மாணவனாக மாறியிருக்கும் பாலாஜி.. முரட்டு பையன் எக்ஸாம் ஹாலில் இப்படியா?? ஆச்சரியத்தில் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் பாலாஜி தற்போது ஸ்கூல் பையனாக மாறியிருக்கும் கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள்.
அத்தனை கேமரா முன்னாடியே மிரட்டுவார் இப்போ அமைதியாக மாறிவிட்டாரே எப்படி என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

பிக்பாஸில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் வேற லெவல் வைரல் ஆகி விடுகின்றனர். இதற்கு முன்பு எவ்வளவுதான் அவர்கள் பெரிய லெவலில் சாதனை படைத்து இருந்தாலும், அந்த அளவிற்கு தெரியாமல் இருந்த பலரும் கூட இந்த நிகழ்ச்சி மூலமாக பிரபலம் அடைந்து வருகிறார்கள். அந்த மாதிரி தான் பாலாஜியும் இருந்துள்ளார். ஆணழகனாக பல பட்டங்களை பெற்று இருந்தாலும் சூப்பர் மாடலாக இருந்தாலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இவர் தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

இவருக்கு நிகர் இவர்தான்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் தன்னுடைய கேரக்டரில் இருந்து பின்வாங்காமல் எத்தனை கேமராக்கள் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று தெரிந்தும் இவர் நடந்துகொண்டது ரசிகர்களின் மத்தியில் விறுவிறுப்பை ஏற்படுத்தி இருந்தது. பல நேரங்களில் இவர் அடிதடியில் இறங்குவது போல மிரட்டல் தொனியில் பேசுவதும் தன்னுடைய தவறு புரிந்து ஒரு சில நேரங்களில் அதற்கு மன்னிப்பு கேட்பதும், இவருக்கு நிகர் இவர்தான் என்று பலர் கூறிவந்தனர். பல குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பலருக்கும் இவருடைய கேரக்டரை பிடித்துவிட்டது.

ரசிகர்களின் பாசம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார் என்று பலர் இவர்மீது நெகட்டிவ் கமெண்டுகளை கூறிக் கொண்டிருந்தாலும், இவர் டைட்டில் ஜெயிக்கவில்லை என்று பல குழந்தைகள் கண்ணீர் விட்டு கதறி அழுதது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. நிகழ்ச்சியின் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் இரண்டாவது இடத்தில் இவர் வந்து இருந்தாலும், இவருடைய ரசிகர்களின் பாசம் எனக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் என்று கூறியிருந்தார்.

எக்ஸாம் அறையில் அமைதி சொரூபம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார். ஆனால் திரைப்படங்களை பற்றி வெளியில் அதிகமாக கூறவில்லை என்றாலும் அந்த சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோக்களை தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி இருக்கிறார். மாணவராக இவர் மாறியிருக்கும் கெட்டப்பை பார்த்ததும் ரசிகர்கள் பலர் ஷாக்காகி இருக்கின்றனர். ஜெயம் ரவியின் கெட்டப்பில் இருப்பது போல இருக்கிறது என்று ஒரு சில ரசிகர்கள் கூறி வந்தாலும், இவருடைய எக்ஸாம் ஹால் போட்டோஸ்கள் வேற லெவல் வைரலாகி வருகிறது. கேமரா முன்னாடி மிரட்டிய பாலாஜி எக்ஸாம் பேப்பர் முன்னாடி அமைதியாக மாறிவிட்டார் என்று பலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications