நடிகை பானுப்ரியாவை வர்ணித்த நடிகருக்கு விழுந்த அடி.. இயக்குநர் செய்த தரமான சம்பவம்! இப்படியும் நடந்ததாம்!
சென்னை: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தனது நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகை பானுப்ரியா குறித்து வந்த ஒரு தகவல் தற்போது மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, அவர் பாராட்டிய நடிகர் குறித்து பப்லு பிரித்விராஜ் பகிர்ந்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பப்லு பிரித்விராஜ், தனது வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களைப் பற்றி திறந்த மனதுடன் பகிர்ந்தார். அதில், "நான் முதலில் பார்த்த நடிகர்களில் மிகவும் நல்ல மனசு கொண்டவர்... எளிமையானவர்" என்று பானுப்ரியா பற்றி சொல்லியிருந்தார்.

காணாமல் போன நடிகை
நடிகை பானுப்பிரியாவை சமீப காலமாக எந்த திரைப்படங்களிலும், சீரியல்களிலும் பார்க்க முடியவில்லை. நடிகைகளின் சந்திப்புகளில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை இதனால் இவருக்கு என்ன ஆச்சு என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. உடல்நிலை சரியில்லாம இருக்கலாம், மன அழுத்தம் இருக்கலாம் இன்று பல தகவல்களும் பரவி வருகிறது.
நடிகர் பப்லு பேட்டி
இந்த நிலையில் நடிகை பானுப்பிரியா பற்றி பப்லு ஒரு பேட்டியில் பேசும்போது, நான் முதன் முதலில் சைட் அடித்த பெண் பானுப்பிரியா தான். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வானமே எல்லை படத்தில் நடித்துக் கொண்டிருந்தோம். இந்த படத்திற்காக நாடோடி மன்னர்களே என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது.
அந்த பாடலில் ஒரு மூவ்மெண்ட் வரும் தலை வேற, ஜஸ்ட் வேற, இடுப்பு வேற, கால் வேற தனித்தனியாக தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஆடும் . அந்த பாடலுக்கு பானுப்ரியா ஆடியதை பார்த்து நான் மெய்மறந்து அப்படியே ரசித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் என் பின்னால் யாரோ கை வைக்க "யார்ரா மச்சான் எல்லாம் தனித்தனியா ஆடுது..." என்று சொல்லியபடியே நான் திரும்பினால் பாலச்சந்தர் நிற்கிறார்.
விழுந்த அடி
திடீரென்று பளார் என்று கன்னத்தில் ஒரு அறை விட்டார். அதோடு "முண்டம் முண்டம் ... என்னடா பண்ற போய் வேலையை பாரு" என்று சொன்னார். அதை மறக்க முடியாது என்று பப்லு வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
பானுப்ரியா என்றாலே ஒரு காலத்துல ரசிகர்களின் மனதில் தனி இடம் வைத்திருந்த நடிகை. 80களிலும் 90களிலும் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். அவருடைய நடிப்பு மட்டும் இல்லாமல், பாரம்பரிய நடனத்தில் இருந்த திறமையும் அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.
பானுப்பிரியாவின் ஹிட் படங்கள்
அவர் நடித்த சத்ரியன், அழகன் போன்ற படங்கள் இன்றைக்கும் ரசிகர்கள் நினைவில் இருக்கிறது. முகபாவனையாலேயே காட்சிகளை பேச வைக்கக் கூடிய திறமை அவருக்கு இருந்தது. அதனால் தான் இப்போவும் அவர் பெயர் வந்தாலே ஒரு மரியாதை உணர்வு ரசிகர்களிடம் இருக்கிறது.
மற்றொரு பக்கம், பப்லு பிரித்விராஜ் பல வருடங்களாக சினிமா மற்றும் சின்னத்திரையில் இருந்து வருகிறார். வில்லன், கேரக்டர் ரோல் என பல விதமான கதாபாத்திரங்களில் நடித்தவர். சமீப காலமாக அவரது பேட்டிகள், தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்கள் காரணமாக அடிக்கடி செய்திகளில் வருகிறார்.
மொத்தத்தில், பானுப்ரியாவை பற்றி பேசி அடி வாங்கியதை பப்லு பிரித்விராஜ் வெளிப்படையாக பேச, உங்களுக்கு விழுந்த அடி சரிதான் சார் என்று சிலரும்... இன்னும் சிலர் நீங்க பட்ட அடியை கூட பெருமையா பேசுறீங்களே என்றும் கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.
-
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications