Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புது ப்ராஜெக்ட் தொடங்கியாச்சு.. தேதியை சொன்ன கார்த்திக் ராஜ் .. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தன்னோட ஆசை மட்டுமல்ல தன்னுடைய ரசிகர்களின் ஆசையும் விரைவில் நிறைவேற போகிறது என மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் கார்த்திக் ராஜ் பகிர்ந்திருக்கிறார்.

இன்னும் போகும் தூரம் அதிகமாக இருக்கிறது இருந்தாலும் அதற்கு துவக்க தேதியை தன்னுடைய ரசிகர்களிடம் சந்தோசமாக கார்த்திக் சொல்லி ரசிகர்களையும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறார்

இதற்காக தானே நாங்க ஆசைப்பட்டோம். தொடர்ந்து வாரோம் கை கொடுக்க என ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள் இருக்கிற வரைக்கும் கார்த்திக்கு வெற்றிதான்.

விலகுவார்னு நினைக்கல

விலகுவார்னு நினைக்கல

செம்பருத்தி சீரியலில் ஆதியாக நடித்துக்கொண்டிருந்த கார்த்திக்ராஜ் அந்த சீரியலில் இருந்து விலகியதும் அவருடைய ரசிகர்கள் ரொம்பவே பீல் ஆகிவிட்டனர். முதலில் அவர் விலகப் போகிறார் என்னும் செய்தியை நம்பாமல் தான் இருந்திருக்கின்றனர். அப்படி எல்லாம் அவர் விலக மாட்டார் என்று ஆணித்தரமாக நம்பிக் கொண்டிருந்த நேரத்தில் இவர் திடீரென சீரியலை விட்டு விலகிவிட்டார். விலகியதும் அதற்கான காரணத்தையும் ரசிகர்களிடம் சொல்லவில்லை. ஆனாலும் இவருடைய விலகலுக்கு பிறகு இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் கொஞ்சம் குறைய தொடங்கி விட்டனர். அதுமட்டுமல்லாமல் இவர் எப்போது மீண்டும் திரையில் வருவார் என்று கேட்டு வந்தனர்.

பெண்களின் சாக்லேட் பாய்

பெண்களின் சாக்லேட் பாய்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை யில் கார்த்திக் முதல் முதலில் அறிமுகமானார் .இந்த காலேஜ் சீரியலில் இவருடைய கியூட்டான சிரிப்புக்கும், அழகான நடிப்புக்கும் பள்ளி ,கல்லூரி மாணவிகள் முதல் இளம்பெண்கள் வரையிலும் பலர் ரசிக்கத் தொடங்கி விட்டனர் .அந்த சீரியலில் பலர் இளம் நடிகர்கள் இருந்தாலும் அதில் இளம் பெண்களை அதிகமாக கவர்ந்தவர்களில் இவரும் ஒருவர் . இவருக்கு முதல் சீரியலிலே அதிகமான வரவேற்பு கிடைத்து .அதன் காரணமாகத்தான் ஆபீஸ் சீரியலும் அவரே தொடர்ந்தார் .இந்த சீரியலிலும் இவருடைய அழகான நடிப்பை பார்த்து பல பெண்களின் கிரஷ்ஷாக வலம் வந்து கொண்டிருந்தார்.

வேற லெவல் லவ்

வேற லெவல் லவ்

அதுவும் இவருக்கும் ஸ்ருதி ராஜ்க்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி பொருத்தமும் வேற லெவலில் இருந்தது. அடிக்கடி இவர்களுக்குள் ஏற்படும் முட்டல் மோதல் காதல்களை பார்ப்பதற்காகவே இந்த சீரியலை பலர் பார்த்து வந்தனர் .பொதுவாக சீரியல்கள் என்றாலே அழுது வடிந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் மாற்றி பொறாமைப் பட்டுக் கொண்டும் ஒருவர் குடும்பத்தைக் கெடுத்துக் கொண்டு இருக்கும். ஆனால் இந்த மாதிரி ஜாலியான சீரியலில் அனைத்து தரப்பினரும் ஆர்வமாக பார்த்து வந்தனர் .அதனால்தான் இப்ப வரைக்கும் அந்த மாதிரி ஒரு சீரியல் வராதா என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.

காதல் காட்சியில் மனதில் பதிந்தவர்

காதல் காட்சியில் மனதில் பதிந்தவர்

இதற்குப் பிறகு 2014இல் ஜோடி நம்பர் ஒன் (சீசன் 7)அரையிறுதி வரைக்கும் வந்து தன்னுடைய நடனத் திறமையை நிரூபித்து இருந்தார் .இவருக்கு நடிப்பு மட்டுமல்ல டான்ஸிலும் நல்ல ஆர்வம் இருக்கிறது. அதனால் தான் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறது .பெண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஆண் ரசிகர்களும் அதிகமாக இருக்கின்றனர். செம்பருத்தி சீரியலுக்கு பிறகு இவர் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்தார். செம்பருத்தி சீரியலில் இவருடைய கெத்தான நடிப்பு மற்றும் பார்வதியின் மீது கொண்டிருக்கும் காதல் ,தன் அம்மாவின் மீது வைத்திருக்கும் மரியாதை எல்லாவற்றுக்கும் இவர்தான் செட்டாகி ரசிகர்கள் மனதில் நன்றாகவே பதிந்து விட்டார். இவருக்கும் பார்வதிக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி பொருத்தம் காரணமாகத்தான் பலருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் இப்ப வரைக்கும் இவருடைய போட்டோஸ்கள் வளம் வருகிறது.

ஹிட்டான முகிலன்

ஹிட்டான முகிலன்

செம்பருத்தி சீரியலில் தொடர்ந்து மூன்று வருடங்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் கிடைக்கிற கேப்பில் திரைப்படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தார். 465 என்னும் திரைப்படத்தில் ஜெய் கேரக்டரிலும் , நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல என்னும் படத்தில் அணில் கேரக்டரிலும், ஜீ5 வலைத்தொடரில் முகிலன் கேரக்டரிலும் மாஸ் காட்டியிருந்தார். அதுவும் முகிலன் படத்தில் இவருக்கும் ரம்யா பாண்டியனுக்கும் கெமிஸ்ட்ரி மற்றும் இவருடைய மாஸ் கேரக்டரை பார்த்து பலர் இதே போல திரைப்படங்களிலும் நடிங்க என்று இவருக்கு மோட்டிவேஷனல் கொடுத்து வந்தனர். இந்த நிலையில்தான் இவர் சீரியலை விட்டு விலகியதும் திரைப் படங்களில் நடிப்பதற்காக ரெடியாகி கொண்டிருந்தார். ஆனால் இவரை எந்தத் திரைப்படத்திலும் நடிக்க விடாதபடி சிலர் வேலை செய்து கொண்டிருப்பதாக இவர் குற்றம் சாட்டி இருந்தார்.

கைகொடுக்கும் ரசிகர்கள்

கைகொடுக்கும் ரசிகர்கள்

உன்னால் எங்களிடம் பகைத்துக்கொண்டு எந்த படத்திலும் நடிக்க முடியாது என்று சிலர் கூறி இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதனால் தான் என்னுடைய நடிப்பையும் ரசிகர்கள் தான் மீது வைத்திருக்கும் அன்பையும் மனதில் கொண்டு இவரே ஒரு ஸ்டூடியோ ஒன்றை தொடங்க திட்டமிட்டு இருந்தார். அவருடைய சொந்த ஸ்டுடியோவில் சொந்தமான படத்தில் ரசிகர்களின் ஒத்துழைப்போடு படத்தை முடித்துக் காட்டுவேன் என்று சபதமிட்டு ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் உதவி கேட்டிருந்தார். இவருக்கு ஜீ தமிழில் நடந்த ஓட்டெடுப்பில் அதிகமான ரசிகர்கள் வாக்களித்திருந்தனர் .அந்த ரசிகர்கள் அனைவருமே தமக்கு உதவி செய்தாலே போதும் ஒரு படத்தை முடித்துவிடலாம் என்று இவரும் ரசிகர்களிடம் கூறியிருந்தார். அதற்கு அதிகமான ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

நல்ல செய்திதான்

நல்ல செய்திதான்

ரசிகர்களின் ஆசை நிறைவேற போகிறது என்று இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார் .அதில் உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம் 'கே ஸ்டுடியோவுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து கொண்டிருப்பவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி !நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருந்தாலும் என்னை நேசிக்கும் உங்களது விருப்பப்படி வருகிற ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி அன்று நாம் இந்த ப்ராஜெக்ட் காண வேலைகளை துவங்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நிலவும் கொரோனா கட்டுப்பாடுகள்படி நாம் ஓரிடத்தில் ஒன்றுகூடி இந்த ப்ராஜக்டை ஆரம்பிக்க முடியாத நிலையில் உள்ளோம்.

முயற்சிகள் எல்லாம் பலிக்கும்

முயற்சிகள் எல்லாம் பலிக்கும்

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மீண்டும் ஒருமுறை என் நெஞ்சார்ந்த நன்றி இந்த ப்ராஜெக்டை வெற்றிகரமாக செய்து முடிக்க தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் அளிப்பீரகள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் கார்த்திக் ராஜ் 'என்று முடித்திருக்கிறார். இந்த போஸ்ட் பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் அவருக்கு 'வா தலைவா 'இன்னும் நிறைய சாதிக்க எங்களுடைய ஆதரவு தொடர்ந்து இருக்கிறது என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அதேநேரத்தில் சின்னத்திரையிலும் மீண்டும் பார்க்க வேண்டும் அதற்கு முயற்சிகளை எடுங்கள் என்று அன்பு கட்டளை இடுகின்றனர் .இந்த மாதிரி ரசிகர்கள் இவருக்கு வெறித்தனமாக இருக்கிறவரைக்கும் இவருடைய முயற்சிகள் எல்லாம் பலிக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+