சுற்றி சுற்றி ஆட்டம் போட்ட அக்ஷரா- வருண்...அசந்து போன ரசிகர்கள்
சென்னை: டான்ஸ் டாக்கில் அக்ஷரா மற்றும் வருண் டான்ஸை பார்த்து ரசிகர்கள் அசந்து போயிருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் சேர்ந்து இவ்வளவு அழகாக ஆட்டத்தை போடுவார்கள் என்று எதிர்பார்க்காத ரசிகர்கள் உச்சி கொட்டி வருகின்றனர்.
ஏற்கனவே அக்ஷரா மற்றும் வருண் பற்றி பல கிசுகிசுக்கள் வலம் வந்து கொண்டிருக்கும் போது இவர்களுடைய ஆட்டம் பலரையும் கவர்ந்துள்ளது.

தொடங்கிய வதந்திகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் காட்சிகளும், கிசுகிசுக்களும் ஏற்பட்டுவிடும். அதனால் இந்த மாதிரி தற்போதைய சீசனில் எதுவும் இல்லை என்று ரசிகர்கள் பீல் பண்ணி கொண்டிருக்கும்போது, ஒரு சில ரசிகர்கள் அக்ஷரா மற்றும் வருண் பற்றி பல கிசுகிசுக்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால் அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத இவர்கள் இருவருமே ஜாலியாக விளையாட்டை விளையாடி வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த டான்ஸ் போட்டி
நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் பலர் காலை வேக்கப் சாங் க்கு டான்ஸ் ஆடுவது இல்லை என்று பிக்பாஸ் இவர்களுக்கு ஒரு டான்ஸ் போட்டியை வைத்திருந்தது. அதில் போட்டியாளர்கள் இருவர் சேர்ந்து தங்களது திறமையை காட்ட வேண்டுமென்றும் பாட்டு நிறுத்தும் வரைக்கும் ஆடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறியிருந்தது. இதைத்தொடர்ந்து இதுவரைக்கும் டான்ஸ் ஆடாத ஒருசில போட்டியாளர்கள் கூட தற்போது நேற்று செம ஆட்டம் போட்டு அனைவரையும் அசர வைத்திருந்தனர். இதைப் பார்த்ததும் ரசிகர்கள் இது கூட நன்றாக இருக்கிறதே என்று கூறிவந்தனர்.

ஜோடிகளின் ஆட்டம்
ஜோடி ஜோடியாக போட்டியாளர்கள் ஆடிக் கொண்டிருக்கும்போது அக்ஷரா மற்றும் வருணின் ஆட்டத்தை பார்த்ததும் ரசிகர்கள் அசந்து போய் விட்டார்கள். ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் ஒரு நிமிடம் திகைத்துப் போய் விட்டனர். அதுவும் வருண் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக நிறைவேற்றிய மனதிருப்தியில் வளைந்து வளைந்து ஆடி அனைவரின் கண்களையும் அவர் பக்கமே இழுத்துக் கொண்டார். அவருக்கு சளைத்தவரல்ல என்று அவரை சுற்றி சுற்றி ஆடிவந்த அக்ஷராவும் நிரூபித்துவிட்டார். இவர்கள் இருவரின் கெத்தான ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் வா...வ் சொல்லி வந்தனர்.
Recommended Video

வைரலாகும் டான்ஸ் வீடியோ
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது வைல்ட் கார்ட் போட்டியாளரை அறிமுகப்படுத்துவதற்கு தான் இவர்களுக்கு டான்ஸ் போட்டி வைத்திருந்தாலும், இவர்களுடைய டான்ஸ் மற்றும் என்டர்டைன்மென்ட் ரசிகர்களை நன்றாக கவர்ந்து விட்டது. அதனால் அடிக்கடி இந்த மாதிரி ஒரு டான்ஸ் போட்டு எனர்ஜி ஏற்றுங்கள் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அக்ஷரா மற்றும் வருண் ஆடிய வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் அக்ஷராவின் ரசிகர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications