளில் வசிக்கும் ஜோதிட நம்பிக்கையுள்ள கர்ப்பிணி பெண்கள், இதயம் பலவீனமாக இருப்பவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

என்ன செய்யக்கூடாது
அதற்குக் காரணம் கிரகணத்தின் போது ஏற்படும், கதிர் வீச்சுகள் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும். இதனால், பிறக்ககூடிய குழந்தைகளுக்கு சில மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதாம். இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் தையல், வெட்டுதல், சுத்தம் செய்தல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
இன்றைய தினம் விருச்சிக ராசிக்காரர்கள், ரிஷப ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கிரகணத்திற்கு முடிந்த பின்
கிரணகத்துக்கு முன்பு முன்பும், பின்பும் வீட்டை கழுவிவிட்டு நாமும் குளிக்க வேண்டும். இந்த நேரத்தில், பல்வேறு செரிமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். கிரகணத்திற்கு முன்பு சமைக்கப்படும் எந்த உணவையும் சாப்பிடக்கூடாது. சந்திர கிரகண நேரத்தில் இறைவனை வழிபடுதல் சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. கிரகத்தில் இருந்து விடுபட சுப்ரபாதம், விநாயகர் துதி ஆகியவை பாடலாம். புண்ணிய நதிகளில் ஸ்தானம் செய்யலாம். தானங்கள் வழங்கலாம்.

நவம்பர் 8ல் இந்தியாவில் தெரியும்
இந்த முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியாவிட்டால் கவலை வேண்டாம் இந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழும். அது ராகு கிரஹஸ்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications