வலி தாங்க முடியாமல் தவித்த பாண்டியன் ஸ்டோர் ஹேமா.. வெளியான மருத்துவமனை வீடியோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரில் நடிகை ஹேமா ராஜ்குமார் நடித்து வருகிறார்.
ஹேமா சீரியலில் நடிகையாகவும் அதே நேரத்தில் youtube பிரபலமாகவும் இருந்து வருகிறார். அன்றாடம் இவர் செய்யும் செயல்களை தன்னுடைய youtube பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தனக்கு திடீரென ஏற்பட்ட வலியின் காரணமாக மருத்துவமனைக்கு சென்றிருக்கும் நிலையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பற்றி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று விடுங்கள் என்று தன்னுடைய பிரச்சனையை கூறி ரசிகர்களுக்கு விழிப்புணர்வு செய்திருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர் மீனா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரில் நடிகை ஹேமா ராஜ்குமார் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் ஆரம்பத்தில் வில்லியாக அறிமுகமாகி நாட்கள் செல்ல செல்ல இவர் வில்லியா? கதாநாயகியா என்று ரசிகர்களுக்கு குழப்பம் கொடுக்கும் வகையில் இவருடைய கேரக்டர் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலின் விறுவிறுப்புக்கு காரணமான முக்கியமான நபர்களில் இருவரும் ஒருவர். ரசிகர்களின் மன ஓட்டத்தை அறிந்து அதே கருத்தை இவர் அந்த சீரியலில் அடிக்கடி பிரதிபலித்து விடுகிறார். அதனாலேயே இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். வீட்டில் செல்ல மருமகளாகவும் இருந்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
இந்த நிலையில் இவர் நடிப்பு மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவ்வாக இருந்து அடிக்கடி ஃபோட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து லைக்குகளையும் கமாண்டுகளையும் அள்ளிக் கொண்டிருக்கும் இவர் தனியாக யூடியூப் சேனலில் வைத்திருக்கிறார். அதில் தற்போது ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதை ரசிகர்கள் பலரும் பார்த்து தங்களுடைய அனுதாபங்களை கூறி இனி பின்பற்றுவதாகவும் கூறி வருகின்றனர்.

மார்பகத்தில் கட்டி
அந்த வீடியோவில் தான் மருத்துவமனையில் இருப்பதாக கூறி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு மார்பகத்தில் கட்டி இருந்ததற்காக ஆபரேஷன் நடந்தது. அப்போது வழக்கமாக செக்கப்புக்கு ஹாஸ்பிடலுக்கு போய் வந்தேன். ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு போக வேண்டிய செக்கப்புக்கு நான் போகவில்லை. அப்போது அது எனக்கு பெரியதாக எதுவும் தெரியவில்லை. ஆனால் கடந்த சில தினங்களாக ஆபரேஷன் செய்த இடத்தில் வலி அதிகமாக இருக்கிறது. ஆபரேஷன் செய்த பிறகு கட்டி இருந்த இடம் காலியாக இருந்ததாகவும், வேஸ்ட் வைத்து அதை தையல் போட்டு இருப்பதாகவும் டாக்டர்கள் கூறியிருந்தார்கள்.

விழிப்புணர்வு வார்த்தை
ஆனால் இப்போது வலி அதிகமாக இருப்பதால் டாக்டரிடம் செல்லலாம் என்று முடிவு செய்து ஹாஸ்பிடலுக்கு வந்திருக்கிறேன் என்று ஹாஸ்பிடல் உள்ளே சென்றது முதல் வெளியில் வருவது வரைக்கும் அந்த வீடியோவில் வெளியிட்டுள்ளார். பிறகு தனக்கு ஹார்மோன் சேஞ்ச் காரணமாக இந்த வலி வந்ததாகவும் மற்றபடி பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்றும் கூறினார்கள் என கூறியிருக்கிறார். இப்போது தான் தனக்கு நிம்மதியாக உள்ளது உங்களுக்கும் இப்படி ஏதாவது உடலில் பிரச்சனை இருந்தால் உடனடியாக டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று அந்த விழிப்புணர்வு வீடியோவை முடித்திருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
டேய் நம்ம பாண்டியன் படம்ப்பா! தியேட்டரில் ஒன்ஸ்மோர் கேட்டு அலறிய கூட்டம்! அந்த 1 சீன் சரித்திர சாதனை -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications