ரிசல்ட்டில் பாரதிக்கு ஏமாற்றம்.. வெண்பாவின் புது திட்டம்.. இந்த முறையும் இப்படியே முடிச்சிட்டாங்களே!
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலின் முதல் பாகம் முடிவடைய இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் வெண்பா புது பிளான் போட்டிருக்கிறார்.
பாரதி முழுவதுமாக நம்பிக் கொண்டிருந்த டெஸ்ட் ரிசல்ட் வழக்கம் போல இன்றும் ஏமாற்றத்தை கொடுத்து விட்டது.
மீண்டும் மீண்டும் ஏமாறும் பாரதிக்கு கண்ணம்மா கொடுத்த அதிரடி பலரும் எதிர்பார்த்ததுதான்.

கண்ணம்மா இருக்கும் போது இது நடக்காது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசொட்டில் ஆரம்பத்தில், சாந்தியின் கழுத்தில் அருவாமனையை வைத்து மிரட்டியதால் அவர் பாரதிக்கும் வெண்பாவிற்கும் போரூர் பக்கத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் தான் திருமணம் நடக்கப் போகிறது என்ற விஷயத்தை கூறுகிறார் .கட்டுண பொண்டாட்டி நான் இருக்கும் போது எப்படி வேறு ஒருத்தரோடு அவர் கல்யாணத்தை பண்ணுவார் என்று கண்ணம்மா கத்தி பேசிக் கொண்டிருக்கிறார். அத்தை கிளம்புங்க போகலாம் என எல்லோரையும் கூட்டிக்கொண்டு கோவிலுக்கு கிளம்புகிறார்.

மீண்டும் பழைய கண்ணம்மா
அடுத்த பக்கத்தில் கோவிலுக்கு வந்த வெண்பா பாரதியை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். எங்கும் காணாததால் பாரதிக்கு போன் பண்ணிக் கொண்டிருக்கிறார். பாரதி வெண்பாவின் போனை எடுக்காமல் கார் ஓட்டிக் கொண்டே வருகிறார். அதே நேரத்தில் கண்ணம்மாவும் வேறு காரில் கோவிலுக்கு வந்து கொண்டிருக்கிறார். உங்க பையனுக்கு எவ்வளவு தைரியம் பழைய கண்ணம்மாவை திரும்ப பார்க்க போறாரு, அவர் மட்டும் இல்லை எல்லோரும் தான் பார்க்கப் போறீங்க. அங்க உங்க புள்ளைக்கு சப்போர்ட் பண்ணி பேசாதீங்க என்று பாரதியின் அம்மாவை கண்ணம்மா மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து வரும் கார்கள்
கண்ணமாவை தொடர்ந்து இன்னொரு காரில் வந்து கொண்டிருந்த ஷர்மிளா, வெண்பா இப்படி பண்ணுவான் என்று கொஞ்சம் கூட நினைக்கலை என்று புலம்புகிறார். அவரோடு ரோஹித்தின் அம்மாவும் என் பிள்ளையின் நிலைமை இப்படி ஆகிவிட்டது, எல்லோரும் இனி கேவலமாக பேசுவார்கள் என்று புலம்பி கொண்டிருக்கிறார். இவர்களை தொடர்ந்து வந்த அடுத்த காரில் இருக்கும் ஹேமா மற்றும் லட்சுமி என இருவரும் அழுதபடி இருக்கின்றனர். அவர்களை அஞ்சலி சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார் .கோவிலில் வெண்பாவை அர்ச்சகர் கூப்பிடுவதாக ஒருவர் வந்து சொல்கிறார்.

மீண்டும் பாரதிக்கு கிடைத்த ஏமாற்றம்
கோவிலுக்கு வந்த பாரதி உள்ளே செல்லாமல் வெளியே காரில் அமர்ந்தபடி டெஸ்ட் குறித்து கேட்க போன் பண்ணுகிறார் .அப்போது அந்த டாக்டர் டெஸ்ட் ரிசல்ட் கிடைக்க இன்னும் இரண்டு நாட்கள் ஆகும். கடைசி நேரத்தில் மெஷினில் பிரச்சனை ஏற்பட்டு விட்டது என்று கூறுகிறார். இதனால் கடும் டென்ஷன் ஆன பாரதி திட்டிக் கொண்டிருக்கிறா.ர் அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே டாக்டர் போனை கட் பண்ணி விடுகிறார். இதனால் என்ன செய்வது என்றே தெரியாமல் பாரதி டென்ஷனாக நிற்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது. பாரதி மற்றும் வெண்பாவின் திருமணம் நடைபெறுமா? இல்லையா? என்று இந்த வாரம் இறுதியில் தான் தெரியும் போல, அதனால் தான் டெஸ்ட் ரிசல்ட் இன்னும் இரண்டு நாட்கள் என்று தள்ளி போட்டு விட்டார்கள்.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications