For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விளக்கேற்றும் போது இந்த தவறுகளை மறந்தும் செய்து விடாதீர்கள்..தீராத கடன் வந்து சேருமாம்!

Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக்களை இழந்தோரும், ஏமாற்றி பிடுங்கப்பெற்றோரும்,வர வேண்டிய நியாயமான சொத்துக்கள் வராமல் தவிப்போரும், திரும்ப கிடைக்கும் என நினைத்து கொடுத்த பணத்தை இழந்தோரும், தங்களின் நிலை மாற, சிறந்த பரிகாரம் உள்ளது. ஆன்மீக ரீதியான பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பாருங்கள் உங்களுக்கு கை மேல் பலன் கிடைக்கும்.

வேத புராணங்களும்கூடவிளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

விநாயகருக்கு தேங்காய் எண்ணெய், மகாலட்சுமிக்கு பசுநெய், குலதெய்வத்துக்கு வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய், பைரவருக்கு நல்லெண்ணெய், அம்மனுக்கு விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய் ஏற்றலாம். பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்களுக்கு ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும்.

மகாளய அமாவாசை 2022.. பெண்கள் மறந்தும் இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்..தோஷம் ஏற்படுமாம்! மகாளய அமாவாசை 2022.. பெண்கள் மறந்தும் இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்..தோஷம் ஏற்படுமாம்!

 தீபம் ஏற்றும் நேரம்

தீபம் ஏற்றும் நேரம்

நம்முடைய வீட்டில் அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலும் தீபம் ஏற்றலாம். காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.

வறுமை விலகி செல்வம் பெருகும்

வறுமை விலகி செல்வம் பெருகும்

வீட்டின் சுவாமி அறை மட்டுமல்லாது நடு முற்றம், சமையல் அறை, துளசி மாடம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.

தீபம் ஏற்ற என்ன எண்ணெய்

தீபம் ஏற்ற என்ன எண்ணெய்

பொதுவாக சுத்தமான, கலப்படமில்லாத நல்லெண்ணை ஏற்றி வீட்டில் விளக்கேற்றினாலே போதும். சிறிய வெள்ளி காமாட்சி விளக்கு வாங்கி அதில் நெய் ஊற்றி காலையிலும், மாலையிலும் ஏற்றி வைப்பது நல்லது. விளக்கெண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால் தாம்பத்திய சுகம், புகழ் தேவதை வசியம் கிடைக்கும். மகாலட்சுமிக்கு பசு நெய் ஊற்றி விளக்கேற்றலாம். மகாவிஷ்ணுவுக்கு நல்லெண்ணை ஊற்றி விளக்கேற்றலாம். எல்லா தேவதைகளுக்கும் நல்லெண்ணை விளக்கு ஏற்றலாம்.

பஞ்சமி திதியில் விளக்கேற்றினால் பலன்

பஞ்சமி திதியில் விளக்கேற்றினால் பலன்

பசுநெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த ஐந்தும் கலந்த பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி பஞ்சமி திதியில் தேவியை வழிபட்டால் அம்மனின் அருள் கிடைக்கும். பஞ்சதீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி வடக்குப் பக்கம் பார்த்து தீபம் ஏற்றி வந்தால் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். துன்பங்கள் நீங்கும். வரவேண்டிய பண பாக்கிகள் வந்து சேரும். தொடர்ந்து 27 பஞ்சமிகள், மாலை வேளையில் சிவன் சன்னதியில் சிகப்பு திரி கொண்டு மண் அகலில் இலுப்பெண்ணெய் தீபம் 9 ஏற்றி மனமுருகி வேண்டி வர, பரிகாரம் முடிவதற்குள் பலன் கை மேல். இந்த பரிகாரம் செய்யும் நாட்களில் அசைவம் முட்டை போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

 எந்த திசையில் ஏற்றுவது நல்லது

எந்த திசையில் ஏற்றுவது நல்லது

காமாட்சி அம்மன் விளக்கை கிழக்கு மற்றும் வடக்கு திசையில் மட்டுமே ஏற்ற வேண்டும். இதில் கிழக்கு திசையில் விளக்கு ஏற்றுவது மிகவும் நன்மையை அளிக்கக் கூடியது. எந்தவித காரணத்திற்காகவும் மேற்கு மற்றும் தெற்கு திசையில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றக்கூடாது. சுத்தமான பருத்திப்பஞ்சு அல்லது தாமரைத்தண்டு திரியினால் மட்டுமே விளக்கேற்ற வேண்டும்.

கடன்கள் தீரும்

கடன்கள் தீரும்

ஆலயத்தில் இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி சிவனை வழிபட்டால் கடன்கள் தீரும். இலுப்பை எண்ணெய் கோவில்களில் மட்டும்தான் பயன்படுத்தலாம். வீட்டில் விளக்கேற்ற இலுப்பை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. ஐந்து வகை எண்ணெய்களைக் கொண்டு கோவில்களில் மட்டுமே விளக்கேற்ற வேண்டும். அதே போல கணபதிக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம். விளக்கிற்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் கடலை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றவே கூடாது. அப்படி ஏற்றி வைத்தால் கடன்கள் பெருகும். தீயவிளைவுகள்தான் ஏற்படும்.

இந்த தவறை செய்து விடாதீர்கள்

இந்த தவறை செய்து விடாதீர்கள்

பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக குளிர விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. வாயால் ஊதியும் தீபத்தை குளிர்விக்கக் கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன. தீபத்தை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை "ஓம் சாந்த ஸ்ரூபிணே நம" என்று சொல்லி பின்புறமாக இழுக்க வேண்டும். அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும். விளக்கேற்றலாம்.

English summary
Sivappu Thiri Vilakku Parikaram: Assets lost for physical health can also be worshiped by lighting a lamp to return the money given.Let's see what are the benefits of daily lighting and worship at home.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X