நீயா நானா நிகழ்ச்சியில் கணவன் பேசிய வார்த்தை.. மனைவியின் அதிரடி பதில்.. இப்படி சொல்லிவிட்டாரே..!!
சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் சூப்பர் அப்பா பட்டத்தை வென்ற சீனி ராஜா பேசியதை குறித்து அவருடைய மனைவி மனம் திறந்து இருக்கிறார்.
கணவரின் மனதிற்குள் இவ்வளவு வலி இருக்கும் என்பதை இப்போதாவது புரிந்து கொண்டார் என அவருடைய மனைவி பேசிய வார்த்தைகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அவசரமான உலகம்
தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் அவசரமான உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வீட்டில் இருப்பவர்களையும் சொந்த பந்தங்களையும் மறந்து பணத்தை மட்டுமே முக்கிய குறிக்கோளாக அனைவரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். இது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த சூழ்நிலையை தான் தற்போது நீயா நானா நிகழ்ச்சியில் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது என்று சமூக நல விரும்பிகள் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தன்னுடைய கணவரின் மனதிற்குள் இருக்கும் வலிகளை ஒரு மனைவி புரிந்து கொள்ளாமல் இருப்பது நீயா நானா நிகழ்ச்சியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று கூறி வருகிறார்கள்.

வைரல் தம்பதி
இந்த வாரம் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு கணவர் படிக்காமலும் குறைவாகவே சம்பளம் வாங்குபவராகவும் இருப்பதால் அவருடைய மனைவி படித்து அவரைவிட அதிகமாக சம்பளம் வாங்கும் நிலையில் அவரை பொது இடத்தில் அவமானப்படுத்தி விட்டார் என்று சமூக வலைத்தளத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தனது மகளின் ப்ராக்ரஸ் கார்டில் கணவர் ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார், என்றும் அவர் அதில் ஏபிசிடி தான் படித்துக் கொண்டிருக்கிறார் என்று நக்கலாக பேசிய வார்த்தைகள் தற்போது சமூக வலைத்தளத்தில் மீம்ஸ் களாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இதை குறித்து அந்த வைரல் தம்பதியின் மனைவி கூறிய பதில் பலருக்கும் வியப்பை கொடுத்துள்ளதாம்.

வேலை அவசரம்
நீயா நானா நிகழ்ச்சிக்கு பிறகு என்னுடைய கணவரை பற்றி நான் அதிகமாக புரிந்து கொண்டுள்ளேன். அவர்களுடைய மனதிற்குள் இவ்வளவு வலி இருக்கிறது என்பதை இப்போதுதான் எனக்குத் தெரிகிறது என்று அவருடைய மனைவி கூறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய கணவருக்கு உடல்நலம் இல்லாமல் இருப்பதால் தான் மட்டும் வேலை செய்து வருவதால் வேலை அவசரத்தில், இவர் இப்படி நடந்து கொள்கிறாரே?? என்று எனக்கு சில நேரங்களில் கடுப்பாக இருப்பதால் நான் அதை கண்டு கொள்வதில்லை. ஆனால் தற்போது இவர் மனதில் இருக்கும் வருத்தம் எனக்கு வேதனை அளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.

வில்லி மனைவியா
கணவரின் மனதிற்குள் இருக்கும் வேதனையை நீயா நானா நிகழ்ச்சி எனக்கு வெளிக்காட்டி இருக்கிறது. இனி இதுபோல எப்போதும் செய்யமாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தான் அந்த நிகழ்ச்சியில் பேசியது எப்போதும் போலதான் பேசினேன். எங்கள் வீட்டிலும் நாங்கள் இருவரும் ஜாலியாக இப்படித்தான் இருப்போம். அதை அப்படியே நான் பேசினேன். அது இப்படி மாறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சமூக வலைத்தளத்தில் நான் இப்போது "வில்லி" மனைவியாக மாறி இருக்கிறேன் என்று வருத்தமாக இருந்தாலும் என்னுடைய கணவரை புரிந்து கொள்ள முடிந்தது அது போதும் என்று கூறியிருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications