இரண்டாவது குழந்தைக்கு அம்மாவாக போகும் ஆலியா மானசா...வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: ராஜா ராணி சீரியல் புகழ் ஆலியா மானசா, சஞ்சீவ் தம்பதி தன்னுடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கிறது.
இப்படி இருக்கும் ஜோடியை விவாகரத்துச் செய்யப் போறாங்க என்று வதந்தியை கிளப்பி விட்டீர்களே என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
தங்களுடைய காதலுக்கு அடையாளமாக தற்போது இவர்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாட்டை வெளியிட்டிருக்கிறார்கள்.

ராஜா ராணி சீரியல் ஜோடி
விஜய் டிவி சீரியலில் பிசியாக இருக்கும் ஆலியா மானசா தற்போது இரண்டாவதாக கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அவருடைய கணவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலமாக பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். சீரியலில் காதலர்களாக நடித்து நிஜ காதலர்களாக மாறி விட்டனர்.

நிஜக் காதலர்கள்
சீரியலில் காதலிப்பவர்கள் திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல ஆனால் இவர்கள் திருமணம் முடிந்தாலும் என்றும் காதலர்களாகத்தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களை பற்றி அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பல வதந்திகள் கிளம்பி வரும். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இவர்கள் தங்களுடைய வாழ்க்கையிலும், முன்னேற்றத்திலும் கவனமாக இருந்து வருகின்றனர். இந்த இரண்டு ஜோடிகளுக்கும் ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது.

பிஸியான வாழ்க்கை
முதல் சீரியலில் ஆல்யா மானசா இளைஞர்கள் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து விட்டார். அதுமட்டுமல்லாமல் சஞ்சீவ் பெண் ரசிகர்களின் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்தார். தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் சீரியல்களில் நடித்து வருகின்றனர். சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகனாகவும், ஆலியா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஹேப்பி நியூஸ்
நடிகைகள் பலர் திருமணம் முடிந்திருந்தாலும் நடிப்பிற்க்காகவும், வாய்ப்புகளுக்காகவும், குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போட்டு வருகின்றனர். ஆனால் ஆலியா மானசா திருமணமான உடனேயே முதல் குழந்தையும் பெற்றெடுத்து விட்டர். அப்போது அவர் பாப்புலரான இடத்தில் இருந்தாலும் தனக்கு குழந்தை வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் .தற்போது அந்த குழந்தை இரண்டு வயதான நிலையில் இவர் மீண்டும் அம்மாவாக போகிறார் என்ற செய்தியை சஞ்சீவ் இன்ஸ்டாகிராமல் லைவ்வில், சஸ்பென்ஸாக ஹாப்பி நியூஸ் சொல்லி இருக்கிறார். இவர் இந்த நியூஸை சொன்னதும் இவருடைய ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications