இளையராஜா பாட்டை ரசித்தபடி "கையை விட்டு கார் ஓட்டி சாகசம்” செய்த நடிகர்.. இப்படி செய்யலாமா..!?
சென்னை: சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளி திரையில் கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வரும் பிரேம்குமார் வெளியிட்ட வீடியோ தான் ரசிகர்களை மிரள வைத்துள்ளதாம்.
நடிகராக இருக்கும் பிரேம்குமார் இளையராஜாவின் பாட்டை ரசித்தபடியே சாலையில் கையை விட்டு கார் ஓட்டி இருக்கிறார்.
தான் செய்த சாகசத்தை யாரும் செய்ய வேண்டாம் என்று இவர் பதிவிட்டு இருந்தாலும் ரசிகர்களின் அறிவுரைகள் குவிந்து வருகிறது.

அண்ணி சீரியலில் அறிமுகம்
பிரேம்குமார் ராம்நாட்டின் ராஜாவான சண்முக ராஜேஸ்வர சேதுபதியின் பேரனாக இருந்தாலும் தனக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக கே பாலச்சந்தர் தயாரித்த சமுத்திரக்கனி இயக்கிய அண்ணி என்ற சீரியலில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அண்ணாமலை என்ற சீரியலில் அவர் நடித்ததை பார்த்து தான் அவருக்கு கருணாநிதியால் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஜோடி நம்பர் ஒன் சீசன்
திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும் ஜோடி நம்பர் ஒன் சீசன் ஒன்றில்,சீரியலில் தன்னோடு நடித்த பூஜா உடன் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார். சீரியல்களில் இவரைப் பார்த்த ரசிகர்கள் திரைப்படங்களில் இவரை பார்த்ததும் இவருடைய நடிப்பை வெகுவாக பாராட்டி வந்தனர். இந்த நிலையில் தான் பிரேம்குமார் இனி சீரியலில் நடிக்கப் போவதில்லை என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

போலீஸ் கதாபாத்திரம்
தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் அதிகமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிக்கும் கதாபாத்திரங்களில் போலீஸ் கதாபாத்திரத்தை அதிகமாக நேசிப்பதாக பிரேம்குமார் கூறியிருக்கிறார்.திரைப்படங்களில் ஒரு சில இடங்களில் தோன்றினாலும் தன்னுடைய கேரக்டரை ரசிகர்கள் அதிகமாக ரசிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வருவதாக பிரேம்குமார் கூறியிருக்கிறார்.

சாகசம் செய்த நடிகர்
ஏற்கனவே சமுதாயத்தில் தற்போது சாலையில் சாகசம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் பயந்து தான் செல்ல வேண்டியது இருக்கிறது. இந்த நிலையில் தற்போது பிரபலமான நடிகராக இருக்கும் பிரேம்குமார் தன்னுடைய காரில் சீட் பெல்ட் அணிந்தபடி இளையராஜாவின் பாடலான, "வச்சாலும் வைக்காமல் போனாலும் மல்லி வாசம்" என்ற பாடலுக்கு சீட்டில் அமர்ந்தபடியே ஸ்டைலாக ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

இப்படி எல்லாம் செய்யக்கூடாது
இந்த வீடியோவை பார்த்ததும் ஒரு சில ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களையும் லைக்குகளையும் குவித்து வந்தாலும் பல ரசிகர்கள் அறிவுரைகளை கூறி வருகின்றனர். சாலையில் செல்லும் போது இப்படி எல்லாம் செய்யக்கூடாது. ஒரு சிலருடைய அஜாக்கிரதையால் சரியாக செல்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடக்கூடாது என்பதுதான் இந்த வீடியோவை பார்ப்பவர்களின் பலருடைய மனநிலையாக இருந்து வருவதாக கூறி வருகிறார்கள். பிரபலமாக இருக்கும் இவர்களே இப்படி செய்தால் இவர்களை ஃபாலோ பண்ணும் ரசிகர்கள் இதைத்தானே செய்வார்கள் என்று பலர் நொந்து வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications