Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோபியால் கண்ணீர் வடிக்கும் தந்தை.. இனி பாக்கியலட்சுமியில் நடக்கப்போகும் அதிரடி திருப்பங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்யலட்சுமி சீரியலின் இன்றைய ப்ரமோ ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

கோபியின் திடீர் செய்கையால் அவருடைய தந்தை கண் கலங்கியபடி எடுக்கப்போகும் அதிரடி முடிவு கதைக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

எதிர்பாராத திருப்புமுனை

எதிர்பாராத திருப்புமுனை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலானா பாக்கியலட்சுமி சீரியல் குடும்ப பெண்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். பல்வேறு தரப்பட்ட அவர்களையும் ரசிக்க வைக்கும் இந்த சீரியலில் இந்த வாரம் எதிர்பாராத மாற்றங்கள் பல நடந்து கொண்டிருக்கிறது. நெட்டிசன்கள் முதல் ரசிகர்கள் வரை ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த தருணம் தற்போது நடைபெற போகிறது.

மயூவின் கேள்வி

மயூவின் கேள்வி

கோபி மற்றும் ராதிகா இருவருக்கும் திருமணம் விரைவில் நடக்க போவதாக ராதிகாவின் தாய் பேசியதை கேட்டு மயூ அதிர்ச்சி அடைந்ததும் தன்னுடைய தாயிடம் அதை பற்றி கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு ராதிகா மழுப்பலாக பதில் கூறிக் கொண்டிருந்தாலும், ராதிகாவின் அம்மா விரைவில் கோபி மற்றும் ராதிகா திருமணம் நடைபெறப் போகிறது என்று கூறிவிடுகிறார். அப்படி நடந்தால் தான் நீ தைரியமாக அனைவரிடமும் கோபி தன்னுடைய தந்தை என்று கூறலாம் என கூற, அப்போ எங்க அப்பாவை எப்படி கூப்பிட என்று மயூ கேள்வி கேட்டு அனைவரையும் கலங்க வைத்துள்ளார்.

போட்டோவை காணவில்லை

போட்டோவை காணவில்லை

கோபியின் வீட்டில் செழியன் மற்றும் ஜெனியின் திருமண போட்டோக்கள் வந்துள்ளது. இந்த போட்டோக்கள் அழகாக இருப்பதாகவும் அதை ஹாலில் மாட்டி விடலாம் என்றும் குடும்பத்தினர் அனைவரும் ஒருசேர முடிவெடுத்திருக்கிறார்கள். அடுத்ததாக சுவற்றில் புகைப்படங்களை இல்லை வீட்டில் இருக்கும் பழைய புகைப்படங்களை எல்லாம் எங்கே என்று பாக்யாவின் மாமியார் முதலில் ஆரம்பிக்க, அடுத்ததாக மாமனாரும் சேர்ந்து கேள்விகளை கேட்கிறார்கள். உங்க மகன்தான் போட்டோவை எல்லாம் கழற்றி வைத்தார். எங்கே வைத்திருக்கிறார் என தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். குடும்பமே சேர்ந்து வீடு முழுக்க போட்டோவை தேடினாலும் போட்டோ கிடைக்கவில்லை.

போட்டோவை கண்டுபிடித்த பாக்கியா

போட்டோவை கண்டுபிடித்த பாக்கியா

வேலைக்கு சென்று வந்ததும் கோபியிடம் பாக்கியா போட்டோவை எல்லாம் எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, எங்கே வைத்தேன் என்று ஞாபகமில்லை ஞாபகம் வந்தால் சொல்கிறேன் என்று முடித்து விட்டார். ஆனால் பாக்கியா இல்லாத நேரத்தில் தான் வைத்திருந்த போட்டோக்கள் அங்கேதான் இருக்கிறதா?? என்று செக் பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கிய வந்து விடுகிறார். ஆனால் ஒன்றும் நடக்காதது போல என்னுடன் ஹார்ட்டிஸ்க் தேடி கொண்டிருக்கிறேன் என்று சமாளித்து விட்டு கிளம்பி விடுகிறார். கோபி வேலைக்கு கிளம்பியதும் பாக்கியா மீண்டும் அதே இடத்தில் தேடிபார்க்கிறார் குடும்ப போட்டோக்கள் கிடைக்கிறது. குடும்ப போட்டோவை பார்த்ததும் அவருக்கு மேலும் சந்தேகம் தோன்றியிருக்கிறது. போட்டோவை வைத்து இருந்த இடத்தைப் பார்த்துவிட்டு தன்னிடம் சொல்லவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

கண்கலங்கிய தாத்தா

கண்கலங்கிய தாத்தா

குடும்ப போட்டோக்களை எடுத்து தன்னுடைய மாமனாரிடம் கொடுத்ததும் அவர் அதை துடைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவர்கள் வீட்டிற்கு மயூ வருகிறார். தன்னுடைய வீட்டில் தன்னுடைய தாய்க்கும் பாட்டிக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கிறது என்று குழந்தைத்தனமாக வீட்டில் நடப்பதை கூறிக் கொண்டிருக்கிறார். எதற்காக சண்டை என்று கோபியின் தந்தை கேட்கவும் தங்கள் வீட்டுக்கு கோபி அங்கிள் வருவது பாட்டிக்குப் பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த கோபியின் தந்தை அப்போ இப்போ வரைக்கும் கோபி போயிட்டு தான் இருக்கிறாரா?? என்று மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டிருக்கிறார். அடுத்ததுதான் அதிர்ச்சியான செய்தியை மயூ கூறியிருக்கிறார். விரைவில் தன்னுடைய தாயும் கோபி அங்கிள் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறியிருக்கிறார். அதைக் கேட்டதும் கோபி தந்தை கண்ணீர் விட்டு இருக்கிறார். அடுத்ததாக அவர் எடுக்கப்போகும் முடிவு என்ன என்பது ரசிகர்கள் மட்டுமல்லாமல் நெட்டிசன்களும் எதிர்பார்க்கும் ஒரு கேள்வியாக இருந்துவருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+