மருமகள் குடும்பத்தினர் ஊருக்கு கிளம்பும் போது நெப்போலியன் செய்த செயல்.. அக்ஷயாவின் அக்கா எமோஷனல்
சென்னை: நடிகர் நெப்போலியனின் மருமகள் அக்ஷயாவின் குடும்பத்தினர் ஜப்பானிலிருந்து கிளம்பும்போது நெப்போலியன் செய்த செயல் குறித்து அவருடைய மருமகள் அக்ஷயாவின் அக்கா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் திருமணம் ஜப்பானில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்த திருமணத்தில் சினிமா பிரபலங்கள் ஒரு சிலர் கலந்து கொண்டனர். அதிலும் நடிகர் சரத்குமார், குஷ்பூ, மீனா, சுஹாசினி, கார்த்தி, பாண்டியராஜன், ராதிகா என பல பிரபலங்கள் திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன்பே ஜப்பான் சென்று அங்கு பங்கஷனில் கலந்து கொண்டனர்.

நெப்போலியனின் மகனுக்கு தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு திருமணம் செய்தது குறித்து இணையத்தில் சில பாராட்டி வந்தாலும் ஒரு சிலர் விமர்சனங்களும் வைத்து வருகிறார்கள். நெப்போலியன் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்துவிட்டார், தன்னுடைய மகனை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு பெண்ணை மருமகளாக வீட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நெகட்டிவ் கமெண்ட்கள் குறித்து நெப்போலிகளின் மருமகள் அக்ஷயாவின் அக்கா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். என்னுடைய தங்கை அக்ஷயாவின் திருமணம் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி அதிகமான நெகட்டிவ் கமாண்டுகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த திருமணத்திற்கு அக்ஷயா தான் முதலில் சம்மதம் சொன்னது.
நான் நெப்போலியன் மகனை பற்றி தப்பா பேசல.. அவங்க தான் அப்படி கேட்டது.. காந்தராஜ் பேட்டி
நெப்போலியன் வீட்டில் இருந்து திருமண வரம் வந்ததும் நாங்கள் முதலில் யோசித்தோம். ஆனால் அக்ஷயா எனக்கு பிடித்திருக்கிறது என்று சொன்னார். அதற்கு பிறகு தான் இரண்டு குடும்பத்தினரும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். நிச்சயதார்த்தத்திற்கு இரண்டு வாரத்திற்கு முன்பு கூட நெப்போலியனின் மனைவி சுதா போன் செய்து எல்லோரிடமும் தனித்தனியாக இந்த கல்யாணத்திற்கு சம்மதமா என்று கேட்டார்.
என்னிடம் கூட உங்க தங்கச்சி எங்க பையனை கல்யாணம் பண்ணுவதற்கு உங்களுக்கு சம்மதமா? உங்க மாப்பிள்ளை எதுவும் சொல்வாரா? என்றெல்லாம் விசாரித்தார். நாங்கள் அக்ஷயாவில் விருப்பத்திற்கு பிறகு எல்லோரும் சம்மதம் சொன்னோம். எங்க அப்பா கூட பிறந்தவங்க 11 பேர் எல்லோரும் பெரிய அளவில் பேசிக்கொள்வது கிடையாது.
எங்களுக்கு பல வருடங்களாகவே நெப்போலியனின் மாமனார் குடும்பத்தோடு நல்ல நட்பு இருக்கிறது. ஆனால் நாங்கள் எங்கள் தங்கையை நெப்போலியன் குடும்பத்திற்கு திருமணம் செய்து கொடுக்கப் போகிறோம் என்றதும் குடும்பத்தில் கூட ஒரு சிலர் தப்பாக பேசினாங்க. எங்களுக்கு நெப்போலியன் சார் குடும்பத்தினர் நல்ல சப்போர்ட் கொடுக்கிறார்கள்.

நாங்கள் தனுஷை ஜப்பானுக்கு வந்து தான் நேரில் பார்த்தோம். கிட்டத்தட்ட 20 நாட்களாக இப்போது எல்லோரும் ஒரு குடும்பமாக பழகிக் கொண்டிருக்கிறோம். அக்ஷயா எங்க வீட்டில் ரொம்ப செல்ல பொண்ணு. நானும் அவளும் சின்ன வயதில் அதிகமா சண்டை போட்டோம். ஆனால் என்னுடைய திருமணத்திற்கு பிறகு தான் எனக்கும் அவளுக்கும் அதிகமான பாசம் ஏற்பட்டது.
இப்போ அவளை இவ்வளவு தூரத்தில் விட்டு விட்டு செல்வது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் நெப்போலியன் குடும்பத்தினர் நன்றாக பார்த்துக் கொள்வாங்க என்ற நம்பிக்கை இருக்கிறது. நாங்க எங்க குடும்பத்தோடு அக்ஷயா வீட்டிலிருந்து ஊருக்கு கிளம்பும்போது அக்ஷயா கண்கலங்கி அழுதார். அப்போது நெப்போலியன் தான் அக்ஷயாவிற்கு ஆறுதல் சொன்னார்.
எங்களிடமும் நாங்கள் எங்க பொண்ணு போல பார்த்துக் கொள்வோம் என்று சொல்லி இருக்கிறார். அதுபோல திருமணத்தில் நெப்போலியன் சார் குடும்பத்தில் எல்லோருமே எங்களிடம் பல வருட பழக்கம் போல நடந்து கொண்டார்கள். அக்ஷயா மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்களோ அதே மரியாதையும் பாசமும் எங்களிடமும் காட்டினார்கள் என்று கூறி இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications