மாமனாருக்கு தாதா சாகேப்...மருமகனுக்கு சிறந்த நடிகர் விருது...திரைப்பட விழா சுவாரசியம்
சென்னை: டெல்லியில் நடக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.
நேஷனல் பிலிம் அவார்டு வழங்கும் விருதுகளை ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமனாரும் மருமகனும் வாங்கியிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்திருக்கிறது.
தமிழ்சினிமாவை சேர்ந்தவர்கள் உயரிய விருதுகளை வாங்கிக் கொண்டிருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெருமையாகத்தான் உள்ளதாம்.

திறமைக்கு அங்கீகாரம்
67 ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் திரைப்படங்களை சேர்ந்த பல நடிகர்கள் விருதுகளை வாங்கிக் கொண்டிருக்கும் போது, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவருடைய மருமகனான நடிகர் தனுஷ் இருவரும் விருதுகளை பெறுவது அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமலலாமல் ரசிகர்களும், தமிழ் சினிமாவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றது. தமிழ் ரசிகர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இவர்கள் இருவரும் ஒரே மேடையில் விருது வாங்குவது அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயமாகத்தான் இருக்கிறது என்று பலர் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியின் உழைப்பிற்கு வெற்றி
2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகளை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்குகிறார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர், இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், சினிமா துறையின் உயரிய விருதான தாதாசாகேப் விருதினை நடிகர் ரஜினிகாந்த் வாங்கியிருக்கிறார். இந்த விருதுக்கான இவருடைய பெயர் 2019ஆண்டு சேர்க்கப்பட்டு விட்டது. ஆனால் தற்போது தான் இந்த விருதினை இவர் வாங்கியிருக்கிறார்.

ஜெயித்த அசுரன்
அசுரன் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த திரைப்படத்திற்காக இதுவரைக்கும் தனுஷ் பல விருதுகளை வாங்கியிருக்கிறார். ஆனால் இது விருதுகளுக்கு எல்லாம் மணிமகுடம் கொடுக்கும் விதத்தில் இந்த விருது அமைந்திருக்கிறது. அதுவும் தன்னுடைய குருவாகவும், ரோல்மாடல் ஆகவும் இருக்கும் அவருடைய மாமனாருடன் குடும்பத்தோடு சென்று இருக்கும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் இவரை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இவருடைய போட்டோக்களை பரப்பி வருகின்றனர்.

நெகிழ்ச்சியான தருணம்
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும்போது ரசிகர்களின் பார்வையில் மாமனாரும், மருமகளும் ஒன்றாக அமர்ந்து இருக்கும் நிகழ்வுகளும், மருமகன் தனுஷ் தோளில் தட்டிக் கொடுத்து தன்னுடைய வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தின் புகைப்படங்களும் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர்களின் வளர்ச்சிக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா துறையினரும், அரசியல் பிரபலங்களும் ,வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications