புதியதாய் நஷ்டத்தை ஏற்படுத்தி பழிதீர்த்த ராதிகா.. கடைசியில் பாக்யாவுக்கே வில்லியாக மாறிய மாமியார்!!
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ஏரியா செகரட்டரி எலக்ஷனில் தன்னை தோற்கடித்து தனக்கு சவால் விடும் தோணியில் பேசிய பாக்கியாவை பழி தீர்த்து இருக்கிறார்.
பாக்யாவுக்கு ராதிகா ஒரு பக்கம் கேண்டீன் ஆர்டரை கேன்சல் செய்து அதிர்ச்சியை கொடுக்க வீட்டிற்கு வந்த இடத்தில் ஈஸ்வரியும் தன்னுடைய பங்குக்கு பாக்யாவை திட்டி தீர்க்கிறார்.

கேண்டீன் ஆர்டர் கேன்சல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கேண்டீன் ஆர்டர் விஷயமாக பாக்கியாவும் எழிலும் ஆபீசுக்கு சென்றிருக்கின்றனர். அப்போது ஆபீஸ் எம் பி உங்களுக்கு இந்த ஆர்டரை கொடுக்க முடியாது என சொல்ல இருவரும் அதிர்ச்சடைகின்றனர். எழில் என்ன காரணம் எனக்கேட்க்க ராஜசேகர் சொன்ன ஒரே காரணத்துக்காக தான் உங்களுக்கு இந்த ஆர்டர் கொடுத்தேன் ஆனால் நிறைய போட்டி இருக்கு ஆதனால் உங்களுக்கு இந்த ஆர்டர் கொடுக்க முடியாது என சொல்கிறார். இதைக் கேட்ட பாக்யா நான் இதற்காக எவ்வளவு கடன் வாங்கி பொருள்களை எல்லாம் வாங்கி இருக்கிறேன் என சொல்லி அழ, இதுதான் உங்ககிட்ட பிரச்சனை. இங்க நீங்க இப்பதான் பொருட்களையே வாங்குறீங்க உங்க கிட்ட எப்படி ஆர்டர் கொடுத்து நடத்த முடியும். உங்களுக்கு தர முடியாது என்று உறுதியாக கூறி விடுகின்றனர்.

வில்லத்தனத்தை காட்டும் ராதிகா
ஆபீஸ் எம்பி இடம் பாக்கியாவும் எழிலும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ராதிகா வருகிறார். இவர்கள் இருவரும் இனி என்ன செய்வது என தெரியாமல் வீட்டிற்கு கிளம்பும்போது ராதிகா இவர்களை தடுத்து நிறுத்துகிறார். ராதிகாவை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைய இது என்னுடைய ஆபீஸ் இங்கு எல்லாமே நான் தான். கேண்டீன் ஆர்டர் கேன்சலாக நான்தான் காரணம். ஏரியா செக்ரட்டரி எலக்சன்ல ஜெயிச்சதும் என்னமா பேசினீங்க, படிப்பு எல்லாம் ஒண்ணுமே இல்லன்னு சொன்னீங்களே? இப்போ அதே படிப்பு தான் இந்த இடத்தில் உங்களுடைய எல்லா வேலையையும் கேன்சல் செய்ய வைத்திருக்கிறது. படிப்பு மட்டும்தான் எல்லாமே, அதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும் என்று தன்னுடைய மொத்த பகையையும் பழி தீர்க்கும் வகையில் பாக்கியலட்சுமி, பாக்கியலட்சுமி என்று நிமிடத்திற்கு ஒருமுறை கூறிக்கொண்டு வசனம் பேசுகிறார்.

போட்டுக் கொடுத்த ப்ரொடியூசர் மகள்
எழில் இவரிடம் பேச வேண்டாம் வா என அம்மாவை அழைக்க, இரு என கூறிவிட்டு ஏரியாவில் கரண்ட் இல்லை, தண்ணி வரலன்னு சொல்லுவீங்க அப்போ உங்க பதவியை வைத்து என்ன பண்ண முடியுதுன்னு பார்க்கலாம் என சவால் விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர். அதே நேரத்தில் எழிலின் ப்ரொடியூசர் மகள் ஈஸ்வரியை பார்த்து அவரிடம் தனியாக இருக்கும் போது எழிலை காதலிக்கும் விஷயத்தை கூறுகிறார். நான் எத்தனையோ முறை எழிலிடம் தன்னுடைய காதலை கூறிவிட்டேன். ஆனால் எழில் தன்னை பிடிக்கவில்லை என்று சொல்கிறார். என்னை பிடிக்கவில்லை என்று சொன்னாலும் பரவாயில்லை, ஆனால் அமிர்தாவை தான் பிடித்திருப்பதாக கூறுகிறார் என்பதை போட்டுக் கொடுக்க ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.

வில்லியாக மாறிய மாமியார்
பிறகு பாக்கியா வீட்டிற்கு வர புரொடியூசரின் மகள் பாக்யாவை பார்த்ததும் லேசாக பேசிவிட்டு பிறகு பாட்டியிடம் நான் சொன்னதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு கிளம்புகிறார். பாக்கியாவும் எழிலும் டல்லாக இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என ஈஸ்வரி கேட்க, பாக்யா கேண்டீன் ஆர்டர் கிடைக்கவில்லை என சொல்ல, ஈஸ்வரி உட்பட குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதற்காக நிறைய செலவு பண்ணி இருக்கியே என சொல்ல எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியல அத்தை என பாக்கியா கூற ,அப்போது செழியன் இதனால்தான் நான் முதலிலேயே சொன்னேன், இவ்வளவு கடன் வாங்கி இந்த வேலை செய்யனுமா? என்று என கேட்க, எழில் நீ பணம் ஒன்னும் கொடுக்கவில்லையே என கேட்க, இருவருக்குள் வாக்குவாதம் வருகிறது. ஈஸ்வரி அவன் சொன்னதில் என்ன தப்பு அவன் சரியாகத்தான் சொன்னான் என்று செழியனுக்கு சப்போர்ட் செய்து கொண்டு, கோபி உன்னை திட்டறதுல தப்பே இல்ல எதையும் தெரிஞ்சுக்கிட்டு காலை விடனும் என கோபத்தோடு பேசுகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications