கண்ணம்மாவை சந்தித்த வெண்பா... மீண்டும் வில்லனாக மாறிய பாரதி.. கடைசியில் எதிர்பாராத சீரியல் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் நீதிமன்றத்தில் பாரதியும் கண்ணம்மாவும் வெண்பாவை சந்தித்து இருக்கின்றனர்.

வெண்பா கண்ணம்மாவிடம் மீண்டும் தன்னுடைய வில்லத்தனத்தை காட்டுகிறார்.

நீதிமன்றத்தில் விவாகரத்து கேசில் பாரதி கடைசியில் கண்ணம்மாவை பிரிவதாக கூறுகிறார்.

கலங்கும் சௌந்தர்யா

கலங்கும் சௌந்தர்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் சௌந்தர்யா குடும்பத்தோடு கோட்டுக்கு வந்து இறங்கி கோர்ட்டில் என்ன நடக்கப்போகிறது என குழம்பி கொண்டு இருக்கிறார். அப்போது கணபதி சௌந்தர்யாவுக்கு போன் போட்டு பாரதி இங்கிருந்து கிளம்பிவிட்டார். கூடவே கண்ணம்மாவும் வந்திருக்கிறார். இருவரும் அங்கே வந்து இறங்கி விட்டார்களா என போன் செய்தேன் ரீச் ஆகவில்லை என சொல்கிறார். பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக கோட்டிற்கு வந்து தனித்தனியாக பிரியப் போகிறார்களா? என்று சௌந்தர்யா கலங்கியபடியே கேட்க தளபதி அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது, பாரதி விவாகரத்துக்கு ஓகே சொல்ல மாட்டாரு கண்ணம்மா மனசு கண்டிப்பா மாறும் என கூறுகிறார்.

மனநல மருத்துவமனைக்கு செல்லும் வெண்பா

மனநல மருத்துவமனைக்கு செல்லும் வெண்பா

பிறகு பாரதி அங்கே வந்து இறங்கியதும் கண்ணம்மா உன் கூட வரதாக சொன்னாங்க, அவ வரலையா என கேட்க? சிட்டிக்கு வெளியே இறங்கிட்டா என பாரதி சொல்லிக் கொண்டிருக்கும்போது கண்ணம்மா அங்கே ஆட்டோவில் வந்து இறங்குகிறார். நான் இங்கே இருந்தால் கண்ணம்மா உங்களிடம் பேச மாட்டார் என்று பாரதி வக்கீலோடு சென்று விடுகிறார். அதே நேரத்தில் வெண்பா மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லி அவரை மருத்துவமனையில் அனுமதி செய்து சிகிச்சை அளிக்க கோட்டு உத்தரவு அளிக்கிறது.

கண்ணம்மாவின் பதிலடி

கண்ணம்மாவின் பதிலடி

பிறகு கண்ணம்மா வந்ததும் சௌந்தர்யா தயவு செய்து விவாகரத்து வேணும்னு மட்டும் சொல்லிடாத, நீ எவ்வளவு நாள் வேணும்னாலும் டைம் எடுத்துக்க ஆனால் பாரதியோடு சேர்ந்து வாழ் என சொல்ல உறுதியான மனநிலை இல்லாதவரோடு சேர்ந்து வாழ முடியாது என வற்புறுத்தாதீங்க என சொல்லி கண்ணம்மா உள்ளே சென்று விடுகிறார். உள்ளே போகும்போது வெண்பா கண்ணமாவை பார்த்து போயும் போயும் என்கிட்ட தோத்துட்ட என நக்கல் அடிக்க, கண்ணம்மா விவாகரத்து வாங்கி பிரிய போவதில் உறுதியாக இருப்பதாக கூறுகிறார். அதுமட்டுமல்லாமல
நான் இனி சந்தோஷமாக எனக்கு பிடித்த வாழ்க்கையில் வாழப் போகிறேன். ஆனால் நீ தான் வாழ்க்கையில் தோற்றுவிட்டா உன்னுடைய நல்ல வாழ்க்கையை இழந்து விட்டு தனியாக இருக்கிறாய் அதனால் நீ தான் தோர்த்துட்டா என்று கண்ணம்மா கூறுகிறார்.

பாரதியின் எதிர்பாராத முடிவு

பாரதியின் எதிர்பாராத முடிவு

கண்ணம்மா கிளம்பியதும் அங்கே பாரதி வர வெண்பா பாரதியை பார்த்து பேச, அவர் கோபப்பட்டு திட்டி விட்டு உள்ளே செல்கிறார். பிறகு கோட்டில் நீதிபதி பாரதி மற்றும் கண்ணாமாவிடம் ஆறு மாசம் சேர்ந்து வாழ்ந்தீங்க, இப்போ உங்களுடைய மனநிலை என்ன என கேட்க கண்ணம்மா எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம். விடுதலை தான் வேண்டும் என்று எனக்கு விவாகரத்து கொடுத்து விடுங்க என கண்ணம்மா உறுதியாக சொல்கிறார். இதை கேட்டு சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். நீதிபதி பாரதி கேட்க அவர் அமைதியாகவே இருக்க கண்ணம்மா நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு எனக்கு தெரியும் வாய்தா மேல வாய்தா போட்டு இழுக்க தானே நினைப்பீங்க என மனதிற்குள் நினைக்க, பாரதி எனக்கும் விவாகரத்து வாங்குவதில் தான் விருப்பம் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+