பிக் பாஸில் அறிமுகமாகும் ஜீ தமிழ் சீரியல் நடிகை..பலர் பற்றிய உண்மை வெளிச்சத்துக்கு வந்து விடும் போல
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்து தகவல்கள் கசிந்து வருகிறது.
வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் ஆரம்பிக்கும் முன்பு இப்படித்தான் பல போட்டியாளர்கள் கலந்து கொள்வதாக வதந்திகள் கிளம்பி கொண்டிருப்பது போல இப்போதும் இருக்குமோ என்று சிலர் எதிர்பார்த்து வருகிறார்கள்.
எதிர்பார்த்த போட்டியாளர்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று ஒரு சில பெயர்களை ரசிகர்கள் உச்சரித்து வருகின்றனர் அதில் ஸ்ரீநிதியின் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

ஆரம்பகால வாழ்க்கை
சிறு குழந்தையாக சீரியலில் அறிமுகமான ஸ்ரீநிதி தற்போது பல சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். சர்ச்சைகளுக்கு பெயர் போன ஸ்ரீநிதி குழந்தையாக இருக்கும் போதே அவருடைய அப்பா கேன்சரால் இறந்துவிட்டாராம். அதற்குப் பிறகு அம்மாவுடைய வளர்ப்பினால் தான் இவர் வளர்ந்து வந்துள்ளார். அம்மா ஒரு யோகா டீச்சர் ஆக இருந்திருக்கிறாராம். இப்போது தேங்காய் பிசினஸ் செய்து கொண்டு இருக்கிறாராம். ஆரம்பத்திலிருந்து இவரது அப்பாவை போல போல்டாக தான் இருந்திருக்கிறார்.

கடனுக்கான காரணம்
ஸ்ரீநிதியின் அப்பா இறந்த பிறகு இவர்களுடைய மொத்த குடும்பமும் டோட்டலாக மாறிவிட்டதாம். ஆரம்பத்தில் இருந்தே இவர் செய்யும் செயல்களை பார்த்து சிலர் இவரை லூசு, மெண்டல் என்றெல்லாம் கலாய்த்து இருக்கிறார்களாம். சில நேரங்களில் அவர்களை கோபத்தில் ஸ்ரீநிதி அடித்திருக்கிறாராம். அது மட்டும் அல்லாமல் ஸ்ரீநிதி இவருடைய அம்மாவால் அதிகமாக கடன் பட்டு விட்டதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவருடைய அம்மா யாரைப் பார்த்தாலும் பாவம் என்று உதவி செய்து விடுவாராம். அதுவும் கையில் பணம் இல்லை என்றாலும் கடன் வாங்கியாவது உதவி செய்து இருக்கிறாராம். இதனால் ஸ்ரீநிதி அதிகமான கடனில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.இதை பேட்டி ஒன்றில் கூட ஸ்ரீநிதி குறிப்பிட்டு இருக்கிறார்.

எதிர்பார்க்கும் ரசிகர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 7 சி எனும் சீரியல் மூலமாகத்தான் சின்ன திரையில் ஸ்ரீநிதி அறிமுகமாகி இருக்கிறார். அதற்குப் பிறகு பல சீரியல்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்துள்ளார். இவர் கோபம் வந்தால் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் தான் பல நேரங்களில் இவருடைய அம்மாவை கூட அடித்ததாக அவரே கூறி இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு நபர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தால் என்டர்டைன்மென்ட்க்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் தங்களுக்கு தகுந்தார் போல் இவரைப் பற்றி பிக் பாஸ் அணியினருக்கு தெரிகின்ற வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

பரபரப்பை ஏற்படுத்திய பேச்சு
ஏற்கனவே ஒரு சில மாதங்களுக்குப் பின் முன்புதான் இவருடைய நெருங்கிய தோழிகளான நட்சத்திரா, சைத்ரா ரெட்டி, ஷபானா ஆகியோரை பற்றி இவர் பேசிய பரபரப்பான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆரம்பத்தில் ஒன்றாக நட்பாக இருந்தால் இவர்களுடைய நட்பு அணி தற்போது பெரிய அளவில் ஒன்றாக இல்லை என்பது இவருடைய கருத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. இதனால் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பல ரகசியங்கள் வெளிவரும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஒரு வாக்குமூலத்தால் தலைகீழான கதை! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கதிரை காப்பாற்ற வந்த முத்துவேல்... ஆனால் அதற்குள் நடந்த கொடூரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications