ஆக்சிடென்ட் ஆகி காலில் கட்டோடு இருக்கும் ஆலியா மானசா செய்த செயல்.. கடமை உணர்ச்சிக்கு அளவில்லையா?
சென்னை: சின்னத்திரை நடிகை ஆலியா மானசாவிற்கு சமீபத்தில் தான் காலில் அடிபட்டு பெரிய அளவில் கட்டு போடப்பட்டிருக்கிறது.
கால்களை அசைக்க கூடாது என மருத்துவமனையில் கூறியிருக்கிறார்களாம்.
ஏற்கனவே இரண்டாவது குழந்தை பிறந்ததால் தான் நடித்து வந்த சீரியலில் இருந்து விலகி வந்தார் ஆலியா தற்போது தான் மீண்டும் புது சீரியலில் நடிக்கிறார்.
இந்த நிலையில் சீரியலுக்காக ஆலியா மனச செய்த செயலை அவருடைய கணவர் பாராட்டி ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.

ஹாஸ்பிடலில் இருந்து வீடியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் அறிமுகமான ஆலியா மானசா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலின் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தான் குழந்தை பிறந்த பிறகு கதாநாயகியாக நடிக்க அறிமுகமானார். இந்த நிலையில் ஆலியா மானசாவின் கால்களில் அடிபட்டு பெரிய கட்டு போடப்பட்டிருக்கிறது. தன்னுடைய கால்களில் எப்படி அடிபட்டது என்பதை தெரிவிக்காத ஆலியா மானசா, ஹாஸ்பிட்டலில் இருந்தபடியே கால்களில் கட்டு போட்டிருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் உருக்கமான வார்த்தைகளை பகிர்ந்து இருக்கிறார்.

உருக்கமான வேண்டுகோள்
நான் எதிர்பார்க்காத ஒன்று என்னுடைய வாழ்க்கையில் நடந்து விட்டது. கால்களில் பிராக்சர் ஆகி இருக்கிறது. என்னுடைய பிரண்ட்ஸ் மற்றும் என்னுடைய அன்பான ரசிகர்கள் எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் எளிமையாக குணமடைய வேண்டும் என்று என சோகத்தோடு ஆலியா மானசா வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நேற்று வரைக்கும் டான்ஸ் மாஸ்டரோடு செம ஆட்டம் போட்ட ஆலியா மானசா என்று கால்களில் கட்டு போட்டுக்கொண்டு இருக்கும் நிலையை பார்த்து ரசிகர்கள் பீல் பண்ணி கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

சன் டிவி இனியா
ஆலியா மானசா சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாகவே இருந்து வருகிறார். இவருக்கு instagram பக்கத்தில் 4.2மில்லியன் பாலோவர்ஸ் இருக்கின்றனர். முதல் சீரியலில் தன்னோடு நடித்த சஞ்சய் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆலியா சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் ஆலியா கடைசியாக நடித்து வந்த ராஜா ராணி சீசன் 2 சீரியலில் இருந்து விலகி இருந்தார். குழந்தை பிறந்ததும் உடல் எடை கூடியிருந்த ஆலியா மானசா மீண்டும் தன்னுடைய உடல் எடையை கஷ்டப்பட்டு குறைத்து பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார். இந்த நிலையில் இவர் மீண்டும் விஜய் டிவி சீரியலில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் அந்த சீரியலை விட்டுவிட்டு சன் டிவிக்கு வந்து விட்டார்.

கணவரின் பாராட்டு
இந்த நிலையில் மீண்டும் தான் இனியா சீரியலுக்கு நடிப்பதற்கு கிளம்பி விட்டேன் என்று அடுத்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் ஆலியா மானசா சீரியலில் நடிப்பதற்காக கிளம்புவதை அவருடைய கணவர் வீடியோவாக வெளியிட்டு ஆலியாவை பாராட்டி இருக்கிறார். உங்களுடைய கடமை உணர்ச்சியை பாராட்டுகிறோம் என்று அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

மன தைரியம் பெருசு தான்
ஏற்கனவே ஆலியா நடித்து வந்த சீரியலில் இருந்து இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததீல் விலகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் சன் டிவியில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு சில வாரத்தில் இவருக்கு ஏற்பட்ட விபத்தினால் இந்த சீரியலில் இருந்து விலகி விடுவார்களோ என்று அவருடைய ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் நான் மீண்டும் வந்து விட்டேன் என்று ஆலியா வெளியிட்ட வீடியோவை ரசிகர்கள் பாராட்டினாலும் பல ரசிகர்கள் இன்னும் ஒரு சில நாட்கள் ரெஸ்ட் எடுத்து இருக்கலாம் என அறிவுரைகளையும் கூறி வருகின்றனர்.
-
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
பெரிய தப்பு செய்த திரிஷா.. ஒரே ஒரு போட்டோவால் கொந்தளிப்பு.. இந்த நேரத்தில் இது தேவையா? வருத்தத்தில் ரசிகர்கள் -
காதலர் தினம் பட ஹீரோயினி சோனாலிக்கு வந்த சிக்கல்.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன புகார்.. நடிகை கொடுத்த விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications