பாக்கியாவுக்கு போன் செய்த கோபி.. கோபத்தில் ராதிகா எடுத்த திடீர் முடிவு.. அடுத்த திருமணம் ரெடி!!
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி, பாக்யாவுக்கு போன் செய்து மிரட்டி கொண்டிருப்பதை பார்த்து காண்டான ராதிகா எடுத்த திடீர் முடிவால் கோபி புலம்பி கொண்டிருக்கிறார்.
போஸ்ட் மேன் இடம் தன்னுடைய வீட்டில் கோபி என்றால் யார் என்று தெரியாது என்று கோபியின் அப்பா சொன்னதை கேட்டு கோபமான கோபி புது ரேஷன் கார்டு எடுப்பதற்காக புது பிரச்சனையை தொடங்கி இருக்கிறார்.

போஸ்ட்மேனால் காண்டாக கோபி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில், போஸ்ட்மேன் பாக்யாவின் வீட்டை விட்டு வெளியே வருகிறார்.கோபி போஸ்ட் மேனை பார்த்ததும் கூப்பிட்டு நான் தான் கோபி எனக்கு ஏதாவது லெட்டர் வந்திருக்கிறதா? என்று கேட்கிறார். அதற்கு போஸ்ட்மேன் உங்கள் வீடு எது என்று கேட்கிறார்? அதற்கு இதுதான் என்னுடைய வீடு என்று கூறுகிறார். ஆனால் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் நீங்கள் இந்த வீட்டில் உள்ளவர் இல்லை என்றும் இனி இங்கே உங்களுக்கு எந்த லெட்டரை கொண்டு வரக்கூடாது என்றும் சொல்லிவிட்டார்கள் என்று கூறுகிறார். உடனே கோபத்தில் இருக்கும் கோபி போஸ்ட்மேன் இடம் இனி எனக்கு என்று லெட்டர் வந்துச்சின்னா நான் புதியதாக இருக்கும் இந்த வீட்டிற்கு கொண்டு தந்து விடுங்கள் என்று கூறுகிறார். அதற்கு போஸ்ட்மேன் நான் இருந்தால் பரவாயில்லை ஆனால் வேற யாராவது வந்தால் அப்படி முடியாது என்று கூறுகிறார் போஸ்ட்மேனிடம் இருந்து லெட்டரை வாங்கி கடுப்பாக வீட்டில் வந்த கோபி புலம்பி கொண்டிருக்கிறார்.

பாக்கியாவோடு ஏற்பட்ட சண்டை
கோபி கோபத்தில் இருப்பதை பார்த்த ராதிகா என்ன என்று கேட்கிறார். அதற்கு தன்னுடைய வீட்டில் உள்ளவர்கள் செய்ததை கூறுகிறார். அதற்கு எனக்கும் புது அட்ரஸ் வேண்டும் என்றால் இந்த வீட்டில் நாம் சிலிண்டர் கனெக்ஷன் எடுக்க வேண்டும் என்று ராதிகா கூறுகிறார். அதுபோல இனி ரேஷன் கார்டு நமக்கு புதுசாக எடுக்க வேண்டும். உங்கள் பழைய ரேஷன் கார்ட் உங்க வீட்டில் இருந்து கேளுங்க என்று ராதிகா கூறுகிறார் .கோபி பாக்கியாவுக்கு போன் செய்து எதற்காக போஸ்ட்மேனிடம் அப்படி சொன்னீர்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு பாக்யா நீங்க இந்த வீட்டிலே இல்லை. அப்புறம் உங்களுக்கு வந்த லெட்டரை மட்டும் நாங்க எதுக்கு வாங்கி வைக்கணும் என்று பதில் பேசுகிறார். இதனால் கோபமான கோபி கடுப்பாக பேசிக்கொண்டே இருக்கிறார் .இதை ராதிகா பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

கோபத்தில் கிளம்பிய ராதிகா
கோபி பேசி முடித்ததும் நீங்க எதுக்கு பாக்யாவுக்கு போன் பண்ணுனிங்க. புருஷன் மாதிரி பேசிக்கொண்டு இருக்கீங்க ?அதுவும் இவ்வளவு நேரமா பேசிக்கிட்டு இருக்கீங்க? ரேஷன் கார்ட் உங்க அப்பா கிட்ட தானே இருக்கும். அப்பா அல்லது உங்க அம்மா கிட்ட பேச வேண்டியதுதானே? எதுக்கு பாக்கிய கிட்ட பேசுறீங்க என்று கோபத்தில் பேசுகிறார். நீங்கள் செய்வது எனக்கு பிடிக்கல கோபி என்று கோபத்தோடு ராதிகா கிளம்பி போய்விடுகிறார். இதனால் கடுப்பான கோபி தனியாக உட்கார்ந்து புலம்பி கொண்டு இருக்கிறார்.

அடுத்த திருமணம் ரெடி
அடுத்ததாக அமிர்தாவின் வீட்டிற்கு எழில் வருகிறார் .அமிர்தா எழில் வருவதை முன்கூட்டியே வீட்டில் இருக்கும் அவருடைய அப்பா அம்மாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார். எழில் வருகிறார் என்று சொன்னதும் அவர்கள் இருவருடைய முகமும் மாறிவிடுகிறது. அவருக்கு டீ போடுவதற்காக அமிர்தா உள்ளே சென்று விடுகிறார். அப்போது அமிர்தாவின் அம்மா நான் உன்னிடம் பேச வேண்டும் என்று கூறுகிறார். எழில் சொல்லுங்க அம்மா என்று சொல்கிறார். அப்போது கோபியின் திருமணத்தை பற்றி அமிர்தா வீட்டில் கேட்கின்றனர். அது முடிந்து விட்டது விட்டுவிடுங்கள் என்று எழில் கூறுகிறார் .அடுத்ததாக அமிர்தாவை திருமணம் செய்வதற்கு உங்கள் வீட்டில் இருந்து யாராவது வந்து பேச வேண்டும் என்று எழிலிடம் கண்டிஷன் போடுக்கின்றனர். அதற்கு எழில் சீக்கிரமாக வந்து பேசுவார்கள் என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது. அடுத்ததாக எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் இனி விறுவிறுப்பையும், பிரச்சனைகளையும் ஏற்படுத்த போகின்றது.












Click it and Unblock the Notifications