Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக்பாஸ் சொன்ன ஒரு வார்த்தை... ஆனந்த கண்ணீரில் அமீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னுடைய ஆசையை நிறைவேற்ற பிக்பாஸ் இடம் வாழ்த்துக்களை அமீர் கேட்டுள்ளார்.

அமீர் எதிர்பார்க்காத விதமாக வாழ்த்துக்களை கூறி அமீரை பிக் பாஸ் கண் கலங்க வைத்துள்ளது.

டான்ஸ் மாஸ்டராக அறிமுகம்

டான்ஸ் மாஸ்டராக அறிமுகம்

ஒரு டான்ஸ் மாஸ்டராக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து தன்னுடைய திறமையால் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றிருக்கும் அமீர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல டிவி சீரியல்களில் நிகழ்ச்சிகளுக்கும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி உள்ளார். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடக்கும் பல நிகழ்வுகளில் அவர்தான் டான்ஸ் மாஸ்டராக இருந்துள்ளார். ஆனால் அப்போதெல்லாம் வெளியே தெரியாமல் இருந்த அவருடைய முகம் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களுக்கு நன்றாக தெரிய ஆரம்பித்துள்ளது.

வைல்ட் கார்ட் என்ட்ரி

வைல்ட் கார்ட் என்ட்ரி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவருக்கு வாய்ப்பு கிடைத்தபோது முதலில் இவரே நம்பமுடியாமல் தான் இருந்துள்ளாராம். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும்போதுகூட இவர் நமக்கு இப்படி ஒரு பெரிய வாய்ப்பா என்று பலமுறை நினைக்கிறாராம். ஒவ்வொரு முறையும் இந்த வாய்ப்பு பெருமை பட்டுள்ளாராம். 50 நாட்களுக்கு மேல் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக அறிமுகமாகி தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல இடத்தையும் பிடித்து விட்டார். டான்ஸ் மாஸ்டராக மாறுவதற்கு முன்பு இவர் நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டரான பிரபுதேவாவின் தீவிரமான ரசிகராம் அவரைப் போன்றே டான்ஸ் ஆடி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

பிரபுதேவாவின் தீவிரமான ரசிகர்

பிரபுதேவாவின் தீவிரமான ரசிகர்

அமீரின் டான்ஸில் கூட பல நேரங்களில் பிரபுதேவாவின் சாயலைப் பார்க்க முடிகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவர் ஒரு டான்ஸ் மாஸ்டராக பல நேரங்களில் ஜாலியாகவும் சுற்றித் திரிந்து கொண்டு இருந்தாலும் இவருடைய கடந்த கால வாழ்க்கை, சோக கதையை பலருடைய மனதையும் மாற்றிவிட்டது. இவருக்கு அதிகமான ஆதரவு தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலமாக கிடைத்து வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் கன்ஷசன் ரூமீல் பிக்பாஸ் அமீரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய ஆசையை அமீர் முதல் முறையாக வெளி காட்டியிருக்கிறார்.

பிக்பாஸில் அசத்தல் வாழ்த்து

பிக்பாஸில் அசத்தல் வாழ்த்து

ஏற்கனவே பிரபுதேவா மீது பாசத்தோடு இருக்கும் இவர் பிக்பாஸ் நீங்கள், என்னை பிரபுதேவா மாதிரி வருவீர்கள் என்று வாழ்த்து கூற சொல்லிக் கேட்டிருக்கிறார். அதற்கு பிக் பாஸ் நான் நீங்கள் பிரபுதேவா மாதிரி வருவீர்கள் என்று வாழ்த்து கூற மாட்டேன்..!!! ஏனென்றால் நாளை அமீரைப் போல வரவேண்டும் என்று பலர் நினைக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன் என்று தன்னுடைய ஆசையை கூறியிருக்கிறார். அந்த தருணத்தில் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீரை அமீர் வெளியிட்டிருக்கிறார். இந்த ஒரு தருணம் பலரையும் கவர்ந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+