மணக்கோலத்தில் கோபி, ராதிகா.. சீரியல் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா..கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் திடீர்திருப்பம் ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பலபேர் பார்க்கும் சீரியலில் இப்படி ஒரு கதைக்களம் தேவையா என்று நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அதிகரிக்கும் சீரியல் மோகம்
பொதுவாக சீரியல்கள் என்றாலே வீட்டில் இருக்கும் பெண்கள் தான் பார்த்து வருவார்கள். ஆனால் தற்போது கொரானா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து இருப்பதால் குழந்தைகளும் வீட்டில் இருப்பதால் பெற்றோர்களுடன் சேர்ந்து அவர்களும் சீரியலுக்கு அடிமைகளாக மாறி வருகிறார்கள். தொடர்ந்து சீரியல்களைப் பார்த்து வரும் குழந்தைகள் அதில் நடக்கும் நிகழ்வுகளை பற்றி அடிக்கடி பேசி வருவதாகவும் பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது சீரியல்களில் நடக்கும் பல செயல்கள் ரசிகர்கள் மத்தியில் முகச்சுளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குடும்பத் தலைவியின் கதை
பல சீரியல்களில் இரண்டு மனைவிகள் இருப்பது சகஜமாகி வருகிறது. இது தற்போது இருக்கும் சூழ்நிலையில் தவறான ஒரு முன்னுதாரணத்தை காட்டிவிடும் என்று பல வல்லுனர்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் நெட்டிசன்களின் கைவசம் மாட்டி இருக்கிறது. இது குடும்பத் தலைவியின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டுள்ளது. அவர் தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்திற்காக படும் கஷ்டங்கள், தன்னுடைய திறமையை வெளிகாட்டுவதற்காக படும் அவமானங்கள் மற்றும் முயற்சிகளை பற்றிய இந்த கதையில் பாக்கியலட்சுமி எனும் கேரக்டரில் கதாநாயகி நடித்துள்ளார் .அவருடைய கணவர் கோபி தான் ரசிகர்களை அதிகமாக

கோபியின் தில்லாலங்கடி வேலை
கோபிக்கு திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில், அவர் தன்னுடைய பெண் தோழியோடு நெருக்கமாக பழகி வருகிறார். அவருடைய பெண் தோழியான ராதிகா ஏற்கனவே திருமணம் முடிந்து அவரும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய குடும்பத்தில் யாருமே தன்னை மதிக்கவில்லை என்றெல்லாம் பொய் வசனங்களை பேசி ராதிகாவின் மனதில் இடத்தைப் பிடித்து இருக்கிறார். ராதிகாவுடன் உனக்கு நான் இருக்கிறேன் என்று நம்பிக்கையை விதைத்திருக்கிறார். ராதிகா மற்றும் கோபியின் திருமணத்தை நடத்தி விட வேண்டுமென்று ராதிகாவின் அம்மா முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

புது ட்விஸ்ட்
தன்னுடைய குழந்தைகளுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில் கோபி மற்றும் ராதிகா தற்போது திருமணம் செய்துகொண்டது போல போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களால் பதிவிட்டு, பகிர்ந்து வருகின்றனர். இதைப் பார்த்ததும் ஒரு சிலர் இந்த மாதிரி கதை தேவையா?? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் இது என்ன புது ட்விஸ்ட். கதையில் எதிர்பார்க்காதது என்று கூறிவருகின்றனர். ஏற்கனவே கோபியின் நடவடிக்கையில் சந்தேகம் கொள்ளும் பாக்கியா கோபியை பற்றி தெரிந்து கொள்வாரா என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், அடுத்தது இவர்களது திருமணமா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications