அப்பாவை கடன் வாங்க விடாமல் டாக்டராகி இன்று விருது பெற்ற அக்கா.. வாழ்த்திய சிவகார்த்திகேயன்
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் சிவகார்த்திகேயன் அக்காவிற்கு தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது.
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சகோதரியின் வெற்றியை குறித்து பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ஒரு மருத்துவராக இருக்கும் தன்னுடைய அக்கா அப்பாவின் ஆசையை நிறைவேற்றி விட்டார் என்று நெகிழ்ச்சியாக கூறி இருக்கிறார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அக்காவிற்கு தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்தமருத்துவருக்கான விருது வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் தன்னுடைய அக்காவை பாராட்டி சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் போராட்டங்கள்
ஒரு தொகுப்பாளராகவும் காமெடியாளராகவும் தனது கலைப்பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் ஆரம்ப காலகட்டத்தில் அதிகமாக வாய்ப்புக்காக கஷ்டங்களை சுமந்து இருக்கிறார். தற்போது சினிமாவில் ஒரு தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருந்தாலும், ஆரம்பத்தில் இவர் சினிமாவில் நுழைந்து விட வேண்டும் என்பதற்காக பல்வேறு போராட்டங்களை தாண்டி வந்திருக்கிறார். அதனால் தான் இவர் எவ்வளவோ விருதுகளையும் பெற்று முன்னணியில் வந்தாலும் தான் இப்போதும் எளிமையாகவே இருந்து வருகிறார்.

குடும்பத்தின் மீது பாசம்
சிவகார்த்திகேயன் சாக்லேட் பாயாக இளம் பெண்கள் பலருக்கும் பிடித்த ஒரு நபராக இருந்தாலும், இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கிறது. தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் குடும்பத்தின் மீது அதிகமாக பாசத்தில் இருக்கும் இருவர் தான் விருது வாங்கும் நிகழ்ச்சிகளுக்கு கண்டிப்பாக தன்னுடைய குடும்பத்தை கூட்டிக் கொண்டு சென்று விடுகிறார். அதில் மறக்காமல் தன்னுடைய அப்பாவின் அன்பைப் பற்றியும் பாசத்தை பற்றியும் பேசி வருகிறார். பல இடங்களில் தன்னுடைய குடும்பத்தில் அப்பா அம்மாவை பற்றி சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் போது அழுது இருக்கிறார்.

அக்காவின் எதிர்பாராத செயல்
சில வருடங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் கனா திரைப்படத்தின் மூலமாக நடிகராகவும் மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். அந்த சமயத்தில் இவர் பல பேட்டிகளையும் கொடுத்திருந்தார். அப்போது தான் அந்த பேட்டியில் அவருடைய அக்காவும் வந்திருந்தார். அந்த நேரத்தில் அக்காவை பற்றி பல உண்மைகளை கூறியிருந்தார். அதில் என்னுடைய அப்பா அக்கா டாக்டராக வேண்டுமென்று 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அட்மிஷனுக்காக கல்லூரி வரை அப்பாவும் அக்காவும் சென்று விட்டனர். அங்கு என்னுடைய அக்கா எனது அப்பாவிடம் நான் அடுத்த வருடம் ஒழுங்காக படித்து மெரிட்டில் சேர்ந்து விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

அப்பாவுக்கு பெருமை
அது மட்டுமில்லாமல் அப்போது அவர் சொன்னது போலவே அடுத்த ஆண்டு கவுன்சிலிங் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்து இருக்கிறார். இதனால் இவர்கள் 15 லட்சம் ரூபாய் கடனிலிருந்து தப்பிதிருக்கிறார்கள். ஆனாலும் சில காலத்தில் அவருடைய அப்பா இறந்து விட்டாராம் .என்னுடைய அப்பாவிற்கு நான் எதுவும் செய்யவில்லை ஆனால் என்னுடைய அக்கா அப்பாவை பெருமைப்பட வைத்திருக்கிறார் என்று நெகிழ்ச்சியோடு கூறி இருந்தார். இந்த நிலையில் சில வருடங்களாகவே சிவகார்த்திகேயனின் அக்கா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய பணியை பாராட்டி இந்த வருடம் குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த மருத்துவர் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

சேவை தொடரட்டும்
இதைக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ள சிவகார்த்திகேயன், எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். எங்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள். சிறந்த மருத்துவர் விருதுக்காக வாழ்த்துக்கள் அக்கா, எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அப்பா நிச்சயம் பெருமை கொள்வார் உனது நேர்மையும் உழைப்பும் உன்னை நல்ல நிலைக்கு உயர்த்தும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதை பார்த்த சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் பலர் அவருடைய சகோதரியை பாராட்டி மேலும் பலருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications