ராதிகாவிடம் பாக்கியாவை பற்றி பேசி மாட்டிக்கொள்ளும் கோபி.. வில்லியாக மாறிய வர்ஷினி.. கதறி அழும் எழில்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவிடம் பாக்யாவை பற்றி பேசி கோபி வம்பில் மாட்டி இருக்கிறார்..
அமிர்தா வீட்டிற்கு சென்ற எழிலுக்கு அமிர்தாவின் குடும்பத்தினர் பல அதிர்ச்சியை கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கின்றனர். திருமணத்தைப் பற்றி இனி வீட்டில் பேசக்கூடாது என்று அமிர்தாவின் குடும்பத்தினர் பேசியதை கேட்டு எழில் குழப்பத்தில் இருக்கிறார்

வர்ஷினியின் தொல்லை
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் எழில் ஆபீஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் வர்ஷினி எழிலை பார்த்தபடியே இருக்கிறார். அப்போது எழிலுக்கு போன் வரும் போதெல்லாம் எழில் அமிர்தாவாக இருக்கும் என்று ஒவ்வொரு முறையாக எடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்துக் கொண்டிருக்கும் வர்ஷினி அமிர்தா இனி திரும்பி வர மாட்டாங்க, பாதியிலே வந்தவங்க பாதியிலே போய்ட்டாங்க என்று கூறிக் கொண்டிருக்கிறார். இதை கேட்டு எழில் அதிர்ச்சையாகி அமிர்தா இதை நிறுத்துங்க என்று கூற, உன்னை வேண்டாம் என்று பாதியில் போனவள் பெயரை தானே இப்போ வரைக்கும் சொல்லிக்கிட்டே இருக்கே என்று வர்ஷினி கோபப்படுகிறார்.

வர்ஷினி மீது வரும் சந்தேகம்
மேலும் எழிலிடம் வேண்டுமென்றால் பாருங்கள் உங்களுக்கும் எனக்கும் தான் கல்யாணம் நடக்கும் என சொல்ல, எழில் இப்படி எல்லாம் பேசாதீங்க நான் அமிர்தாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன். நீங்கள் இப்படி பேசுவதால் எனக்கு ஒர்க் பண்ற மூடே போகுது என்று சொல்ல, என்ன வேணாலும் நடக்கட்டும் ஆனா உங்களுக்கும் எனக்கும் தான் கல்யாணம் நடக்கும் என வர்ஷினி சொல்கிறார். பிறகு வர்ஷினி அங்கிருந்து சென்றதும் சதீஷ் அமிர்தா பேசாம இருக்க காரணம் வர்ஷினியாக இருக்குமோ என்று தோணுது என சொல்ல எழிலுக்கும் சந்தேகம் வருகிறது. .

மாட்டிக்கொள்ளும் கோபி
அடுத்ததாக கோபியும் ராதிகாவும் காரில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது ராதிகாவிடம் கோபி இன்று நல்லா இருக்கியா? என்று கேட்க ஆமாம் நல்லா தான் இருக்கிறேன் என்று ராதிகா சொன்னபோது கோபி கோபமாகவே இருப்பதை பார்த்து நீங்க என்ன கோபமா இருக்கீங்களா? என ராதிகா கேட்க இன்னைக்கு நான் ஒரு ஆபீஸ் விஷயமா ஒரு கிளையன்ட் பார்க்கணும் என்று சொன்னேன் அல்லவா? அவர்களைப் பார்ப்பதற்காக நான் ஹோட்டல் போனேன் அங்கே பாக்கியாவை பார்த்தேன் என்று சொன்னதும், ஏதேனும் சண்டையா? என்ன ராதிகா கேட்க, இல்லை அங்க அவள் என்னை பார்க்கவே இல்லை. அவள் ஒரு ஆள் கூட சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு இருந்தா, இதற்கு முன்பு இப்படி கிடையாது. ஆனால் இப்போ ரொம்ப மாறிட்டா என்று கோபமாக பாக்யாவை பற்றி பேசிக் கொண்டிருக்க ராதிகா பார்த்து முறைத்தபடியே கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ராதிகாவின் அடுத்தடுத்த கேள்வி
ஏன் என்ன இப்படி பாக்குற என்று கோபி கேட்கவும் நீங்க கிளைட் பார்க்க தான போனீங்க பாக்யாவை வாட்ச் பண்ணுவதற்காக போன மாதிரி இருக்கு என்று ராதிகா கேட்க, கோபி உளறிக் கொண்டிருக்கிறார். பின்பு அவங்க யாரு கூட பேசினா உங்களுக்கு என்ன கோபி? என்று கேட்க கோபி திணறுகிறார். பின்பு அவங்க உங்களுக்கு யாரு? அவங்க இன்னொருத்தங்க கிட்ட பேசினா இன்னொருத்தரை பார்த்தா உங்களுக்கு ஏன் கோபம் வருது? இன்னும் ஃபீலிங்ஸ் இருக்கா? என்று கேள்வி கேட்க கோபி சமாளித்து கொண்டிருக்கிறார். டைவர்ஸ் ஆன பிறகு எனக்கு அந்த ராஜேஷ் பார்த்த மாதிரியே இருக்கு என்ற ராதிகா சொல்ல, நானும் அவனும் ஒன்று இல்லை என்று ஏதேதோ பேசி கோபி சமாளிக்கிறார்.

கதறி அழும் எழில்
அடுத்ததாக எழில் அமிர்தா வீட்டிற்கு வர அமிர்தாவின் அம்மாவும் அப்பாவும் எழிலை திட்டி கோபமாக பேச வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருக்கின்றனர். இனிமே உங்க வீட்ல இருக்கவங்க வந்து பேசினாலும் இந்த கல்யாணம் நடக்காது நீ எங்க வர வேண்டாம் நாங்களும் ஊருக்கு போகிறோம் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர். இவர்கள் கடுமையாக பேசியதை கேட்டு அதிர்ச்சியான எழில் வீட்டிற்கு வந்து பாக்கியாவை கட்டிப்பிடித்து அழுது அமிர்தாவின் வீட்டில் நடந்த விஷயங்களை சொல்ல பாக்கியா நான் அமிர்தா கிட்ட பேசி பார்க்கிறேன் என்று அவருக்கு போன் போடுகிறார் இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications