இனியாவின் சூழ்ச்சியில் மாட்டிய கோபி... அவமானப்பட்டு மன்னிப்பு கேட்ட ராதிகா.. எதிர்பாராத முடிவு
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியா தன்னை ராதிகா அடிக்க வந்ததை கோபி இடம் போட்டு கொடுக்க கோபி ராதிகாவை தனியாக அழைத்து அட்வைஸ் கொடுக்கிறார்.
ராதிகா மீதி இருக்கும் கோபத்தில் இனியா செய்யும் செயல்களை பார்த்து கோபத்தில் ராமமூர்த்தி இனியாவை திட்டுகிறார். தாத்தாவின் எதிர்பாராத செயலால் இனியா அதிர்ச்சியாகிறார்.

போட்டு கொடுக்கும் இனியா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் தாத்தாவிடம் இனியா தன்னை ராதிகா அடிக்க வந்த விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார். அதனால் தான் நானும் அவரை திட்டி விட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது கோபி அங்கே வருகிறார். கோபி ராதிகாவையும் மயூவையும் எங்கே என கேட்க தெரியவில்லை. எங்கேயோ வெளியே போயிட்டாங்க என இனியா சொல்கிறார். பின்பு ராதிகா தன்னை அடிக்க வந்த விஷயத்தை சொல்ல, கோபி என்னம்மா சொல்ற ராதிகாவா உன்னை அடிக்க வந்தா? என கேட்க அப்ப நான் சொல்றது நீங்க நம்பலையா? என இனியா கேட்க அப்படி இல்லை என சமாளிக்கிறார்.

இனியாவின் சூழ்ச்சி
பிறகு நாம் நம்ம வீட்டுக்கு போய்டலாமா டாடி என கோபி இடம் கேட்க கோபி அதிர்ச்சி அடைகிறார்.இனி ராதிகா உன்னிடம் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டாள். அவளிடம் நான் சொல்லி விடுகிறேன். இனி நாம இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும். அங்கே செல்ல வேண்டாம் என்று கோபி சொல்ல இனியா அமைதியாக இருக்கிறார். பின்பு கோபி ராதிகாவை தனியாக அழைத்து சென்று உன்னிடம் பேச வேண்டும் என்று சொல்ல, இனியா எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிட்டாளா? என ராதிகா கோபப்படுகிறார்.

ராதிகாவின் கேள்வி
ஆமா சொன்னாள் அவள் சின்ன பொண்ணு, அவளை அடிக்க கை ஓங்கியது தப்பு தானே? என கேட்க நான் மயூவை எப்படி பார்க்கிறேனோ அப்படித்தான் அவளையும் பார்க்கிறேன். அவளை கண்டிக்க எனக்கு உரிமை இல்லையா? என கேட்க நான் அப்படி சொல்லல, இனியாவும் சின்ன பொண்ணு தான் நான் ஆரம்பத்தில் உங்க வீட்டுக்கு வந்தபோது மையூ என்கிட்ட இருந்து எப்படி விலகி இருந்தாள். ஆனா இப்போ நானும் அவளும் எவ்வளவு நெருக்கமாக மாறிவிட்டோம். அதே மாதிரி தான் இப்போ இனியா இருக்கா கொஞ்சம் புரிஞ்சி நடந்துக்க என கூறுகிறார். இதைக் கேட்ட ராதிகா இனிமே நான் இனியாவை எதுவும் சொல்ல மாட்டேன் போதுமா? அவளை நான் கண்டிக்க கூட மாட்டேன். அதே நேரத்தில் அவள் ஏதாவது செய்தால் உனக்கு தெரியாதா என்று நீங்கள் என்னிடம் கேட்கக் கூடாது என்று கூறுகிறார்.

இனியாவுக்கு அறிவுரை
பிறகு கீழே வந்ததும் ராதிகா இனியாவிடம் மன்னிப்பு கேட்கிறார். ராதிகா கூப்பிட்டுக் கொண்டே இருக்க இனியா திமிராக இருப்பதை தாத்தா பார்த்துக் கொண்டிருக்கிறார். பிறகு இனியா தாத்தாவிடம் பார்த்தீர்களா எப்படி மன்னிப்பு கேட்க வைத்தேன் என சொல்ல, இதெல்லாம் சரி இல்லை இது தப்பு பண்ற இப்படித்தான் உங்க அம்மா வயசுல பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் என வளர்த்தாளா? என கேட்க இனியா அதிர்ச்சியாக, எல்லா தப்பையும் பண்ணுனது உங்க அப்பன். அவன் தான் இந்த கதைக்கு வில்லன். அவன் மேல கோவப்படாம மத்தவங்க மேல கோவப்படுற என கூறுகிறார்.

குழந்தையை வைத்து பிரச்சனை
அடுத்ததாக ஜெனி தன்னுடைய அம்மாவிடம் போனில் பேசியதை வீட்டில் கூறுகிறார். அப்போது அம்மா தனக்கு பெண் குழந்தை பிறப்பதற்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்றும் சர்ச்சில் ஞானஸ்தானம் எடுக்கணும் என பல முடிவு பண்ணி வச்சிருக்காங்க என சொல்ல, ஈஸ்வரி இந்த வீட்டில் எல்லா குழந்தைகளுக்கும் எப்படி நடந்துச்சோ அப்படித்தான் இந்த குழந்தையும் வளரனும், நெத்தியில விபூதி வைக்கணும், குழந்தைக்கு கோவிலில் மொட்டை போடணும், ஏன பேசுகிறார். இதைக் கேட்டு ஜெனி அதிர்ச்சியாக எழில் ஜெனிக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்தார். அது நடக்கும்போது பார்க்கலாம் குழந்தைக்கு ஈஸ்வரி மரியா என்று கூட பெயர் வைக்கலாம் கடவுள் பெயராகவே இருக்கும் என்று பேசிக் கொண்டிருக்கும்போது ராதிகாவின் ஆபீஸிலிருந்து பாக்யாவுக்கு போன் வருகிறது. உங்களிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் ஒரு மணி நேரத்திற்குள் இங்கே வாங்க என அவர்கள் சொல்லி முடிக்கின்றனர். பாக்கியா அங்கே செல்ல கிளம்புகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications