Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டில் தினமும் விளக்கேற்றுகிறீர்களா...தப்பித்தவறி இந்த தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்

இழந்த பொருட்கள் மீண்டும் பெற பூஜை அறையில் சில விசயங்களை தவறாமல் செய்ய வேண்டும். மறந்தும் கூட சில தவறுகளை செய்து விடக்கூடாது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய வீட்டில் விளக்கேற்றினால் அன்னை மகாலட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும். அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுவார்கள். சில பொருட்களில் தீபம் ஏற்றினால் வற்றாத செல்வம் பெருகும். இழந்த பொருட்கள் திரும்ப வரும் என்ற நம்பிக்கை உள்ளது. விளக்கேற்றும் போது சில தவறுகளை செய்தால் காலத்திற்கும் கஷ்டம் வந்து விடும் கவனம் தேவை.

பூஜை அறையில் தீபம் ஏற்றுவது என்பது செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும். அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்திலும் அந்தி மாலையில் பிரதோஷ நேரத்திலும் நம்முடைய வீட்டில் விளக்கு ஏற்றலாம்.

பூஜை ரூமில் இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். இதே போன்று வாசலில் நிலைப்படி அருகில் இரண்டு விளக்கு ஏற்ற வேண்டும் இதன் மூலம் வளமான செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 என்ன தீபம் ஏற்றுவது

என்ன தீபம் ஏற்றுவது

சொத்துக்களை இழந்தோரும், ஏமாற்றி பிடுங்கப்பெற்றவர்களும் வர வேண்டிய நியாயமான சொத்துக்கள் வராமல் தவிப்போரும், திரும்ப கிடைக்கும் என நினைத்து கொடுத்த பணத்தை இழந்தோரும், தங்களின் நிலை மாற, தொடர்ந்து 27 பஞ்சமிகள், மாலை வேளையில் சிவன் சன்னதியில் சிகப்பு திரி கொண்டு மண் அகலில் இலுப்பெண்ணெய் தீபம் 9 ஏற்றி மனமுருகி வேண்டி வர, பரிகாரம் முடிவதற்குள் பலன் கை மேல். இந்த பரிகாரம் செய்யும் நாள் அசைவம் முட்டை உட்பட தவிர்க்க வேண்டும்.

 புகழ் செல்வம் கூடும்

புகழ் செல்வம் கூடும்


பொதுவாக சுத்தமான, கலப்படமில்லாத நல்லெண்ணை ஏற்றி வீட்டில் விளக்கேற்றினாலே போதும். சிறிய வெள்ளி காமாட்சி விளக்கு வாங்கி அதில் நெய் ஊற்றி காலையிலும், மாலையிலும் ஏற்றி வைப்பது நல்லது.
விளக்கு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால் தாம்பத்திய சுகம், புகழ் தேவதை வசியம் கிடைக்கும். ஆலயத்தில் இலுப்ப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி சிவனை வழிபட்டால் கடன்கள் தீரும். இலுப்ப எண்ணெய் கோவில்களில் மட்டும்தான் பயன்படுத்தலாம்.

 நல்லெண்ணெய் தீபம்

நல்லெண்ணெய் தீபம்

வீட்டில் விளக்கேற்ற இலுப்பை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. கணபதிக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம். மகாலட்சுமிக்கு பசு நெய் ஊற்றி விளக்கேற்றலாம். மகாவிஷ்ணுவுக்கு நல்லெண்ணை ஊற்றி விளக்கேற்றலாம். எல்லா தேவதைகளுக்கும் நல்லெண்ணை விளக்கு ஏற்றலாம்.

 கடலை எண்ணெய் ஆகவே ஆகாது

கடலை எண்ணெய் ஆகவே ஆகாது

பசுநெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த ஐந்தும் கலந்த பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி பஞ்சமி திதியில் தேவியை வழிபட்டால் அம்மனின் அருள் கிடைக்கும். பஞ்சதீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி வடக்குப் பக்கம் பார்த்து தீபம் ஏற்றி வந்தால் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். துன்பங்கள் நீங்கும். வரவேண்டிய பண பாக்கிகள் வந்து சேரும். விளக்கிற்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் கடலை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றவே கூடாது. அப்படி ஏற்றி வைத்தால் கடன்கள் பெருகும். தீயவிளைவுகள்தான் ஏற்படும்.

 நெல்லிக்காய் தீபம்

நெல்லிக்காய் தீபம்

நெல்லிக்காயில் நெய் விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது. பெரிய நெல்லிக்காய் வாங்கி மேற்புரமாக சற்று பள்ளமாக தோண்டி, அதே போன்று கீழ்புறமும் சற்று தட்டையாக இருக்கும் அளவிற்கு வெட்டி எடுத்து விடுங்கள். பின்னர் பஞ்சு திரி செய்து அதை நெய்யில் நனைந்து, பின்னர் அதனை நெல்லிக்காயில் வைத்து விளக்கேற்றுவது நல்லது. இதே போன்று சாதாரண நாட்கள் என்றால் எண்ணெய் விளக்கு ஏற்றுவது நல்லது. மற்ற விசேஷ நாட்களில் இது போன்று தீபம் ஏற்றினால், இழந்ததை மீண்டும் பெற முடியும் என்பது ஐதீகம்

இந்த தவறை செய்யாதீர்கள்

இந்த தவறை செய்யாதீர்கள்

தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது, திரியின் அடிப்பகுதியை ஓம் சாந்த ஸ்ரூபிணே நம என்று சொல்லி பின்புறமாக இழுக்க வேண்டும். அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும். இப்படி தீபத்தினை குளிர்வித்தால் நமது வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+