பொருட்களை தூக்கி உடைத்த அக்ஷரா...நொடிப்பொழுதில் தப்பித்த பாவனி
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொருட்களை உடைப்பது தற்போது சாதாரணமாகி விட்டது போல.
கோபத்தின் உச்சத்தில் இருக்கும் அக்ஷராவின் செயலைப் பார்த்து பாவனி பதறி போயிருக்கிறார்.
கரணம் தப்பினால் மரணம் என்று சொல்வார்களே அது இது தானோ என்று பாவனியின் முகத்தைப் பார்த்து ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பூகம்பமாய் வெடித்த புது டாஸ்க்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் புதுசு புதுசாக டாஸ்க் வைத்து போட்டியாளர்களுக்குள் இருக்கும் கேரக்டரை வெளியே கொண்டு வருவதில் பிக்பாஸ் திறமையாக செயல்பட்டு வருகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். காமெடியான டாஸ்க் கொடுத்தாலும் சரி, ஹெவியான டாஸ்க் கொடுத்தாலும் சரி அதில் போட்டியாளர்கள் தாங்கள் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்று போட்டி போட்டுக் கொண்டு தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர். ஒரு சில நேரங்களில் சண்டை சச்சரவுகளும் பஞ்சமில்லாமல் வெடித்து வருகிறது.

மீண்டும் ரசிகர்களை கவர்ந்த பாவனி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் பாவனியின் செயல்பாடு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருந்த நேரத்தில் தற்போது அவர் விளையாட்டை நன்றாக விளையாட ஆரம்பித்து விட்டார் என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவர் அவருடைய கேரக்டரில் தான் இருக்கிறார் என்று பலர் அவருக்கு மீண்டும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த கனா காணும் காலங்கள் டாஸ்க்கில் கூட பாவனி அவருடைய விளையாட்டை சிறப்பாக விளையாடி வருகிறார் என்று பலர் கூறி வருகின்றனர்.

நெருக்கமானவர்களின் பிரிவு
என்னதான் ராஜு பாவனியை முகத்துக்கு நேராகவே உன்னுடைய கேரக்டர் எனக்கு பிடிக்கவில்லை என்று குறை கூறிக் கொண்டிருந்தாலும் தற்போது அவருக்கு நாம் செய்வது தவறு தானோ என்று நினைக்க வைத்து விட்டார் என்று பாவனியின் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பாவனியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் ஆகி வீட்டை விட்டு வெளியே சென்று விடுகின்றனர். இது மேலும் அவருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது என்பது பாவனியின் முகத்தில் தெளிவாக தெரிகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Recommended Video

அதிர்ந்து போன பாவனி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் அக்ஷராவிற்கு சண்டை வரும் போதெல்லாம் எனக்கு கத்தி பேசவே தெரியாது..அப்படி நான் பழகவில்லை என்று கூறிக் கொண்டிருந்தார். ஒரு சில நேரங்களில் பிக்பாஸ் இடம் கூட இதனை பற்றி முறையிட்டு இருந்தார். ஆனால் இன்று நடக்கும் பிரச்சனையில் அக்ஷரா பாத்ரூமில் வைத்திருக்கும் பூந்தொட்டியை தூக்கி வீசி இருக்கிறார். அப்போது அருகில் இருந்த பாவனியின் அருகே திடீரென்று விழுந்துவிட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத பாவனி அதிர்ந்து போயிருக்கிறார். அதை பார்த்ததும் பாவனியின் ரசிகர்கள் ஐயோ நல்லவேளை...ஜஸ்ட் மிஸ்...என்று உச்சுக் கொட்டி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் அக்ஷராவிற்க்கு இந்த அளவிற்கு கோபம் தேவை இல்லாதது என்று புத்திமதி கூறி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications