ப்ரமோவை பார்த்து தாமரைக்கு வித்தியாசமாக வாழ்த்து சொன்ன அண்ணாச்சி... இதுதான் காரணமா??
சென்னை: இன்றைய ப்ரமோக்களில் தாமரையின் குடும்பத்தின் வருகை ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
உணர்ச்சிகரமான தருணத்தை பார்த்து தாமரை மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களும் குதூகலித்து வருகின்றனர்.
ப்ரமோவில் தாமரையின் நடவடிக்கையைப் பார்த்து இமான் அண்ணாச்சி கமெண்ட் அனுப்பியுள்ளார்.

எதிர்பாராத வளர்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில போட்டியாளர்கள் புகழின் உச்சத்துக்கு அடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் தான் எதிர்பாராத ஒரு வளர்ச்சி அடைந்து இருப்பது தாமரை செல்வியும் ஒருவர். இந்த ஐந்தாவது சீசனில் இவரெல்லாம் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிப்பார் என்று ஆரம்பத்தில் நினைத்த ரசிகர்கள் பலர் இருந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய எதார்த்தமான கேரக்டரால் அனைவரையும் பந்தாடி கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே பரிச்சயமான இமான்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் தான் அதிகமான புதுமுகங்கள் களமிறங்கி இருந்தனர். எத்தனை புதுமுகங்கள் வந்தாலும் ஒரு சில போட்டியாளர்கள் ஏற்கனவே ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலமடைந்தவர்கள் தான். இவர்களுக்கு என்று நாங்கள் ஓட்டுப்போட்டு காப்பாற்றி விடுவோம் என்று ஆரம்பம் முதலே கூறிவந்த போட்டியாளர்களில் ஒருவர் தான் இமான் அண்ணாச்சியும். இவருடைய யதார்த்தமான பேச்சு மற்றும் முகத்துக்கு நேராக பேசிவிடும் கேரக்டர் ரசிகர்கள் பலருக்கும் பிடித்திருந்தாலும், ஒருசில நெட்டிசன்களுக்கு பிடிக்காமல் தான் இருந்து வந்தது.

இமான் அண்ணாச்சியின் செயல்
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஒரு சில போட்டியாளர்கள் வெளியேற்றம் தான் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்து வரும். அந்த வகையில் இமான் அண்ணாச்சியின் வெளியேற்றம் ரசிகர்கள் பலரையும் பீல் பண்ண வைத்துவிட்டது. ஆனாலும் நிகழ்ச்சியில் உள்ளே இருப்பது போல தான் என்னுடைய கேரக்டர் நான் அதிலிருந்து எப்போதும் மாறவில்லை என்று தனக்கே உரிய குணத்தோடு பேசியிருக்கும் இமான் அண்ணாச்சி தற்போது சமூக வலைதளத்தில் செய்த செயல்தான் அனைவராலும் ஆர்வமாக பேசப்பட்டு வருகிறது.
Recommended Video

வாழ்த்துக்கள் கூறிய இமான்
இன்றைய ப்ரமோக்களில் தாமரைச் செல்வியின் கணவர் மற்றும் குழந்தை வருகை வீட்டை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் பரபரப்பு அடைய செய்துள்ளது. தாமரைச் செல்வியின் மகிழ்ச்சியான முகத்தை பார்த்து பலர் இந்த மாதிரியே எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். ஒருசிலர் உண்மையிலேயே இந்த ப்ரமோவை பார்க்கும் போது எங்களுடைய மனதும் அப்படியே புன்னகைத்து வருகிறது என்று கூறி வருகின்றனர். இந்த வகையில் இமான் அண்ணாச்சியும் பிக்பாஸ் ப்ரமோவை பார்த்துவிட்டு அதற்கு கமெண்ட் அனுப்பி உள்ளார். அதில் 'அன்பிற்கு எல்லை இல்லை...வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்'.இது தாமரைச்செல்வி வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றியாக தான் ரசிகர்கள் எண்ணி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இமான் அண்ணாச்சி வீட்டிற்குள் இருந்து இருந்தாலும் இதே வார்த்தை தான் கூறி இருப்பார் என்று இமான் அண்ணாச்சியின் ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications