80ஸ் நடிகைகள் பானுப்பிரியாவை ஒதுக்கிட்டாங்க.. சோசியல் மீடியாவில் சொல்றதெல்லாம் பொய்.. தங்கை சாந்திப்பிரியா எமோஷனல்
சென்னை: நடிகை பானுப்ரியாவின் சகோதரியான சாந்திப்பிரியா சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய குடும்ப விஷயங்கள் பற்றியும் தன்னுடைய அக்கா உடல்நிலை குறித்தும் பல விஷயங்கள் பகிர்ந்து இருந்தார். 80ஸ் ரீ யூனியனில் நடிகை பானுப்பிரியா மட்டும் கலந்து கொள்ளாதது ஏன் என்று கேட்கப்படும் கேள்விகளுக்கு வருத்தமாக பதில் அளித்து இருந்தார்.
சினிமாவில் ஒரு சில நடிகைகளின் சகோதரிகள் நடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை குறிப்பிட்டு அடையாளப்படுத்தும் போதுதான் இவருடைய சகோதரியா இது என்று பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும். அது போலத்தான் நடிகை பானுப்பிரியாவின் சகோதரியான சாந்தி பிரியாவும் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

80ஸ் கதாநாயகி பானுப்ரியா
அதிலும் பலருடைய ஃபேவரைட் திரைப்படங்களில் ஒன்றான "எங்க ஊரு பாட்டுக்காரன்" திரைப்படத்தில் "செண்பகமே செண்பகமே" என்ற பாடலில் நடித்த சாந்திப்பிரியா அந்த நேரத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதுபோல பானுப்பிரியா 80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் 90ஸ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்தான். ஆனால் சில வருடங்களாக அவர் எந்த பேட்டிகளிலும் கலந்து கொள்வதில்லை. திரைப்படங்களிலும் நடிப்பதில்லை.
நடிகை பானுப்பிரியா டான்ஸ்
இதனால் பானுப்ரியாவிற்கு என்ன ஆச்சு என்ற கேள்வி அவருடைய ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த பானுப்பிரியா 'செல்லமே' திரைப்படத்தில் "கும்மியடி கும்மியடி" என்ற பாடலுக்கு அழகாக டான்ஸ் ஆடி இருப்பார். இந்த பாடல் ரசிகர்களின் எவர் கிரீன் பாடல். பானுப்பிரியா நடிகை மட்டுமல்ல நடன கலைஞரும் உண்டு. ஆனாலும் அவர் குறித்து சில வதந்திகளும் சமீப காலமாகவே பரவி வருகிறது.
நடிகை சாந்தி பிரியா பேட்டி
பானுப்பிரியாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவரை சிலர் ஏமாற்றி விட்டார்கள் அதனால் அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று எல்லாம் அவர் பற்றி தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து பானுப்ரியாவின் சகோதரியான சாந்திப்பிரியா பேசியிருக்கிறார். சாந்தி பிரியா பேசுகையில் நான் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தேன் ஆனால் இப்போதும் என்னை ரசிகர்கள் அடையாளப்படுத்தி பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

வதந்திக்கு பதிலடி
எங்க அக்கா பானுப்ரியாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் அழகான நடிகை என்று இப்போதும் பலர் அவரை கூறுவது எனக்கு பெருமையாக இருக்கிறது. ஆனால் அவர் பற்றி தேவையில்லாத வதந்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அது எதுவுமே உண்மை கிடையாது. அக்காவுக்கு உடல்நிலை சரியில்லை அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று எல்லாம் கூறி வருகிறார்கள் அது உண்மை இல்லை.
வருத்தம் தான்
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு அதிகமான ஏமாற்றங்கள் நடந்து விட்டது. அதுதான் சினிமாவை விட்டு விலக காரணம். அக்கா எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார். அந்த படங்கள் ஹிட் ஆகி இருக்கிறது. கடைசியாக அவர் நடித்த சில திரைப்படங்களில் அவரிடம் சிலர் ஏமாற்றிவிட்டார்கள். அவரிடம் சொன்ன கதை ஒன்று, ஆனால் அவர் காட்சிகள் வேறு விதமாக வைத்து விட்டார்கள். இது அவர்களுக்கு ரொம்பவும் வருத்தத்தை கொடுத்து இருந்தது.
ஏமாற்றம்
இத்தனை படங்களில் நடித்தும் நம்மை இப்படி ஏமாற்றிட்டாஙகளே என்று ஆதங்கம் இருந்து கொண்டே இருந்தது. அதற்கு பிறகு அவங்க சினிமாவை விட்டு விலக தொடங்கிட்டாங்க. ஆனால் அது தெரியாமல் சிலர் youtube சேனலிலும் சோசியல் மீடியாவிலும் அவர் குறித்து அவதூறு பரப்பி வருகிறார்கள். இதற்காக நாங்கள் வழக்கு தொடுக்க முடியும் ஆனால் நாங்கள் அப்படி செய்ய விரும்பவில்லை. ஆரம்பத்தில் இருந்து எங்கள் பற்றி எந்த வதந்திகள் பரவி வந்தாலும் நாங்கள் அதற்கு விளக்கம் கொடுத்து எங்களுடைய நேரத்தை கெடுத்துக் கொண்டது கிடையாது. ஆனால் இப்போது சிலர் எல்லை மீறி பேசிக் கொண்டிருக்கிறார்கள், அது வருத்தத்தை ஏற்படுகிறது.

எல்லாம் பொய்
அதுபோல 80ஸ் நடிகர்கள் ரீயூனியன் ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறார்கள். அதில் அக்காவை மட்டும் எல்லோரும் விலக்கி வச்சுட்டாங்க. இது எனக்கு ரொம்பவும் வருத்தத்தை கொடுத்திருக்கிறது. சிலர் சொல்றாங்க அக்காவுடைய நம்பர் இல்ல, அவங்கள எப்படி காண்டாக்ட் பண்றதுன்னு தெரியல என்று, ஆனால் அது எதுவும் உண்மை கிடையாது. அக்காவின் நம்பர் பலரிடம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் எங்க அண்ணனுடனும் பல நடிகர்கள் நடிகைகள் இப்போதும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
சாந்தி பிரியாவின் வருத்தம்
அவர்கள் நினைத்தால் அக்காவை கூப்பிட முடியும். ஆனால் எதற்காக அவர்கள் அக்காவை கண்டு கொள்ளவில்லை என்று தெரியவில்லை. எனக்கு அந்த வருத்தம் இருக்கிறது. என்னுடைய அண்ணன் இதைப் பற்றி பேசாதே என்று சொல்கிறார் ஆனால் என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை என்று சாந்திப்பிரியா தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications