சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு வாழ்த்து சொன்ன நடிகர்...வம்பு இழுக்கும் நெட்டிசன்கள்
சென்னை: சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியின் திருமணத்திற்கு அவருடன் நடித்த நடிகர் வாழ்த்துக் கூறியதற்கு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
வாழ்த்து சொன்னது ஒரு தப்பா??அதற்காக இப்படியா??!! என்று சீரியல் நடிகரின் ரசிகர்கள் வேதனைப்பட்டு வருகிறார்களாம்.

திடீர் திருமண செய்திகள்
இன்று செப்டம்பர் மாத முதல் நாளில் திடீர் கல்யாண செய்திகளை சினிமா பிரபலங்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து வருகின்றனர்..விஜய் டிவியின் மூலமாக பிரபலம் அடைந்த புகழ் தன்னுடைய திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிறிது நேரத்திற்குள் சின்ன துறையை சார்ந்த மகாலட்சுமி தன்னுடைய திருமண புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே திருமணம் முடிந்த மகாலட்சுமி தனது முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு தனியாகத்தான் வாழ்ந்து வந்துள்ளார்.

குவியும் வாழ்த்துக்கள்
மகாலட்சுமிக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் அவருடைய மகன் முதல் கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சின்ன திரையிலும் வெள்ளி திரையிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது திடீரென்று அவர் தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரனை திருமணம் செய்து இருக்கிறார். தன்னுடைய திருமண செய்தியை இன்ஸ்டாகிராமில் திருமண புகைப்படத்துடன் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தார். புகைப்படங்களை பார்த்ததும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர். ரவீந்தர் தயாரிப்பாளராக இருப்பதால் அவருக்கும் பல நடிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

வாழ்த்து சொன்னது குத்தமா
ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமி இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராமில் திருமண செய்தியை வெளியிட்டதும் ரவீந்திரனுக்கு சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் திருமண வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் பலர் ஈஸ்வரனை கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே ஈஸ்வரருக்கும் மகாலட்சுமிக்கும் காதல் என்ற வதந்தி கிளம்பி கொண்டிருந்து. ஈஸ்வரனின் மனைவி தன்னுடைய கணவனுக்கும் மகாலட்சுமிக்கும் தொடர்பு இருப்பதாக மீடியாக்களில் பேட்டி கொடுத்து இருந்ததை வைத்து தற்போது ஈஸ்வரனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

எதிர்பார்க்காத வாழ்த்து
உண்மை என்னவென்று தெரியாமல் இருவர் பழகுவதை வைத்து இப்படி எல்லாம் கலாய்க்க கூடாது என்று ஈஸ்வரனின் ரசிகர்கள் நெட்டிசன்களுக்கு அறிவுரையை கூறி வருகிறார்கள். ஒரு சிலர் நெட்டிசன்கள் என்னதான் அவருக்குள் வேதனைகள் இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு எங்கிருந்தாலும் மகாலட்சுமி வாழ வேண்டும் என்று வாழ்த்து கூறுவதற்கு இப்படி எல்லாம் பதில் கூறலாமா? ? என்று கலாய்த்து வருகின்றனர். ரவீந்தர் திருமண போட்டோக்களை வெளியிட்ட சிறிது நேரத்திற்குள் ஈஸ்வர் வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பது தற்போது சமூக வலைத்தளத்தில் பலரும் பேசும் பொருளாக இருந்து வருகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications