பாரதியின் திருமணத்தை நிறுத்திய கண்ணம்மா..காண்டான வெண்பா எடுத்த முடிவு.. சூப்பராக முடிச்சிட்டாங்க
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று பாரதி வெண்பாவின் திருமணத்தை கண்ணம்மா தடுத்து நிறுத்தி இருக்கிறார்.
பல பேர் முன்னிலையில் பாரதியை குடும்பமே ரவுண்டு கட்டி திட்டி தீர்த்து இருக்கின்றனர்.
திருமணம் நின்று விட்டதால் வெண்பா எடுத்த முடிவுதான் இந்த சீசனின் சிறப்பான முடிவாக இருக்கிறது.

குழப்பத்தில் இருக்கும் பாரதி
பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில், பாரதி டி என் ஏ டெஸ்ட் ரிசல்ட் வர இன்னும் இரண்டு நாள் ஆகும் என்பதால் இப்போதைக்கு வெண்பா கழுத்தில் தாலி கட்ட வேண்டாம் என முடிவெடுத்து அங்கிருந்து கிளம்ப முயற்சி செய்து கார் கதவை திறந்து கொண்டிருக்கிறார். அப்போது வெண்பா பாரதியை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு ஏன் பாரதி வெளியே இருக்கிற வா முகூர்த்த நேரத்திற்கு டைம் ஆகுது என சொல்லி பாரதியை கூப்பிடுகிறார். அதற்கு பாரதி திருமணம் இப்போது வேண்டாம் வெண்பா இரண்டு நாள் கழித்து வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார். அதற்கு முடியாது இன்று தாலி கட்டலைன்னா நான் செத்து போயிடுவேன் என்று மிரட்டுகிறார்.

நிலைமை புரியாமல் ஐயர் செய்த செயல்
பாரதியின் கையைப் பிடித்து வெண்பா உள்ளே இழுத்து செல்கிறார். அங்கே ஐயரிடம் இவர் தான் மாப்பிள்ளை என்று அறிமுகம் செய்கிறார். ஐயர் உங்கள் இருவருக்கும் ஜோடி பொருத்தம் அழகாக இருக்கிறது என்று கூறி மாலையை எடுத்து வந்து கொடுக்கிறார். பாரதி தயக்கத்தோடு நிற்கிறார். இப்போது திருமணம் வேண்டாம் என்று அவருடைய உள்மனது சொல்லிக் கொண்டே இருக்கிறது. வெண்பா மாலையை எடுத்து கையில் கொடுத்து போட வைக்கிறார். அடுத்து தாலியை கையில் எடுத்து என்ன கொடுமை பார்த்தியா? எனக்கு தாலி எடுத்து தர கூட யாரும் இல்லை. என்னுடைய திருமணத்திற்கு நான் தான் தாலி எடுத்து தர வேண்டும். இந்தா பாரதி கட்டு என்று பாரதியின் கையில் கொடுக்கிறார்.

தாலிக்கு விளக்கம் கொடுத்த கண்ணம்மா
பாரதி வேண்டா வெறுப்பாக கையில் தாலியை பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கே கண்ணம்மா சக குடும்பத்தோடு வந்து சேர்கிறார். குடும்பத்தை பார்த்ததும் வெண்பா தாலியை கட்டு என பாரதியை வற்புறுத்திக் கொண்டிருக்கிறார். பாரதி அப்படியே அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார் .கட்டுன பொண்டாட்டி நான் இருக்கும்போது இன்னொருத்தி கழுத்துல?தாலி கட்டுவியா? என இருவர் கழுத்திலும் இருந்த மாலைகளையெல்லாம் கண்ணம்மா பிய்த்து எறிகிறார். வெண்பாவின் கழுத்தில் பளார் என்று ஒரு அடி வைத்து விடுகிறார் .நீ கட்டுன தாலியை நான் எதுக்கு இப்ப வரைக்கும் சுமந்துகிட்டு இருக்கிறேன் தெரியுமா? நீ எப்பவாவது மனசு மாறி வருவ, அப்போ ஏத்துக்கணும் என்று தான் நான் இப்படி இருக்கிறேன் என்று பாரதியை பார்த்து கண்ணம்மா திட்டுகிறார்.

குடும்பத்தினரின் கேள்வி
பொண்டாட்டி உயிரோட இருக்கும் போது இன்னொருத்தி கழுத்துல தாலிக்கட்டுனா சட்டம் என்ன சொல்லுது தெரியுமா? நீ மட்டும் தாலியை கட்டி இருந்தா? இந்நேரம் இழுத்துட்டு போய் போலீஸ் ஸ்டேஷன்ல விட்டு இருப்பேன். தைரியமான ஆளா இருந்தா நீ இப்போ தாலியை கட்டு என்று பாரதியிடம் கண்ணம்மா கூறுகிறார். பாரதி தலைகுனிந்து நிற்கிறார். பின்னர் பாரதியின் அம்மா, அப்பா, அகிலன் என அனைவரும் கேள்வி கேட்டு கொண்டிருக்கின்றனர். கடைசியில் பாரதியின் அம்மா எதுக்காக இந்த வெண்பா கழுத்துல தாலி கட்ட வந்த, பதில் சொல்லு என கேட்கிறார். அதற்கு பாரதி பதில் சொல்லாமல் தவிக்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது. நாளை பாரதியின் முடிவு தெரியவரும். அதுபோல கடைசி நேரத்தில் திருமணம் மீண்டும் நின்றதால் தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு காரணம் பாரதி தான் என்று வெண்பா கூறுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications