எதிர்நீச்சல் சீரியல் நடிகை வெளியிட்ட ஒற்றைப் பதிவு...குழப்பத்தில் ரசிகர்களும்,கட்சியினரும்..!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் ஹரிப்ரியா தற்போது நடிகர் உதயநிதியை சந்தித்து எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

உதயநிதியை குறித்து ஹரிப்பிரியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு ரசிகர்களை பல்வேறு யூகங்கள் கிளப்ப வைத்துள்ளதாம்.

ஹரிப்பிரியா, உதயநிதி ஸ்டாலின் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டதும் ரசிகர்கள் அரசியல் குறித்து கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

அம்மாஞ்சியாக அறிமுகம்

அம்மாஞ்சியாக அறிமுகம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் இசை கேரக்டரில் நடித்து வரும் ஹரிப்பிரியா சின்னத்திரை மூலமாக பலருக்கும் பரீட்சயமானவர்தான். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் சீரியல் ஆன கனா காணும் காலங்கள் சீரியலின் மூலமாக அம்மாஞ்சி என்று இப்போது வரைக்கும் பல ரசிகர்கள் இவரை அழைத்து வருகின்றனர். முதல் சீரியலில் பவ்யமாக தன்னுடைய குழந்தைத்தனமான நடிப்பை காட்டி அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடித்து விட்டார்.

எதிர்நீச்சல் இசை

எதிர்நீச்சல் இசை

ஹரிப்பிரியா பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் அவர் கதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லி கேரக்டரிலும் பலரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறார். தற்போது ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அப்படியே இசை கேரக்டராக மாறி இருக்கிறார். இந்த சீரியலில் இவருடைய அல்டிமேட் காமெடியை பார்ப்பதற்காகவே பலர் இந்த சீரியலை பார்த்து வருவதாக கூறி இருக்கின்றனர். இவர் தற்போது வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் கூட தற்போது இசை என்று பலரும் அழைத்து வருகிறார்களாம் இந்த நிலையில் இவர் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்

ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்

ஹரிப்பிரியா அதிகமாக வில்லி கேரக்டரில் நடித்து தனக்கு அந்த கேரக்டர் வெறுத்து போய்விட்டதாகவும் இனி நடித்தால் ஜாலியான கேரக்டரில் தான் நடிப்பேன் என்று கூறியிருந்தார். வில்லி கேரக்டரில் நடிக்கும்போது அவரை அறியாமல் அவரும் மன அழுத்தத்தில் ஆகிவிடுகிறாராம். ஏற்கனவே அவருடைய சொந்த வாழ்க்கையில் பல சோகங்கள் இருக்கும் போது அதையும் தாண்டி இந்த சீரியலின் கேரக்டர் தன்னுடைய மனதில் புகுந்து விடுகிறது என்று கூறியிருந்தார். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து உள்ளதாம்.

விடை தெரியவில்லையே

விடை தெரியவில்லையே

நடிகரும் அரசியல் பிரமுகரும் ஆன உதயநிதி ஸ்டாலினை ஹரிப்பிரியா சந்தித்து அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்திற்கு ஹரிப்ரியா உதயநிதி ஸ்டாலினை சந்தித்ததில் உண்மையிலே பெருமையாக இருக்கிறது. எளிமையான மனிதர் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், பிரகாசமான அரசியல் எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கின்றனர். அதற்கு ஹரிப்பிரியா, ஐயோ அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வெறும் ஃபேன்ஸ் சந்தித்த தருணம் என்று கூறியிருக்கிறார். அதைப் பார்த்த ரசிகர்கள் பலர் இதில் யார் யாருக்கு ஃபேன் என்று கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.அதற்கு ஹரிப்பிரியா எந்த பதிலும் கூறவில்லை. இந்த ஒரு பதிவு ரசிகர்கள் மட்டுமல்லாம் நெட்டிசன்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+