பாலாவின் வீட்டில் நடந்த அடுத்தடுத்த மரணங்கள்..இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது
சென்னை: பாலாஜி முருகதாஸ் தன்னுடைய அம்மா, அப்பாவின் மரணத்தை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பாலாஜி முருகதாஸின் குடும்பத்தில் நடந்த அடுத்தடுத்த மரணங்களைப் பற்றி பாலா பேசி ரசிகர்கள் பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

ரகசியங்கள் தெரிந்துவிட்டது
ரசிகர்கள் பலர் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்ப படுவதால் அங்கே நடக்கும் நிகழ்வுகளைப் பற்றியும் ரசிகர்கள் முழுமையாக தெரிந்துகொள்ள முடிகின்றது. அதுமட்டுமல்லாமல் போட்டியாளர்கள் பலநேரங்களில் அவர்களையும் மீறி செய்யும் செயல்களெல்லாம் ரசிகர்களுக்கு வெட்ட வெளிச்சமாகி வருகிறது. இதற்கு முன்பு எந்த சீசனிலும் காட்டப்படாத பல ரகசியங்கள் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களுக்கு தெரிந்து வருகிறது.

தனியாக இருந்த பாலா
ஆரம்பத்தில் புகைப்பிடிக்கும் அறையில் போட்டியாளர்கள் செய்த செய்த செயல் பலருக்கும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில் தற்போது பாலாஜி முருகதாஸ் தன்னுடைய குடும்பத்தை பற்றி பேசிய வீடியோவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இப்படி எல்லாம் கூட நடந்திருக்கிறதா பாலாவின் வாழ்க்கையில் என்று ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். பாலா பத்தாம் வகுப்பு படிக்கும் வரைக்கும் தனியாகத்தான் இருந்துள்ளார். அதுவரைக்கும் அவருடைய அம்மா மலேசியாவில் தான் இருந்து வந்தாராம். தன்னுடைய தந்தை தன்னை குடித்துவிட்டு சித்திரவதை படுத்துகிறார் என்று சொன்னதால்தான் பாலாவின் அம்மா பாலாவோடு வந்தாராம்.

பாலாஜி கூறிய வருத்தமான செய்தி
பாலாவின் அம்மா மற்றும் அப்பா இருவருமே குடிக்கு அடிமையாக மாறிவிட்டார்களாம். மனதில் இருக்கும் டிப்ரஷன் காரணமாக இவர்கள் அளவுக்கு அதிகமாக குடித்ததால் தான் இவர்கள் இருவருமே இறந்து விட்டனர் என்று பாலாஜி கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பாலாஜி அவருடைய சித்தியின் கண்காணிப்பில் வளர்ந்து வந்தாராம். ஆனால் அவர்தான் முதன்முதலில் அவருடைய குடும்பத்தில் இறந்த நபராக இருக்கிறார். அவரும் இந்த குடியினால் தான் இறந்து விட்டார். எதுவும் ஒரு அளவுதான் இருக்கிறது என்னதான் டிப்ரஷன் இருந்தாலும் அதற்கு யாரும் அடிமை ஆகி விடக்கூடாது என்று பாலாஜி உருக்கமாக ரசிகர்களுக்கும் கூறியிருக்கிறார்.

கலைந்து போன குடும்பம்
முதன்முதலில் பாலாஜியின் சித்தி இறந்து இருக்கிறார். அவர் இறந்த கொஞ்ச நாளுக்குள் அவருடைய தாத்தா அடுத்ததாக இறந்து இருக்கிறார். அவரை தொடர்ந்து தான் பாலாஜியின் அம்மாவும் இருந்திருக்கிறார். அடுத்த இரண்டு வருடத்தில் பாலாஜியின் அப்பாவும் இறந்து விட்டாராம். குடும்பத்தில் பாலாஜிக்கு என்று இருந்த உறவுகள் அனைத்துமே தற்போது இல்லை அதற்கு காரணம் இந்த குடி தான் என்று சமூகத்தில் தற்போது பரவிவரும் குடியைப் பற்றி வருத்தமாகவும், தன்னுடைய குடும்பத்தை நினைத்து வருத்தமாகவும் பாலாஜி முருகதாஸ் கூறியிருக்கிறார். பாலாஜி பேசிய இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் பலர் பாலாஜிக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாலும், நெட்டிசன்கள் இவருடைய பழைய வீடியோக்களில் இவர் பீரில் குளிப்பது போன்ற பழைய வீடியோக்களை வைத்து கலாய்த்து வருகிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் இவ்வளவு பேர் இந்த குடியினால் கஷ்டப்பட்ட பிறகும் பாலாஜி செய்தது மட்டும் சரியா என்று நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications