இனியாவுக்கு சாதகமாக மாறிய கோபி... அதிர்ச்சியில் ராதிகா செய்த செயல்.. பாக்யாவின் எதிர்பாராத முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி இடம் இனியா உங்களுக்கு நான் முக்கியமா இல்லை ராதிகா முக்கியமா? என கேட்ட கேள்விக்கு கோபி எனக்கு எப்போதுமே இனியா தான் முதலில் முக்கியம் அதற்கு பிறகு தான் யாரும் என்று சொன்ன சொல்லை கேட்டு ராதிகா அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

பாக்கியாவிற்கு அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து கொண்டிருந்த நேரத்தில் தற்போது புதிய காண்ட்ராக்ட் கிடைத்திருக்கிறது. இனி பாக்கியா அதிரடியான முடிவுகளை எடுக்கப் போகிறார்.

பாக்கியாவிற்கு வந்த புது வாய்ப்பு

பாக்கியாவிற்கு வந்த புது வாய்ப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசொடின் ஆரம்பத்தில் , பாக்கியா ராஜசேகரை பார்க்க செல்வியோடு செல்கிறார். அங்கே அவர் தன்னுடைய நண்பரின் கம்பெனியில் கேண்டில் நடத்த ஆர்டர் ஒன்று வந்திருக்கிறது. அவர் என்னிடம் யாராவது பெண்கள் இருந்தால் சொல்லுங்க என கேட்டதும் உங்களுடைய ஞாபகம் வந்தது உங்களால் முடியுமா? சொல்லுங்க நானே நேர்ல கூட்டிட்டு போறேன். அறிமுகம் செய்து வைக்கிறேன்.உங்களுக்கு புது வேலை கிடைக்கும் இங்கே மண்டபத்தில் தினமும் உங்களுக்கு ஆர்டர் கிடைக்காது .அதனால் கேண்டின் வேலை உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தேன் என சொல்ல பாக்கியா சந்தோஷம் அடைகிறார். ஓகே நான் யோசித்து சொல்கிறேன் என்று பாக்யா அங்கிருந்து கிளம்பி வருகிறார்.

பாக்கியாவின் முடிவு

பாக்கியாவின் முடிவு

பாக்கியா வீட்டுக்கு வரும்போது ஈஸ்வரி நெஞ்சை பிடித்து உட்கார்ந்து கொண்டிருக்க என்ன ஆச்சு என விசாரிக்க கோவிலுக்கு போயிட்டு வரும்போது ஒரு திருடன் செயினை பறிக்க வந்ததாக பயத்தில் இருப்பதாகவும் ஜெனி சொல்கிறார். பாக்யா ஈஸ்வரியை சமாதானம் செய்து அங்கே என்ன நடந்தது என்று விசாரிக்கிறார். அப்போது அந்த தெரு இருட்டாக இருப்பதாகவும், சிசிடிவி ஒர்க் ஆகவில்லை என்றும் எழில் கூறுகிறார். செழியன் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருப்பதாகவும் கூறிக் கொண்டிருக்கும்போது நம்ம செக்ரட்டி கிட்ட இதைபற்றி பேச வேண்டும் நான் பேசுகிறேன் என பாக்கியா சொல்கிறார்.

இனியா கேட்ட கேள்வி

இனியா கேட்ட கேள்வி

அடுத்ததாக ராதிகா வீட்டில் இனியா மயூக்கு மேக்ஸ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் .அப்போது கடைக்கு போய் வரும் ராதிகா காபி குடிக்கலையா என கேட்க இனியா அமைதியாகவே இருக்கிறார். உங்கிட்ட தான் நான் கேட்டுக்கிட்டு இருக்கேன். உனக்கு பிடிக்காதா? என கேட்க பிடிக்காது என இனியா கூறுகிறார். உனக்கு என்னதான் பிடிக்கும் ,என்ன பிடிக்காது என்று எப்படி எனக்கு தெரியும். இதற்கு முன்பு உன்னை பார்த்து இருக்கிறேன் ஆனால் உனக்கு பிடித்தது எனக்கு தெரியாது. நீ சொன்னாதானே தெரியும் என கேட்க நான் எதுக்கு உங்க கிட்ட சொல்லணும் என இனியா பேச இந்த மாதிரி தான் உங்க அம்மா கிட்ட நீ மரியாதை இல்லாமல் பேசுவியா? என ராதிகா கேள்வி கேட்டதும் நீங்க ஒன்னும் என் அம்மா கிடையாது என இனியா பதில் பேசுகிறார்.

எதிர்பாராத கோபியின் பதில்

எதிர்பாராத கோபியின் பதில்

இனியாவின் பேச்சை கேட்டதும் ராதிகா அந்த இடத்தை விட்டு கோபத்தோடு சென்று விடுகிறார். பிறகு கோபி வந்ததும் அக்காவுக்கும் அம்மாவுக்கும் சண்டை என மயூ சொன்னதும், ராதிகாவிடம் நீ எதற்கு திட்டுன? என கோபி கேட்க, ராதிகா கோபப்பட்டு நான் என்ன செய்தேன் உங்கள் மகளிடம் கேளுங்க என ராதிகா கூற, என்னை கொஸ்டின் பண்ண இவங்க யாரு? என நான் கேட்டேன் என திமிராக இனியா சொல்ல ,கோபி என்ன சொல்வது என தெரியாமல் திணறிக் கொண்டு இனியா அப்படி பேச கூடாது என இனியாவிடம் பேச்சை தொடங்கவும், நீங்க இவங்களோட பேச்சைக் கேட்டு என்னை இப்ப திட்ட போறீங்களா? இப்ப சொல்லுங்க உங்களுக்கு நான் முக்கியமா? இல்ல இவங்க முக்கியமா? என கேட்டதும் அதிர்ச்சி அடைந்த கோபி சிறிது யோசித்து நீதான் எனக்கு முக்கியம் .அதற்குப் பிறகு தான் எல்லோரும் என இழுத்துக் கொண்டு இருக்க இதைக் கேட்டு ராதிகா பெரிய அளவில் அதிர்ச்சி அடைகிறார்.

ராதிகாவுக்கு அதிர்ச்சி தான்

ராதிகாவுக்கு அதிர்ச்சி தான்

இவர்கள் பேசுவதை கேட்டு மயூ பயப்பட மயூ தோளை தட்டி ஒன்னும் இல்லடா, பேசிகிட்டு இருக்கோம் என கோபி சமாதானம் செய்தபடியே இருக்க, ராதிகா இப்படித்தான் தப்பு பண்ற குழந்தைகிட்ட நீங்க பேசுவீங்களா? என ராதிகா கேள்வி கேட்க உங்க வீட்டுக்கு நான் முதல்ல வரும்போது மயூ கூட தான் என்கிட்ட பேசல நான் இப்படியா நடந்துகிட்டேன்? கொஞ்சம் பொறுமையா இரு, என ராதிகாவை சமாதானம் செய்ய முயல்கிறார். ராதிகாகோபமாகிறார். இனியா ராதிகாவை இளக்காரமாக பார்க்கிறார் .இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+