தேவதர்ஷினியா இது.. தெறிக்கவிடும் நச் படங்கள்.. ஹீரோயின்களுக்கே டஃப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இவங்களுக்கு மட்டும் வயசே ஏறாதா என்ற ஏக்கத்துடன் நடிகை தேவதர்ஷினியின் மாடர்ன் உடை போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.

இது கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்ற போதிலும் இது தற்போது வைரலாகி வருகிறது. தேவதர்ஷினி சென்னையை சேர்ந்தவர்.

இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது கனவுகள் இலவசம் என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் அப்படியே மர்மதேசம் சீரியலில் நடித்தார். பின்னர் ரமணி வெர்சஸ் ரமணி பார்ட் 2விலும் ராம்ஜிக்கு ஜோடியாக காமெடியில் அசத்தியிருப்பார்.

விடாது கருப்பு

விடாது கருப்பு

அது போல் இவர் நடித்த விடாது கருப்பு எனும் சீரியல் இவருக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் மெல்ல வெள்ளித்திரையிலும் வலம் வர தொடங்கினார். கடந்த 2003 ஆம் ஆண்டு பார்த்திபன் கனவு எனும் திரைப்படத்தில் தேவதர்ஷினி நடித்திருந்தார். இவருக்கு சிறந்த காமெடி நடிகைக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது.

காஞ்சனா

காஞ்சனா

அது போல் முனி 2, காஞ்சனா ஆகிய படங்களிலும் காமெடி ரோலில் நடித்திருந்தார். ஆச்சி மனோரமா, கோவை சரளாவுக்கு அடுத்து பெண் காமெடி நடிகையாக தேவதர்ஷினி வலம் வந்தார். இவர் அண்மையில் நடித்த ஃபேமிலி மேன் 2 மிகுந்த வரவேற்பை பெற்றது. 46 வயதாகும் தேவதர்ஷினி சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார்.

மாடர்ன் உடை

மாடர்ன் உடை

இவர் மாடர்ன் உடையில் ஜீன்ஸ், கூலிங்கிளாஸ், கேப் என பார்ப்பதற்கு கல்லூரி பெண் போல் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்கள் 2019ஆம் ஆண்டு தேவதர்ஷினி தனது கணவர் சேத்தன், குழந்தைகளுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பார்சிலோனா சென்ற போது எடுக்கப்பட்டது.

 டஃப் கொடுக்கும் தர்ஷினி

டஃப் கொடுக்கும் தர்ஷினி

இந்த தோற்றத்தில் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு அவருடைய போட்டோ ஷூட் உள்ளது. சிரிப்பு , கன்னத்தில் விழும் குழி ஆஹா எத்தனை அழகாக இருக்கிறார். இவருக்கு 46 வயதா என ரசிகர்கள் சந்தேகிக்கிறார்கள். இவருக்கு இத்தனை பெரிய பெண்ணா? ஆமா தர்ஷினி உங்களுக்கு வயசே ஆகாதா? இவர் அண்மையில் கூட தமிழக அரசின் விருதை சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் சென்னை மாநகர மேயர் பிரியாவிடம் இருந்து பெற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+