திருமணம் என்பது.. உங்களுக்கு சரியான நபர் இருந்தால்..!! திருமண நாளில் உருக்கமான பதிவை வெளியிட்ட ராதா
சென்னை: தன்னுடைய திருமண நாளில் நடிகை ராதா திருமணத்தை பற்றி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று பலரும் சொல்வார்கள் தற்போது அதற்கு அழகான விளக்கத்தை ராதா கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
தன்னுடைய திருமண நாளில் ராதா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளை பற்றி வெளியிட்ட உருக்கமான தகவலுக்கு பலரும் வாழ்த்துக்களை கமெண்ட்களில் பொழிந்து வருகிறார்கள்.

80ஸ் கனவு கன்னி
80s களின் கனவு கன்னிகளில் ஒருவராக இருந்து வரும் ராதா தற்போது உள்ள தலைமுறைனரையும் கவனத்தை ஈர்த்து வருகிறார். நடிப்பு, நடனம், வசனம் என தனது தனித்துவமான திறமையினால் அப்போ இருந்து இப்போ வரைக்கும் தன்னுடைய ரசிகர்களை இவருடைய புகழை பாட வைத்து வருகிறார். திரை உலகில் சிறு வயதிலேயே அறிமுகமானாலும் இவருடைய திரை பயணம் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது. பொதுவாகவே திரைத்துறையில் திருமணம் செய்து கொண்ட பலரும் நீண்ட நாட்களாக மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் இருப்பதில்லை. புரிதல் இல்லாமல் பிரிந்து விடுவார்கள் என்ற பொதுவான கருத்து சமூகத்தில் பரவி வரும் அதனை உடைக்கும் பொருட்டு ராதா தன்னுடைய கணவர் மீது அன்பை சமூக வலைத்தளத்தில் பொழிந்துள்ளார்.

அதிகரிக்கும் லைக்குகள்
திரைப்படங்களில் நடிகையாக மட்டுமல்லாமல் சின்னத்திரையில் நடுவராகவும் ராதா ஜொலித்து வருகிறார். இவருடைய அழகான தமிழ் பேச்சை கேட்பதற்காக இவருடைய ரசிகர்கள் பலர் இவர் நடுவராக கலந்து கொண்ட ஜோடி நம்பர் ஒன் சீசன் ஆறிலிருந்து 9 வரை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார்களாம்.அது மட்டும் அல்லாமல் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி எட்டாவது சீசனில் இவர் கலந்து கொண்ட எபிசோடுகள் பலருடைய கவனத்தை ஈர்த்து வந்ததாம். நடிப்பில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கும் ராதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவிற்கு ரசிகர்கள் லைக் பட்டனை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

உருக்கமான வார்த்தைகள்
தன்னோட திருமண நாளை எளிமையாக தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தோடு கொண்டாடிய ராதா, "திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன, உங்களுக்கு சரியான நபர் இருந்தால் நீங்கள் பூமியிலும் சொர்க்கத்தை அனுபவிக்க முடியும். எனது மற்ற பாதியும் எங்கள் குழந்தைகளும் சொர்க்கத்தை முழுமையாக்குகிறார்கள்" என்று தன்னுடைய மகிழ்ச்சியை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களோடு பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் ராதாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஒரு சிலர் புரிதல் இல்லாமல் திருமண வாழ்க்கையில் இருந்து விலகி விட்டாலும் இந்த மாதிரி வார்த்தைகளை கேட்கும் போது அவர்களுக்கும் புரிந்தால் சரி என்று பலர் கூறி வருகின்றனர்.

31வது திருமண நாள் ஸ்பெஷல்
ராதாவின் 31 வது திருமண நாளுக்கு அவருடைய கணவர் அவருக்கு கொடுத்த அழகான கம்மலை மிகவும் சந்தோஷமாக அணிந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிக்காட்டி இருக்கிறார். சில ரசிகர்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்றும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ராதாவின் திருமண நாள் மகிழ்ச்சியை அவருடைய மகளான நடிகை கார்த்திகா வீடியோவாக பதிவு இருக்கிறார். இந்த வீடியோவில் ராதிகா கார்த்திகா முகத்தை காட்டவில்லை என்றாலும் அவருடைய அம்மாவிற்கு வாழ்த்துக்களை மட்டும் கூறி இருக்கிறார். ராதாவின் இந்த மகிழ்ச்சியை எப்போதும் பார்க்க வேண்டும் என்று அவருடைய தீவிரமான ரசிகர்கள் உங்கள் கணவரோடு குழந்தைகளோடும் நீடூடி வாழ வேண்டும் என்று தங்களுடைய மொத்த அன்புகளையும் கமெண்ட்களில் காட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications