எங்க பார்த்தாலும் என்னத்தான் கூப்பிடுறாங்க... ஃபரீனா அலப்பறைகள்
பாப்புலர் பிகர்னா இது ஒரு பிராப்ளம்... எங்க பார்த்தாலும் என்னைத்தான் கூப்பிடுறாங்க என்று கூறியுள்ளார் ஃபரீனா.
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி நடிகை ஃபரீனாவிற்கு ரசிகர்கள் ஏராளம். திட்டி தீர்த்துவிடுவார்கள். அவரை எல்லோரும் விழாவிற்கு வருமாறு கூப்பிடுகிறார்களாம். அட நிஜத்தில் இல்லைங்க எல்லாம் ரீல்ஸ்க்காக பேசிய வசனம்தான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா நிறைய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் டாக்டர் வெண்பா என்ற வேடத்தில் நடிக்கும் ஃபரினா ஆசாத், ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்திருந்தும், தான் விரும்பும் பாரதியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல வில்லத்தனங்களை செய்து வருகிறார்.
பாரதியையும் கண்ணம்மாவையும் பிரித்து வைத்து அவர் ஆடும் வில்லத்தனங்கள் அப்பப்பா. இது போல ஒரு வில்லி இனி பிறந்து வர வேண்டும் என்று பேசுகின்றனர் சின்னத்திரை ரசிகர்கள்.

ஃபரீனா இன்ஸ்டா பக்கங்கள்
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் ஃபரீனா, சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தைத் தெரிவித்தார். அதோடு தனது கர்ப்ப கால புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துக் கொண்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும் சீரியலில் நடித்தார் ஃபரீனா. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறத்தது. அதனையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். குழந்தையை க்யூட்டாக போட்டோ சூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.

சீரியலில் வில்லத்தனம்
குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே மீண்டும் சீரியலில் நடிக்க வந்து விட்டார் ஃபரீனா. பல சீரியல்களில் நடிக்க கமிட் ஆனாலும் பாரதி கண்ணம்மாவில் தொடர்ந்து வில்லத்தனம் செய்கிறார்.

விலகிய ஃபரீனா
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் தொடரில் பவானி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தார். என்னவானதோ திடீரென அந்த சீரியலில் இருந்து விலகுவதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். சில தவிர்க்க முடியாத காரணங்களால் பவானி கதாபாத்திரத்தில் என்னால் தொடர முடியவில்லை. வாய்ப்பளித்த புரொடக்ஷன் நிறுவனத்திற்கும், முழு ஒத்துழைப்பு கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி! எனத் தெரிவித்தார்.
Recommended Video

ஜொலிக்கும் ஃபரீனா
சீரியலில் இருந்து விலகினாலும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் படு ஆக்டிவ் ஆக ரீல்ஸ் பதிவிட்டு வருகிறார். புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவள்ளி பாட்டுக்கு க்யூட் ஆக நடனமாடி அதனை பதிவிட்டுள்ளார். ஸ்ரீவள்ளி பாட்டுக்கு பேரழகியாக ஜொலிக்கிறார் ஃபரீனா

எங்க பார்த்தாலும் என்னதான் கூப்பிடுறாங்க
காதுகுத்து... கல்யாணம்...கிரகப்பிரவேஷம் என எந்த விழா என்றாலும் என்னைத்தான் கூப்பிடுகிறார்கள்... பாப்புலர் ஃபிகராக இருந்தாலே இந்த பிராப்ளம்தான் என்றும் காமெடியாக பேசி பதிவிட்டுள்ளார். உங்களோட யாருமே போட்டி போட முடியாது என்று கூறியுள்ளனர் ரசிகர்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications