புனித் ராஜ்குமாரின் கனவிற்காக.. அமேசான் நிறுவனம் செய்த செயல்.... ரசிகர்கள் நெகிழ்ச்சி
சென்னை: மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களின் சினிமா குறித்த பார்வையும்.. கனவையும்... முன்னெடுத்து செல்லும் பொருட்டு அமேசான் நிறுவனம் செய்துள்ள செயல்.. அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது.
அதுமட்டுமின்றி இலவசமாக புனித் ராஜ்குமாரின் ஐந்து படங்களை தங்களது ஓடிடி தளத்தில் இலவசமாக அனைவரும் பார்க்கும் வகையில் வெளியிடுவதை அவரது ரசிகர்களும் நெகிழ்ச்சியுடன் வரவேற்று அமேசான் நிறுவனத்திற்கு நன்றி கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் அபிமான கதாநாயகன்
தங்கள் அபிமான கதாநாயகன் என்பதையும் தாண்டி ஒரு நல்ல மனிதராக தங்களுடைய "அப்பு"விற்கு இன்னும் பல கௌரவங்களும், புகழும் சேர வேண்டுமென்று இறைவனை வேண்டி வருகின்றனர்.மரணத்திற்கு பணம், புகழ், வயது தெரியாது என்பதை சமீபகாலமாக பல மரணங்கள் உணர்த்தி வந்தாலும், 46 வயதில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மரணமடைந்த கன்னட நடிகர் அப்பு என்ற புனித் ராஜ்குமார் மரணம் அதை ஆழமாக உணர்த்தியது.

கன்னட சூப்பர் ஸ்டார்
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மகனாக இருந்ததால் சினிமாவில் நுழைவதற்கு அவர் பெரிய அளவில் மெனக்கெடவில்லை என்றாலும் தன் உழைப்பினாலும் தன் அர்ப்பணிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருந்தார். மிகப்பெரிய நடிகர் என்று அவருக்கு ரசிகர்கள் இருந்தாலும் அதையும் தாண்டி அவர் செய்த பல நல்ல விஷயங்கள் மக்களிடையே அவருக்கு பெரிய அளவிற்கு மரியாதையையும், அன்பையும் உருவாக்கி வைத்திருந்தது.

எதிர்பாராத மரணம்
யாரும் எதிர்பாராத புனித் ராஜ்குமார் அவர்களின் மரணத்தால் அதிர்ச்சியானது கன்னட திரை உலகம் மட்டுமல்ல, இந்திய திரையுலகம் மொத்தமும் தான் பி.ஆர்.கே புரோடக்ஷன் கம்பெனி மூலம் நல்ல படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை தன் கனவாக வைத்திருந்த புனித் ராஜ்குமார் அவர்களின் கணவை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு.. அமேசான் நிறுவனம் அவரது புரொடக்ஷன் சார்பில் வெளிவரும் மூன்று புதிய படங்களை நேரடியாக தங்களது ஓடிடியில் ரிலீஸ் செய்வதோடு மட்டுமின்றி, பிப்ரவரி மாதம் முழுவதும் புனித் ராஜ்குமார் அவர்கள் சம்பந்தப்பட்ட ஐந்து படங்களை இலவசமாக தங்கள் சந்தாதாரர்கள் அல்லாதவர்களும் பார்த்துக்கொள்ளும் சலுகையை அறிவித்துள்ளது.

ஐந்து திரைப்படங்கள்
பி.ஆர்.கே புரோடக்ஷன் ஹவுஸ் என்று அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் அவர்கள் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் "ஒன் கட்..,டூ கட்..", "ஃபேமிலி பேக்", "மேன் ஆப் தி மேட்ச்",என்ற காதல்,காமெடி என்று வெவ்வேறு ஜேனரில் வரும் படங்களை தங்கள் அமேசான் ப்ரைம் ஓடிடியில் நேரடியாக வெளியிடுகிறது.அதுமட்டுமின்றி "லா(Law)",பிரஞ்ச் பிரியாணி, கவலுதாரி,மாயா பஜார்,மற்றும் யுவரத்னா ஆகிய புனித் ராஜ்குமார் அவர்கள் சம்பந்தப்பட்ட மறக்கமுடியாத ஐந்து திரைப்படங்களை தங்கள் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பிப்ரவரி மாதம் முழுவதும் இலவசமாக அனைவரும் பார்த்துக் கொள்ளும் சலுகையை அறிவித்துள்ளது. புனித் ராஜ்குமார் அவர்களின் சினிமா குறித்த பார்வையையும்,கனவையும் முன்னெடுத்துச் செல்லும் பணியில் தங்களுடைய சிறிய பங்கு என்று அமேசான் நிறுவனம் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications