புடவை கட்டியபடியே.. கையை கீழே ஊன்றி.. வெறித்தன புஷ் அப்.. கம்பேக் நடிகை தாறுமாறு
சென்னை: நடிகை ஸ்ரீயா ரெட்டி மீண்டும் தனது சினிமா பயணத்தை தொடங்கி இருக்கிறார். திமிரு படத்திற்கு பிறகு ஸ்ரீயாவின் தற்போதைய லேட்டஸ்ட் ஒர்க் அவுட் பலரையும் கவர்ந்துள்ளது.
நடிகைகள் மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலருக்கும் முன்னுதாரணமாக புடவை கட்டிக்கொண்டு புஷ் அப் எடுத்த ஸ்ரீயா ரெட்டியின் லேட்டஸ்ட் வீடியோ பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடிப்பு இல்லை என்றாலும் தயாரிப்பாளராக கலம் இறங்கி இருக்கும் ஸ்ரீயா தான் எங்கிருந்தாலும் தன்னுடைய வேலையில் கவனமாக இருப்பதாக கூறி இருக்கிறார்.

சாமுராயில் அறிமுகம்
கிரிக்கெட் வீரரான பரத் ரெட்டியின் மகளான ஸ்ரீயா ரெட்டி நடிப்பின் மீது இருந்த ஆசையின் காரணமாக அவருடைய தந்தைக்கு தெரியாமலே அவருடைய கை எழுத்தை போட்டு திரைப்படங்களில் நடிப்பதற்கு விருப்பத்தை தெரிவித்து இருந்தாராம். ஆனாலும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் திரைப்படங்களில் ஸ்ரீ ரெட்டிக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் முதல் முதலில் தமிழில் அறிமுகமான சாமுராய் திரைப்படம் ஸ்ரீயாவால் மறக்க முடியாது என்று கூறி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் ஸ்ரீயா நடித்துள்ளார். இந்த படம் பெரிய அளவில் வெற்றியை கொடுக்காவிட்டாலும் இவருக்கு தமிழ் திரையுலகில் வரவேற்பை கொடுத்து இருந்தது.

மிரட்டிய ஈஸ்வரி
திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே ஸ்ரீயா எஸ் எஸ் மியூசிக் எனும் டிவி சேனலில் விஜேவாக தான் அறிமுகம் ஆகி இருக்கிறார். எஸ் எஸ் சேனலில் இவர் விஜே ஸ்ரீயா என்ற பெயரில் பிரபலமாக இருந்துள்ளார். வீஜேவாக அறிமுகம் ஆகி திரை தறையில் நடிகையாக மாறிய ஸ்ரீயாவுக்கு பெயர் வாங்கி கொடுத்தது என்று சொன்னால் திமிரு படம் தான். திமிரு படத்தில் ஈஸ்வரி கேரக்டரில் பார்க்கும் ரசிகர்கள் பலரையும் மிரட்டி இருந்தார். அவருடைய பேச்சு மட்டுமல்லாமல் உடல் அசைவுகள் கூட அந்த திரைப்படத்தில் நடித்திருந்தது. அப்படியே தத்துரூபமாக அந்த கேரக்டராகவே ஸ்ரீயா மாறி அனைவரையும் கவர்ந்திருந்தார்.

திருமண வாழ்க்கை
திமிரு படத்திற்கு பிறகு வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம், சில சமயங்களில், சுழல் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீயா திரைத்துறையை விட்டு திருமண பந்தத்தில் அடி எடுத்து வைத்திருந்தார். ஸ்ரீயா திரைத்துறையைச் சார்ந்த நடிகரும் தயாரிப்பாளருமான விக்ரம் கிருஷ்ணாவை 2008இல் திருமணம் செய்து கொண்டார். விக்ரம் கிருஷ்ணா திமிரு படத்தில் ஸ்ரீயாவுடன் நடித்த விஷாலின் அண்ணன் தான். திமிரு படத்தில் விஷால் வேண்டும் என்று திமிராக நடித்து வந்த ஸ்ரீயா அவரின் அண்ணியாக நிஜ வாழ்க்கையில் மாறிப் போனார்.

தயாரிப்பாளராக அறிமுகம்
திருமணத்திற்கு பிறகு நடிகையாக மட்டுமல்லாமல் தன்னால் தயாரிப்பாளராகவும் ஜொலிக்க வேண்டும் முடியும் என்று ஒரு சில திரைப்படங்களை ஸ்ரீயா தயாரித்து கொண்டிருக்கிறார். தன்னுடைய கணவரின் தம்பியான விஷால் நடித்த தோரணை திரைப்படத்தை 2009 இல் தயாரித்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் 2011 ஆம் ஆண்டில் வேதி என்ற திரைப்படத்தையும் ஸ்ரீயா தயாரித்துள்ளார். தற்போது தான் திரைப்பட சூட்டிங் சென்றிருக்கும் நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். எனது புதிய திட்டத்திற்காக படப்பிடிப்பில் நான்! என்று கூறியுள்ளார். "ஒர்க்கவுட் என்று வரும்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் எந்த கதாபாத்திரத்தில் இருக்கிறீர்கள் என்பதை பொருள்படுத்தாமல் அதை செய்ய வேண்டும்" என்று பலருக்கும் மோட்டிவேஷன் ஆக ஸ்ரீயா புடவையில் வொர்க் அவுட் செய்தது தற்போது பலரையும் கவர்ந்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications