அறத்தை பிக் பாஸ் மேடையில் தேட முடியாது.. அசீம் கூறிய காரணம்..கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

தான் ஜெயித்தது தான் அறம் ஜெயித்தது என்று கூறி வந்த அசீம் முதல் முறையாக அறத்தை பிக் பாஸ் வீட்டிற்குள் தேட முடியாது. அதை அரசியல் மேடையில் தான் தேட முடியும் என்று கூறியிருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு தான் ஜெயித்ததும் அறம் ஜெயித்ததும் ஒன்றுதான் என்று அசீம் ஆரம்பத்தில் கூறி வந்தார்.

விக்ரமன் மற்றும் கமல் கூறியது போல கடைசியில் அறம் தான் ஜெயித்திருக்கிறது என்று கூறி வந்த அசீம் தற்போது அறத்தை பிக் பாஸ் வீட்டிற்குள் தேட முடியாது என்று கூறியிருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மாற்றி மாற்றி பேசும் அசீமுடைய வீடியோவை நெட்டிசன்கள் பலர் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து மீம்ஸ்களாக வெளியிட்டு வருகின்றனர்.

ஆறாவது சீசனின் வெற்றியாளர்

ஆறாவது சீசனின் வெற்றியாளர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு வாரம் கழித்து அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட அசீம் தொடர்ந்து பல்வேறு செய்தி சேனல்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அசீம் ஒவ்வொரு இடத்திலும் பேசிய வார்த்தைகளை சேர்த்து நெட்டிசன்கள் அதிகமாக கலாய்த்து வருகின்றனர். ஆரம்பத்திலிருந்து அதிகமான ரசிகர்கள் அசீமுடைய வெற்றி தவறான முன்னுதாரணம் என்று கூறி வந்தனர். ஆனாலும் அசீம் அதிகமான வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ஹாட்ஸ்டாரில் மட்டும் 67% ஓட்டு பதிவாகி இருப்பதாக பெருமையோடு அசீம் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.

அதான் நான் ஜெயித்து விட்டேன்

அதான் நான் ஜெயித்து விட்டேன்

இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்து ரசிகர்கள் விக்கிரமன் அல்லது ஷிவின் தான் ஜெயிக்க வேண்டும் என்று கருத்து கூறி வந்தனர். அவர்களுக்கு அசீமுடைய வெற்றி அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. விக்ரமன் ஒவ்வொரு முறையும் அறம் தான் வெல்லும் என்று கூறிக் கொண்டிருப்பார் அதுபடி தான் கடைசியில் நேரத்திலும் மேடையில் தனக்கு டைட்டில் கிடைக்காமல் இருந்தாலும் அறம் வெல்லும் என்று கூறி இருக்கிறார். அதே நேரத்தில் அசீம் கையில் கப்பை கொடுத்து விட்டு கமல்ஹாசன் அறம் தான் வெல்லும் என்று விக்ரமனின் தோலை தட்டி இருந்தார். இது குறித்து சமீபத்தில் அசீமிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு அசீம் ஆமாம் உண்மையில் விக்ரமன் மற்றும் கமல் கூறியது போல அறம் தான் ஜெயித்தது அதான் நான் ஜெயித்து விட்டேன் என்று கூறியிருந்தார்.

எப்படி ஜெயிக்க முடியும்

எப்படி ஜெயிக்க முடியும்

இந்த நிலையில் அதை தொடர்ந்து அசீம் ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். அதில் அறத்தை பிக் பாஸ் வீட்டிற்குள் தேடவே முடியாது. பிக் பாஸ் வீட்டிற்குள் எப்படி அறத்தை தேட முடியும், அங்கு டாஸ்க் நேரத்தில் ஒருவரை விட ஒருவர் எந்த வகையில் சிறந்தவர் என்று கூறவேண்டும். அப்படி கூறும் போது எதிரே இருப்பவரை குறைகளை தான் கூற முடியும் அப்படி குறையை கூறுவது முறையா? பிக் பாஸ் வீட்டிற்கு பலவகையான டாஸ்க்கள் வைக்கப்பட்டு இருக்கிறது, பேக்கரி டாஸ்க் கூட கல்லாப்பெட்டியில் திருட்டுப் போக வாய்ப்பு இருக்கு என்று பிக் பாஸ் அறிவுறுத்தியிருந்தார். அதுபோல அதை ராபர்ட் மாஸ்டர் திருடியும் இருந்தார். இதுதான் அறமா? அப்படி என்றால் பிக் பாஸ் வீட்டிற்குள் எப்படி நீங்கள் அறத்தை எதிர்பார்த்து அறம் ஜெயிக்கும் என்று கூற முடியும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பஞ்ச் வசனம்

பஞ்ச் வசனம்

இந்த நிலையில் அறம் ஜெயிக்க வேண்டும் என்றால் அது பொதுமக்கள் முன்னிலையில் தான் நடக்க முடியும். பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது லைப் அதில் அறத்தை தேடாமல் வாழ்க்கையை தான் தேட முடியும் என்று கருத்து கூறி வெளியிட்ட வீடியோவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். என்னதான் பஞ்ச் வசனமாக பேசினாலும் தான் செய்த தவறு எல்லாம் சரியாகிவிடுமா? அடுத்தவர்களை குறை கூறி மட்டம் தட்டுவது ,பிறரை காயப்படுத்தும் வார்த்தைகளால் பேசி காயப்படுத்தி விட்டு, பின்பு மன்னிப்பு என்ற வார்த்தையை கேட்டுவிட்டு நான் நானாக இருக்கிறேன் என்று கூறிக் கொண்டிருந்தால் அது சரியாகிவிடுமா? என்று கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர். என்னதான் தான் தவறு செய்தாலும் அதை தவறே என்று தெரியாமல் ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி பேசும் அசீமை என்ன சொல்வது என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கமெண்ட்களை குவிக்கிறார்கள் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+