அந்த படத்தில் பிகினியில் நடித்ததால் நடந்த சம்பவம்! பல வருடங்களுக்கு பிறகு வருத்தத்தை பகிர்ந்த பிரியா மணி
சென்னை: தேசிய விருது பெற்ற நடிகைகளில் நடிகை பிரியாமணி முக்கியமானவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள இவர் தற்போது மீண்டும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றுக் கொண்டு வருகிறார். கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும், பெண்களை மையமாகக் கொண்ட கதைகளிலும் நடிப்பது மூலம் தனக்கென ஒரு இடத்தை அவர் உருவாக்கி வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் பிகினி உடையில் நடித்தது குறித்து தற்போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பாரம்பரிய கதாபாத்திரங்களால் உருவான பெயர்
திரைப்பட உலகில் ஆரம்ப காலத்தில் இருந்து பிரியாமணி பெரும்பாலும் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படங்களிலும் பாரம்பரியமான கதாபாத்திரங்களிலும் தான் நடித்தார். அதனால் ரசிகர்கள் மனதில் அவர் ஒரு "குடும்ப நாயகி" என்ற அடையாளத்துடன் பிரபலமானார் அறியப்பட்டார்.
தமிழில் பருத்திவீரன் படத்தில் நடித்ததன் மூலம் அவர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். அந்தப் படத்தில் அவர் நடித்த முத்தழகு கேரக்டரை இப்போது உள்ள தலைமுறையினர் கூட தெரியும். சோசியல் மீடியாவில் அவருடைய பல டயலாக்குகள் ரீல்ஸாக வைரல் ஆகி வருகிறது. அந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பிறகு பல மொழிகளில் தொடர்ந்து நடித்தார்.
ஆனால் அவரது வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய ஒரு சம்பவமும் நடந்தது.
நீச்சல் குள காட்சியில் பிகினி
தெலுங்கில் ட்ரோனா என்ற படத்தில் நடிகர் நிதின் உடன் பிரியாமணி நடித்திருந்தார். அந்த படத்தில் நீச்சல் குளத்தில் வரும் ஒரு காட்சிக்காக அவர் பிகினி உடையில் தோன்றினார். அந்த காலத்தில் இது பெரிய பேசுபொருளாக மாறியது. ஏனென்றால் அதற்கு முன்பு வரை ட்ரெடிஷனலான கேரக்டரில் மட்டுமே நடித்திருந்த பிரியாமணி திடீரென இப்படியான தோற்றத்தில் வந்தது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
அந்த காட்சியில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பரவி வந்தது. அந்த காலத்தில் இருந்து இன்றுவரை சமூக வலைதளங்களில் அந்த புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகி கொண்டே இருக்கின்றன.
ஏன் அந்த காட்சியில் நடித்தார்?
நீண்ட காலமாக இந்த விஷயம் குறித்து பிரியாமணி வெளிப்படையாக அதிகம் பேசவில்லை. ஆனால் சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் அந்த அனுபவத்தை பற்றி பேசினார். அவர் கூறியதாவது, அந்த காட்சி இயக்குநரின் அட்வைஸால் தான் எடுத்ததாக கூறினார். அந்த காட்சியை கொஞ்சம் கவர்ச்சியாக படமாக்க வேண்டும் என்பதுதான் இயக்குநரின் விருப்பமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் நடிகையாக ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்காமல், வித்தியாசமான முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்று தான் நினைத்ததாகவும் அவர் கூறினார்.
வெளிநாடுகளில் இது சாதாரணம்
இந்த விஷயம் குறித்து பேசும்போது அவர் இன்னொரு கருத்தையும் தெரிவித்தார். "வெளிநாடுகளில் கடற்கரை அல்லது நீச்சல் குளங்களுக்கு செல்லும் போது பெண்கள் நீச்சல் உடை அல்லது பிகினி அணிவது மிகவும் சாதாரணமான விஷயம். அதனால் ஒரு படத்தில் நீச்சல் குள காட்சிக்காக அந்த உடையை அணிவது எனக்கு அப்போது பெரிதாக வித்தியாசமாக தோன்றவில்லை. அதனால் அதிகம் யோசிக்காமல் அந்த காட்சியில் நடித்தேன்" என்று அவர் கூறினார்.
இன்று வந்தால் சற்று யோசிப்பேன்
அதே நேரத்தில் இப்போது அந்த மாதிரியான காட்சி வந்தால் சற்று யோசிப்பேன் என்றும் பிரியாமணி கூறியுள்ளார். "அப்போது நான் வேறு விதமாக நினைத்தேன். ஆனால் காலப்போக்கில் நம்முடைய பார்வையும் அனுபவமும் மாறுகிறது. இப்போது அப்படிப்பட்ட காட்சி வந்தால் கொஞ்சம் அதிகமாக யோசித்து தான் முடிவு எடுப்பேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
படம் தோல்வி... ஆனால் காட்சி வைரல்
தெலுங்கில் வெளியான அந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை. வசூல் ரீதியாக அது தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த படத்தில் பிரியாமணி நடித்த நீச்சல் குள காட்சி மட்டும் ரசிகர்களிடையே பெரிய கவனத்தை பெற்றது. இன்றும் சமூக வலைதளங்களில் அவரது அந்த புகைப்படங்கள் மீண்டும் மீண்டும் பகிரப்பட்டு வருகின்றன.
பல மொழிகளில் வெற்றி
பிரியாமணி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான The Family Man சீரிஸில் நடித்ததன் மூலம் வட இந்திய ரசிகர்களிடமும் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.
தனிப்பட்ட வாழ்க்கை
பிரியாமணி தனது நீண்ட நாள் நண்பரான முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து திரைப்படங்களிலும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.ஸஇன்றும் பல மொழிகளில் பட வாய்ப்புகள் கிடைத்து வரும் நடிகையாக பிரியாமணி திகழ்கிறார். கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதன் மூலம் தனது தனித்துவமான பாதையை அவர் தொடர்ந்து உருவாக்கி வருகிறார்.
ஒரு காலத்தில் பேசப்பட்ட அந்த பிகினி காட்சி இன்றும் ரசிகர்கள் மத்தியில் நினைவில் இருக்கும் விஷயமாக இருந்தாலும், நடிகையாக பல விதமான கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்தவர் என்ற பெயர்தான் பிரியாமணிக்கு இன்று அதிகமாக இருக்கிறது.
-
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
நடிகர் தியாகராஜனுக்கு கார் ஷோரூமில் நடந்த அவமானம்! இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்கலையே! நெகிழ வைத்த தருணம் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications